This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
கண்களில் வடியும் கண்ணீர் துளிகளின் வழியாக இக்கதையை எழுதுகிறேன். நம்மை படைத்த இறைவன் ஒரு அரக்கன். அதனால், தான் நமக்கு உணர்வுகள் என்ற சாபத்தை கொடுத்துள்ளான். நம்மை இந்த பூலோகத்தில் படைத்து காதல் எனும் நோயால் அவதிக்குள்ளாக்குகிறான்.
யூவன் சங்கர் ராஜா-வின் பாடல் வரி ஒன்று “நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு”. ஆம், அது சத்தியமான உண்மை. நமது நினைவுகளை அழிக்க முடியாது. நாம் இறந்தாலும் பல ஜென்மஙகளுக்கு அது பின்தொடர்ந்தே வரும்.
ஐய்யோ, என்னவளின் நினைவுகள் இன்னும் எத்தனை ஜென்மங்களுங்கு என்னை பின் தொடருமோ என்று தெரியவில்லை. உணர்வுகளால் அவதிப்பட்டுக்கொண்டு சித்திரவதையில் சிக்கித்தவிக்கும் மனிதர்களுக்கு மத்தியில் எனக்கு “உணர்வுகள் அற்ற பிண்டம்” என்ற சாப விமோசனத்தை அருளிவிட்டாள் என் அழகு தேவதை.
மாலைப்பொழுதில் கதிரவன் தனது வேலை நேரம் முடிந்த படியால் ஓய்வு எடுக்க சென்று விட்டான். தனது காதலனை காண தவமாய் காத்துக்கிடக்கும் காதலியை போல “பூமி” என்ற காதலனை காண “நிலா” என்ற காதலி காலை முழுவதும் தவமாய் காத்துக்கிடந்தாள்.
தனது காதலனை காண நேரம் வந்துவிட்டதை உணர்ந்து பல கோடான கோடி நட்சத்திரங்களை கடந்து தன் காதலனை காண ஓடோடுடி வந்தாள் நிலா. என்னோவோ! தன் காதலனை காணவும் வெட்கம் வந்து விட்டது போல இன்று அவள் முகம் சிவந்து இருந்தது.
இப்படி பூமியை உருகி உருகி காதலிக்கும் நிலவைப்போல் நமக்கு ஒரு காதலி கிடைத்தால் எப்படி இருக்கும் என்று நிலவின் அழகில் மயங்கி இயற்கைத்தாயின் அற்புதப்படைப்பை இரசித்துக்கொண்டு இருந்தேன் இரவு 7 மணியளவில் எனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு.
அப்போது திடீரென்று இறைவனே இசைக்கும் ஒலி போல் ஒரு உயிரை உருக்கும் சத்தம் வாருங்கள் கூர்ந்து கவனிப்போம் அது என்னவென்று ஆஹா! இது “மெளனம் பேசியதே BGM” ஆமாம் இது எங்கே இருந்து ஒலிக்கிறது. இது கீழே இருந்து அந்த பாடல் ஒலி வருகிறது.
ஐய்யோ! மறந்து விட்டேன் அது எனது செல்போனின் ரிங் டோன். எனது பேண்ட் பாக்கெட்டிற்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நிலவின் அழகில் மெய் மறந்து விட்டேன். வாருங்கள், அது யார் ஃபோன் செய்கிறார்கள் என்று பார்ப்போம். அது என்னுடன் வேலை பார்க்கும் நபர் இளங்கோ.
இளங்கோ: Hello Ravana, I’m going tell you something very very important.
நான்: இளங்கோ தமிழ்-லயே பேசலாமா?
இளங்கோ: சாரி இராவணா, இந்த கார்ப்பரேட்-ல வேலை பார்த்தாலே நம்ம தாய் மொழி மறந்துரும்.
நான்: தமிழ்-ல பேசினா ரொம்ப வருடம் உயிர் வாழலாம். அறிவியல் ஆதாரப்படி நீருபணம் ஆன உண்மை. நம்ம பாதி உசுர ஆஃபிஸ்-ல வாங்கிராங்க. தமிழ்-ல பேசியாச்சும் நம்ம உயிரோட ஆயுள கொஞ்ச நாள் நீட்டி வச்சுப்போம். அப்போதா ஹவுஸிங் லோன், EMI-ல அடைக்க முடியும்.
இளங்கோ: (ஹாஹாஹா. ) உன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தாலே போதும் ஆயுள் அதிகமாயிரும். சரி, விசயத்துக்கு வரேன். நாளைக்கு Intern ஒரு பொண்ணு வரா. Highly recommended person வேற. நீ தான் அந்த பொண்ணுக்கு இன்சார்ச் நாளைக்கு இருந்து. நீ தான் அந்த பொண்ணுக்கு ட்ரெயினிங் தரணும்.
நான்: நான் எதுக்கு இளங்கோ??. வேற யாரும் இல்லையா?. என்னைவிட நிறைய பேர் திறமையோட இருக்காங்க-ல?
இளங்கோ: இருக்காங்க, பட் எல்லாம் மூடு தலைக்கேறி சூடூ புடுச்சு-ல திரியுறாங்க.
நான்: ஏன்? வேற பொண்ணுங்க இருப்பாங்கல.
இளங்கோ: அட நீ வேற, அதுல கொஞ்சம் படுத்து ப்ரோமோஷன் வாங்கும், இன்னும் கொஞ்சம் குடுச்சு கூத்தடிக்கும். ஒரு சிலது பேசக்கூட பயப்படும். இந்த பொண்ணு நம்ம கம்பெனி Founder க்கு வேண்டிய பொண்ணு வேற.
நான்: சரி, என்ன ஏன் தேர்வு செஞ்சீங்க.
இளங்கோ: நீ தான் ஆஃபீஸ்-லயே ஜென்டில்மேன். எல்லாருக்கும் ரெஸ்பெக்ட் குடுப்ப. கிளீனர்-ல இருந்து CEOவரைக்கும் எல்லாருக்கும் மரியாதை குடுப்ப. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. செம்ம ஜாலியா இருப்ப. ரொம்ப அமைதியா இருப்ப, பொறுமையாவும் இருப்ப.
இவ்வளவு ஏன்? நான் ஒரு ஓரினச்சேர்க்கை பண்ணுறவன். இது ஆஃபிஸ்-ல எல்லாருக்கும் தெரியும். எல்லாரும் என்ன அசிங்க, அசிங்கமா வம்புலுப்பாங்க, என்கிட்ட நின்னு பேசவே சங்கடப்படுவாங்க. ஆனா, நீ தான் என்ன மனுஷனா பாத்த. எனக்கு மரியாதை கொடுத்து பேசின.
என் அப்பா, அம்மா கூட எனக்கு இவ்வளவு மரியாதை கொடுத்தது இல்லை. எனக்கே உன் மேல லவ் வந்துச்சு, உன் கூட செக்ஸ் வச்சுக்கனும் ஆச பட்டேன். அத உன்கிட்ட சொன்னேன். ஆனா! நீ டிசென்ட்-ஆ இளங்கோ நான் உங்கள கூடப்பிறந்த அண்ணனா பாக்குறேன்-னு சொல்லிட்ட. அதுவும் இல்லாம ஹேண்டஸம் பாய் நீ தான் ஆஃபீஸ்-லயே. இதுக்கு மேல என்ன சொல்ல நான்.
நான்: உங்க புகழ்ச்சி-ல என் உடம்பு பூரிச்சு போச்சு. நான் அந்த பொண்ண பாத்துக்குறேன். அந்த பொண்ணு பெயர் என்ன?
இளங்கோ: நீ நாளைக்கு அந்த பொண்ண பார்த்து அந்த பொண்ண கேட்டே தெரிஞ்சுக்கோ. சஸ்பென்ஸ்.
நான்: ஹலோ, ஹலோ. ????
(ஃபோன் கட் செய்யப்பட்டது).
உங்கள் மனதில் நினைப்பது எனக்கு கேட்கிறது. ஓரினச்சேர்க்கையாளருடன் தொடர்பு வைத்து இருக்கிறான். ஒருவேளை இவனும் ஓரினச்சேர்க்கையாளனாக இருக்க வாய்ப்பு உள்ளதோ என்று. நான் ஓரினச்சேர்க்கையாளன் அல்ல. அவர்களும் மனிதர்கள் தானே.
நம்மை போல் தான் அவர்களும் உணவு உண்கிறார்கள். நம்மைப்போல் தான் அவர்களும் உள்ளார்கள். ஆனால், தன் பாலினத்தின் மீது அவர்கள் காதல் கொள்கிறார்கள். மனிதன் ஆதியில் பரிணாமமாக ஆரம்பித்த காலக்கட்டத்தில். மிகக்குறுகிய அளவிலேயே மனித இனம் இருந்தது.
நமது மனித இனத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக ஆண், பெண், தாய், தந்தை, அக்கா, தங்கை என பாரபட்சம் பார்க்காமல் பார்ப்போர் அனைவரையும் புணர்ந்தார்கள். பிறகு தான் சற்று நாகரீகம் உருவாகி நாகரீகம் வளர்ந்தது. ஆதியில் இருக்கும் மரபணுக்கள் நமக்கு அப்படியே கடத்தப்படுகிறது. அதனால் தான் ஓரினச்சேர்க்கையாளர்கள், இற்செஸ்ட் இருக்கிறார்களே தவிர.
ஓரினச்சேர்க்கை என்பது புதிய விசயம் அல்ல அது கற்காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருக்க கூடிய ஒன்று. ஒரு சிலருக்கு ஓரினச்சேர்க்கை செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் அதிகமாக இருப்பதற்கு காரணம் கற்காலத்தில் நம் முன்னோர்கள் செய்த செயல் தான்.
இதற்கு யாரும் தவறாக முடியாது. அவர்களும் மனிதர்கள் தான். அவர்களையும் மனிதர்களாக பாருங்கள். சக மனிதனாக அவர்களையும் பாருங்கள் அறுவறுப்பு கொள்ளாதீர்கள். இது ஆண், பெண் என இரு ஓரினசேர்க்கையாளர்களுக்கும் பொருந்தும்.
இரவு 10 மணிக்கு தோசை சாப்பிட்டுவிட்டு தூக்கத்தில் ஆழ்ந்தேன். கனவு வந்தது. அதில் மருத்துவமனையில் சுயநினைவின்றி படுத்துக் கிடந்தேன். அப்போது மாஸ்க் அணிந்து கொண்டு பெண் டாக்டர் உருவம் ஒன்று வந்து என் கண் முன் தோன்றியது.
அவள் முகத்தில் பதற்றம் நன்றாக தெரிந்தது. அவள் என்னை எழுப்ப முயற்ச்சி செய்கிறாள். என்னை உழுக்குகிறாள். அவளின் கூரிய கண்கள் அந்த ஆபிரேசன் பெட்டின் மேல் உள்ள விளக்கின் ஒளியில் மின்னியது. அவள் தனது கைகளை எடுத்து மாஸ்க்கை அவிழ்க்க போனால்.
நாளை, நாளை, நாளை, என்று இன்றை இழக்காதே, நீ இன்றே இழக்காதே நீ இன்றை இழக்காதே என்று எனது செல்போனின் அலராம் ட்யூன் அடித்தது. கனவு கலைந்து விட்டது. செல்லை எடுத்து மணியை பார்த்தேன் 5 மணி. எழுந்து காலை கடன்களை முடித்தேன்.
அந்த கண்கள் என் உள்ளத்தில் நன்றாக பதிந்து விட்டது. கடவுளே, சற்று நேரம் தள்ளி இந்த அலாரம் அடித்திருக்க கூடாது. அந்த பெண்ணின் முகத்தை பார்த்து இருப்பேனே சே. உடற்பயிற்சி, தியானம் செய்து விட்டு காலை உணவு முடித்து விட்டு ஆஃபிஸ் ஸிற்கு சரியாக 9 மணிக்கு போய் சேர்ந்தேன்.
எனக்கு மூன்றாம் தளத்தில் வேலை. ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் ஆக பணியில் இருக்கிறேன். லிஃப்ட் -ல் ஏறினேன். ஆப்ரேட்டர் சக்தி அண்ணன் இருந்தார். அவருக்கு வயது 50. திருநெல்வேலி-யை சேர்ந்தவர்
சக்தி: குட் மார்னிங் இராவணா! சுவாதி கொஞ்சம் இரு அவன் வரட்டும்.
சுவாதி: ஓகே சக்தி அங்கிள்.
நான்: குட்மார்னிங் அண்ணாச்சி! குட் மார்னிங் சுவாதி டியர்.
சுவாதி: குட்மார்னிங் டா டார்க் சாக்லேட்.
சக்தி: என்னவே சாப்பிட இன்னக்கி?
நான்: இடியாப்பம் அண்ணாச்சி.
சக்தி: ஆஹா, எப்படி இருந்துச்சி இராவணா?.
நான்: நானே சமைச்சு நானே சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு அண்ணாச்சி.
சக்தி: அதாவே காலகாலத்துல கண்ணாலம் பண்ணணும்-னு சொல்லுறது.
நான்: என்ன பண்ணுறது உங்களுக்கு தான் பொண்ணு இல்லாம போச்சே, இருந்த உடனே கல்யாணம் பண்ணிருப்பேன்.
சக்தி: அத ஏவே நியாபக படுத்துற, எனக்கு பொட்ட புள்ள பிறக்காம போச்சுன்னு இப்ப ஏக்கமா இருக்குவே. பைய தான் வேணும்-னு அடம்பிடுச்சு பெத்தேன். முதல் குழந்தை கருவில் இருக்கும் போதே டாக்டர் கிட்ட காச கொடுத்து பையலா, பொட்டையா-னு பாத்தேன்.
பொட்டப்புள்ள-னு தெரிஞ்சதும் கருவ கலைக்க சொல்லிட்டேன்வே. அடுத்து ஒரு பைய பிறந்தான். என் பொஞ்சாதி காச நோய் வந்து செத்து போய்டா அவன் பிறக்கவும். நான் தான் என் பையல வளர்த்தேன். இப்ப பாரு! அந்த சவுட்டு மூதிக்கு ஒரு குடும்பம் வரவும் என்ன துரத்தி விட்டான்வே.
இதுவே பொட்ட புள்ளையா இருந்தா இப்படி பண்ணிருக்குமா லே?இப்ப இந்த தள்ளாத வயசுலையும், சோலிக்கு வரதா போச்சு. இது போக சுகர், பிரசர் வேற. நான் பண்ண பாவத்துக்கு-ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அது அழியாதுவே. அந்த பாவம் தான் என்ன இப்படி பாட படுத்துதுவே. ஆமா! இது எத்தனாவது தடவ உன்கிட்ட சொல்லுதேன்.
நான்: 427 வது தடவ அண்ணாச்சி. அட, கடந்து போறது தான்வாழ்க்கை அண்ணாச்சி. நான்லா அனாதை இல்லத்தில் தான் வளர்ந்தேன். எனக்கு என் அப்பா, அம்மா யாருனு கூட தெரியாது. இப்பயும் ஜம்முனு தான இருக்கிங்க இந்த நிக்குறால சுவாதி இவள வேணா இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கோங்க.
சுவாதி: எனக்கு ஓகே தான் உங்களுக்கு ஓகேவா அங்கிள்.
நான்: அண்ணாச்சி க்கு வெக்கம் வந்துருச்சு பாரு.
சக்தி:அட போமா தா நீ வேற! எனக்கு பதிலாக இந்த இராவணன் பயல கல்யாணம் பண்ணிக்கிறவ.
சுவாதி: எங்க அங்கிள், நான் என்ன பண்ண மாட்டேன் அ சொல்லுறேன். யாருக்குமே மசிய மாட்டிங்குறான்.
நான்: அண்ணாச்சி, நம்ம பேச்சுவார்தைய அப்புறம் பாத்துக்கலாம் இடம் வந்துருச்சு. பாய் அண்ணாச்சி.
சுவாதி: பாய் அங்கிள்.
சக்தி: சரி மக்கா! சோலி முடியவும் பாப்போம்.
சுவாதி-யை பற்றி சொல்ல வேண்டுமல்லவா. அவள் ஒரு தூய உள்ளம் படைத்தவள். யார் மீதும் பொறாமை கொள்ள மாட்டாள். யாரை பற்றியும் புறம் கூற மாட்டாள். ஆனால், இவளுக்கு திருமணம் ஆகி 1 மாதத்திலேயே விவாகரத்து ஆகி விட்டது.
இவளை பற்றி புறம் பேசுவதே இந்த ஆஃபிஸ் பெண்கள் பலருக்கு வேலை. இவளிடம் அனுதாபம் காட்டினால் இவளுக்கு பிடிக்காது. நான் நடந்து முடிந்ததை பற்றி யோசிக்கும் ஆள் அல்ல. இந்த நிமிடம், இந்த நொடியில் வாழ்வேன். சுவாதி மிகவும் அழகாக இருப்பாள்.
இவளிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் உண்டு. சரக்கடித்து மட்டையாகி விடுவாள். பாவம், அவள் வலி அவளுக்கு. தாய், தந்தை இவளை வீட்டிற்குள்ளேயே வரக்கூடாது என்று துரத்தி விட்டனர். இங்கே வந்து தங்கி வேலை பார்க்கிறாள்.
இவளை மடக்க பல ஆண்கள் ஆஃபிஸ்-ல் பல ஆண்கள் முயற்ச்சிக்கின்றனர். வெறும் உடலுறவு கொள்வதற்காக மட்டும். ஆனால், நான் அப்படிப்பட்டவன் இல்லை என்று உங்களுக்கு தெரியும். உள்ளே நுழைந்தோம். இளங்கோக்கு முன் ஒரு பெண் நின்று பேசிக் கொண்டு இருந்தாள்.
இளங்கோ என்னை கை காண்பித்தார். அவள் மெல்ல திரும்பினாள். என் கனவில் வந்த “அதே கண்கள்”. இந்த சுழலும் பால் வீதி மண்டலமே நின்றது. மனிதன் கடினப் பட்டு 20, 000 ஆண்டுகளாக வளர்த்த நாகரீகம் மண்ணோடு மண் ஆன தருணம்.
என் இதயம் துடிப்பதை நிறுத்தியது. உடலும், அறிவும் செயலற்று போன தருணம். எனது ஆன்மா என்னிடம் பேச தொடங்கிய தருணம். காதல் 4 வகைப்படும். 1. பார்வைக்காதல். 2. உள்ளக்காதல். 3. உடல்காதல். 4. ஆத்மார்த்தமான காதல்.
நான் தற்போது இருப்பது 1ம் நிலை பார்வைக்காதல். அவள் என்னிடம் நெருங்கி வந்தாள். சுவாதி என்னை ஒரு உளுக்கு உளுக்கி சுய நினைவுக்கு கொண்டு வந்தாள். சுவாதியிடம் கை கொடுத்தாள். தனது தேன் சிந்தும் செவ்விதழ்களை திறந்து தனது முத்திற்க்கும் மேலான பற்களால் ஒரு புண்ணகை புரிந்து ஹாய் என் பெயர் பைரவி.
என்னிடம் கையை நீட்டினாள். நான் வணக்கம் வைத்தேன். நான் இராவணன் என்றேன். அவள் நான் பைரவி என்றாள். இளங்கோ குறிக்கிட்டார். பைரவி, இராவணன் தான் உங்களுக்கு ட்ரெய்னர். சுவாதியும், இளங்கோவும் சென்றார்கள். நானும், பைரவியும் நின்று கொண்டு இருந்தோம். அவளின் கண்களை பார்த்து மெய் சிலிர்த்து நின்றுகொண்டு இருந்தேன்.
பைரவி: ஹலோ மிஸ்டர் இராவணன். பாத்துக்கிட்டே இருக்கிங்க பேச மாட்டிங்களா.
நான்: உங்கள பார்த்ததும் நாக்குக்கு பேசுற சக்தி போச்சு.
பைரவி: இப்ப மட்டும் எப்படி பேசுதா, உங்க நாக்கு?
நான்: நாக்கு பேசல, என் இதயம் பேசுது.
பைரவி: உங்கள என்னமோ ஜெண்டில்மேன் -னு சொன்னாரு இளங்கோ, நீங்க இப்படி வலியுறிங்க.
நான்: தேவதைகளுக்கு முன்னால், எந்த இரும்பு இதயம் படைத்தவனும் இலகிருவான். உங்கள பார்த்ததும் இந்த சோலார் சிஸ்டம் மே நின்றது போல ஒரு உணர்வு.
பைரவி: இருக்கும் இருக்கும். நீங்க நல்லா பேசுறீங்க. இப்படியே பேசிகிட்டே இருக்க போறிங்களா இல்ல.
நான்: ஐ ம் ரியலி சாரி, உங்க கண்ணு-ல இருக்க மின்சாரம் என்ன அப்புடியே உறைய வச்சுருச்சு. வாங்க எல்லாத்த பத்தியும் சொல்லுறேன்.
பைரவியிடம், என் கவிதைகள் கலந்து வேலைகளை பற்றி எடுத்துரைத்தேன். அவளும் என்னிடம் நன்றாக பழகி விட்டாள். நான், இளங்கோ, சுவாதி, பைரவி நால்வரும் மதிய உணவு உண்டோம். சாயங்காலம் ஆனது. CEO பிராகாஷ் பணியாளர் அனைவரையும் ஒன்றாக கூட்டினார். மைக்கை எடுத்து பேச தொடங்கினார்.
பிராகஷ்: எனக்கு அமெரிக்கா விற்கு பிரோமோசன் கிடைத்து விட்டது. இனிமேல் பைரவி தான் உங்கள் புது CEO. நம்ம கம்பெனி founder ஓட பொண்ணு. சீக்ரெட் எண்ட்ரி இன்னைக்கு கொடுத்துருக்காங்க.
அனைவரும் வாயடைத்து நின்றோம். CEO கூடவா நம்ம இவ்வளவு நேரம் Romance பண்ணோம். அதுவும் Founder ஓட பொண்ணு வேற. நம்ம சீட் கிழுஞ்சது என்று எண்ணினேன்.
தொடரும்.
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000