This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
கால தாமதத்திற்கு வருந்துகிறேன். இந்த கதையின் முதல் இரண்டு பாகங்களை வாசிக்காத வாசகர்கள் அதனை படித்து விட்டு வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
என்னை பற்றிய உண்மைகளை அவளிடம் கூறியதும், எதுவும் பேசாமல் போனை கட் செய்தாள். நான் மீண்டும் மீண்டும் அவளுக்கு கால் செய்தேன், சிறிது நேரத்திற்கு பிறகு தான் அவள் பேசினாள். அவள் அழுதுக் கொண்டே கோபமாக என்னை திட்டி விட்டு மீண்டும் கட் செய்தாள். நானும் விடாமல் மீண்டும் மீண்டும் அவளிடம் பேசினேன். அவளுடைய கோபம் குறையும் வரை அவளிடம் திட்டு வாங்கினேன். அதன் பிறகு என்னுடைய காதலை பற்றி அவளிடம் கூறி அவளுடைய மனதை மாற்ற முயற்சி செய்தேன்.
நான்கு நாட்களாக அவளிடம் கெஞ்சி கூத்தாடி மன்னிப்பு கேட்க கடைசியாக அவள் மனமிறங்கினாள். ஆனால் பழையபடி நமக்குள் எந்த காதலும், உறவும் கிடையாது என்று உறுதியாக கூறினாள். நானும் வேறு வழி இல்லாமல் சரி என்று கூறி மீண்டும் முதலில் இருந்து துவங்கினோம்.
இந்த முறை எங்களது நெருக்கம் அதிகரிக்க அதிக காலம் எடுத்துக் கொள்ளவில்லை. இரண்டு வாரங்களுக்குள் டபுள் மீனிங்கில் பேசுவது, அடிக்கடி வீடியோ கால் பேசுவது என்ற அளவில் நட்பு கூடியது. ஆனால் இது நட்பாக மட்டும் இருப்பது எனக்கு சங்கடமாக இருந்தது. ஏதும் விபரீத முடிவு எடுத்து மீண்டும் பிரச்சினை வந்துவிட கூடாது என அமைதியாக இருந்தேன். எனது பொறுமைக்கு பலன் சீக்கிரமே கிடைத்தது.
சுபா ஒரு சின்ன வேலையாக திருநெல்வேலி வருவதாகவும், காலை வந்துவிட்டு உடனே மாலை பெங்களூர் செல்ல வேண்டும் என்று கூறினாள். அவளது உறவினர் ஊரில் இருந்து சரியான நேரத்திற்கு பேருந்து கிடையாது, அதனால் அவளை பைக்கில் அங்கிருந்து ரயில் நிலையம் வரை கூட்டிச் செல்ல முடியுமா என்று கேட்டாள்.
நானும் உடனே சரி என்று கூறினேன். பின்பு அவள் வரும் நாள் மற்றும் நான் எப்போது எங்கே வர வேண்டும் என்று பேசி முடிவு செய்தோம். எனக்கோ அளவு கடந்த மகிழ்ச்சி, சுபாவை முதல் முறையாக நேரில் பார்க்க போகிறேன், அது மட்டும் இல்லாமல் அவள் என்னுடைய பைக்கில் என் பின்னால் அமர்ந்து பயணிக்க போகிறாள் என்று நினைக்கும் போது எனக்குள் என்னன்னவோ நடந்தது.
நான் அவளை சந்திக்கும் நாளுக்காக காத்துக் கொண்டு இருந்தேன், அந்த நாளும் நெருங்கியது. சுபா பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் பயணத்தை தொடங்கினாள். பயணம் முழுவதும் அவள் என்னிடம் பேசிக் கொண்டு வந்தாள்.
சுபா : டேய் சரியா 1 மணிக்கு அங்க வந்து என்ன பிக்கப் பண்ணிக்கோ. மறந்திடாத, அப்புறம் நான் டிரெய்ன புடிக்க முடியாது.
நான் : அதல்லாம் நான் கரெக்டா வந்திடுவேன். சரி நீ திருநெல்வேலியில டிரெய்ன் ஏற போறியா இல்லை கோவில்பட்டி ல ஏற போறியா.
சுபா : திருநெல்வேலி தான்டா பக்கம், அங்கயே போகலாம்.
நான் : இல்ல சுபா, திருநெல்வேலி ல இருந்து உனக்கு டேரைக்ட் டிரெய்ன் இல்ல, நீ மணியாச்சி போய் டிரெய்ன் மாறனும் அதான் கேட்டேன்.
சுபா : அப்படியா, சரி என்ன பண்ணலாம் சொல்லு.
நான் : எனக்கு தெரிஞ்சி நீ கோவில்பட்டி போய் போறது தான் பெட்டர். ஒரே டிரெய்ன் சோ நோ பிராப்ளம்.
சுபா : (சிறிது நேர யோசனைக்கு பிறகு) சரி டா, அப்டினா நீ தான் அங்க என்ன டிராப் பண்ணணும். ஓகேவா.
நான் : எனக்கு நோ பிராப்ளம், எனக்கு சந்தோஷம் தான்.
சுபா : (மெல்லிய சிரிப்புடன்) சரி சரி, ரொம்ப நேரம் பேசிட்டு இருக்குறோம், சோ நான் கொஞ்சம் தூங்குறேன், அப்ப தான் நாளைக்கு அலைய முடியும். குட் நைட்.
நான் : குட் நைட்.
கோவில்பட்டியில் ரயில் ஏற சொன்னதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. அப்போது தான் சுபா வுடன் அதிக நேரம் செலவிட முடியும். திருநெல்வேலி சென்றாள் 4 மணிக்கு அவள் ரயில் ஏறி சென்று விடுவாள், ஆனால் கோவில்பட்டியில் 6 மணிக்கு தான் ரயில். அதுமட்டுமல்ல கோவில்பட்டி செல்ல கூடுதலாக ஒரு மணி நேரம் ஆகும். அதனால் 1 மணி முதல் 6 மணி வரை நான் சுபாவிடம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து தான் இப்படி கூறினேன்.
எனக்கு இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. நாளை என்ன செய்ய வேண்டும், என்ன உடை மற்றும் எந்த பைக் யாரிடம் வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். எப்படியோ காலை விடிந்தது, நான் எழுந்து என் வேலைகளை முடித்து விட்டு என் சுபாவை பார்க்க கிளம்பினேன். நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் வெள்ளை நிற குர்தா அணிந்து கொண்டேன். பின் 11.30 க்கு என் max100 பைக்கை எடுத்து கிளம்பினேன்.
எப்படியும் இரண்டு மணிநேரம் அவள் பைக்கில் அமர்ந்து வர வேண்டும். அவ்வளவு நேரம் உட்கார்ந்து வருவதால் அவளுடைய பின்புறம் வலிக்க கூடாது என்பதால் என்னுடைய பைக்கை தேர்வு செய்தேன். பிறகு அவள் கூறிய இடத்திற்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தேன்.
பிறகு என் பைக்கை நிறுத்தி விட்டு சுபாவிற்கு கால் செய்து எங்கே இருக்கிறாள் என்று விசாரித்தேன். அவள் பஸ் ஸ்டாண்டில் இருப்பதாக கூற நான் அவளிடம் பேசிக் கொண்டே அவளை தேடினேன். அப்போது ஒரு பெண் சிகப்பு நிற சட்டை மற்றும் கருப்பு நிற சார்ட்ஸ் அணிந்து திரும்பி நின்று போன் பேசிக் கொண்டு இருக்க, அவள் சுபா தான் என்று செய்தேன். அவளுடைய பின்புற உடல் வளைவுகளை பார்த்து என் இதயம் வேகமாக துடித்தது. நான் மெதுவாக அவள் தோளில் கை வைக்க சுபா மெல்ல திரும்பி எனை பார்த்தாள்…………….
சுபா என் பக்கம் திரும்பியதும் என் இதயத் துடிப்பின் வேகம் பல மடங்காக அதிகரித்தது. இறுக்கமான உடையில் சுபா என் அருகில் ஒரு அடி தொலைவில் நின்று கொண்டு இருந்தாள். பல முறை அவளை வீடியோ காலில் பார்த்த அனுபவம் இருந்தும், இன்று நேரில் சுபா எனக்கு புதிதாக தெரிந்தாள். என்னை விட சற்று உயரம் குறைவு, அழகிய நெற்றி அதன் ஓரத்தில் சிறு தழும்பு, சிறிய கோலி உருண்டை போல இரு கண்கள், அதன் கீழே சிறு மூக்குத்தி குத்தப்பட்ட மெல்லிய மூக்கு, இரண்டு பெரிய உப்பிய கன்னம் இவை அனைத்தையும் இத்தனை நாள் எப்படி கவனிக்காமல் இருந்தேன் என்று புரியாமல் சுபாவை பார்த்தேன்.
சுபா என்னை பார்த்ததும் “ஹே இங்க தான் இருக்கியா” என்று கூறி விட்டு ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தாள். எங்கள் இருவரது கால்களும் எனது பைக் இருக்கும் திசையை நோக்கி நடக்க, சுபா இன்று காலை நடந்தது பற்றி கூறிக் கொண்டு இருந்தாள். ஆனால் நானோ அவளது முக அழகை ரசித்து விட்டு அதற்கு கீழே உள்ள உடல் அழகினை ரசித்து கொண்டே வந்தேன்.
எங்களது முதல் சந்திப்பில் நடந்த விசயங்கள் அனைத்தும் இந்த கதையின் அடுத்த பாகத்தில் கூற இருக்கிறேன். உங்களது ஆதரவும் கருத்துக்களையும் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன். உங்களது கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இது முழுக்க முழுக்க உண்மை கதை.
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000