This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
விக்கி பயந்து கொண்டே போக அங்கே மொத்தம் ஒரு 10 பேரை மட்டும் வைத்து மீட்டிங் ஆரம்பித்தனர் ,அப்பா நல்ல வேலை 10 பேர் தான் இருக்காங்கே எப்பயும் மாதிரி 100 பேர் இருந்து அவங்கே முன்னாடி அசிங்க படுறதுக்கு 10 பேர் பரவல எல்லாம் உன் நேரம்டா விக்கி என்னைக்கு அந்த சுவாதிய தொட்டியோ அன்னைக்கு இருந்து உனக்கு நல்ல நேரமே இல்லடா என்று நினைத்து கொண்டே மீட்டிங் அட்டண்ட் பண்ணான் , அங்கே கொஞ்ச நேரம் மீட்டிங் பிசினஸ் பற்றியே போனது.
தொடர்புக்கு.. [email protected] ஆதரவுக்கு நன்றி…??
பின் வழக்கம் போல் மீட்டிங் முடிந்ததும் வழக்கம் போல விக்கி இன்னைக்கு ஒரு வழியா தப்பிச்சோம் என்று நினைத்து கொண்டு எஸ்கேப் ஆக பார்த்த போது டேய் உன்னைய பாஸ் கூப்புடுரார்டா என்று அஜய் சொல்லவும் அட சே எனக்கு ஏன் கொஞ்சம் கூட லக் இல்ல என்று நினைத்து கொண்டு பாஸ் ரூமிற்கு போனான் ,வாங்க மிஸ்டர் விக்னேஷ் அப்புறம் ட்ரிங்க்ஸ் எதுவும் சாப்புடுரிங்களா என பிரகாஸ் மேனன் கேட்க அட பாவிகளா என் ரத்தத்த ஏதும் குடிக்காம இருந்தா சரி என்று நினைத்து கொண்டு ஓகே என்று நினைத்து கொண்டு ஒன்னும் வேணாம் சார் என்றான் விக்கி ,
அப்புறம் நான் எதுக்கு கூப்பிட்டனா நேத்து முழுக்க நான் என் சொந்த கதையவா பேசுனேனே தவிர உங்க கதைய கேக்கவே இல்ல சொல்லுங்க உங்கள பத்தி கொஞ்சம் என்றார் , எனக்கு சொந்த ஊர் வந்து தேனீ பக்கம் சார் இப்ப இருக்கிறது சென்னைல அப்பா என்று அவன் சொல்ல ஐயோ இதலாம் வேண்டாம் வேற எதாச்சும் சொல்லுங்க என்றார் ,
என்ன சார் சொல்ல என கேட்டான் விக்கி ,அதான் மேரேஜ் பண்ணிட்டிங்களா இல்ல எதுவும் லவ் இந்த மாதிரி ரிலேசன்ஷிப்ல இருக்கிங்களா என்று கேட்டார் ஐயோ அது ஏன் எல்லாரும் நம்ம கிட்ட விசயம் தெரிஞ்ச மாதிரியே பேசுறாங்கே ஸ்ட்ரைட்டா பேச மாட்டிங்கிறாங்க என்று விக்கி நினைத்து கொண்டு இல்ல சார் என்றான் ,ம்ம் என்ன மாதம் 80 தவுசண்ட் சம்பளம் வாங்கி கிட்டு கேர்ள் பிரண்ட் இல்லையாமையா இருக்கீங்க என்றார் ,இல்ல சார் வொர்க்குக்கே டைம் சரியா இருக்கு இதுல இது எங்க பண்றது என்றான் ,
அப்படி இருக்காதிங்க சீக்கிரமே கல்யாணம் பண்ணிகொங்க என்னைய கேட்டா கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி லவ் பண்ணுங்க அப்ப தான் லைப்ல ஒரு பிடிப்பு வரும் என்றார் ,விக்கி ஒன்றும் சொல்லமால சும்மா சிரித்தான் ,முடிஞ்சா நம்ம ஆபிஸ்லே கூட நல்லா பொண்ணா பாத்து லவ் பண்ணுங்க நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் என்றார் ,அட பாவி நம்ம ஆபிஸ் பொண்ணா நான் உன் பொண்ணையே லவ் பண்றேன் அது தெரிஞ்சா எதுவும் சொல்லலாம் மாட்ட ஆனா கண்டிப்பா கொன்னுடுவ என்று நினைத்து கொண்டு இருக்கட்டும் சார் என்று சொல்லி விட்டு கிளம்பினான் ,
அண்ட் இன்னொரு விஷயம் என்றார் ,ஐயோ இப்ப என்னையா என்று நினைத்து கொண்டு சொல்லுங்க சார் என்றான் .நாளைக்கு வெதர் சரி ஆகிடும் அதுனால நாளைக்கு இவினிங் நீ கிளம்பிடலாம் அண்ட் சிங் கிட்ட சொல்லி இருக்கேன் இங்க ட்ரிப்க்கு வந்த உங்க 5 பேருக்கும் ஒரு டென் டேஸ் லீவ் கொடுக்க சொல்லி சோ என்ஜாய் பண்ணுங்க என்றார் ,இருக்கட்டும் சார் நான் ஒரு ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வந்துருறேன் என்றான் ,
ஹே டோன்ட் வொர்ரி எப்பயுமே இப்படி லீவ் கொடுக்குறது தான் சோ என்ஜாய் என்றார் , இன்னும் ஒரு நாளா ஒட்டிட்டா போதும் இப்பதைக்கு 10 நாள் தப்பிச்சுடுவோம் அப்புறம் பேசாம வேற ஏதாவது ஸ்டேட்க்கு போயி வேற வேலைய தேடிகிட வேண்டியது தான் என்று நினைத்து கொண்டு சரி இன்னொன்னு யோசிக்காம விட்டுட்டோமே டேவிட்க்கு தெரிஞ்சா கண்டிப்பா மணிக்கு தெரிஞ்சு இருக்கும் அப்ப வள்ளிக்கும் தெரிஞ்சு இருக்கும் ஒ ஷிட் போச்சு எல்லாம் நாசமா போச்சு வள்ளிக்கு தெரிஞ்சா என்னைய உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாலே அப்புறம் என்னைய ஸ்வாதிய கல்யாணம் பண்ணிக்க சொல்லுவா ஐயோ இப்ப என்ன பண்ண பேசாம கல்யாணம் பண்ணிக்கோ என்று குரல் கேட்க யாருப்பா அது நான் தாண்டா உன் மனசாட்சி என்றது வாடா உன்னய தான் தேடி கிட்டு இருந்தேன் இத்தன நாளா என்றான் விக்கி ஆமா என்ன சொன்ன என கேட்டான் , அதாண்டா சுவாதிய கல்யாணம் பண்ணிக்கோ என்றது போடா டேய் என்றான் சலிப்போடு .
அப்புறம் ஏன் நைட்டு அவள லவ் பண்ண போறேன் அப்படி இப்படின்னு உளறுன என்றது ,உலருல உண்மைய தான் சொன்னேன் ஆனா அடுத்த நிமிசமே அந்த டேவிட் பையன் சந்தோசத்த கெடுக்குற மாதிரி போன் போட்டனே என்ன பண்றது என்றான் விக்கி ,ஹ எத்தன தடவ சொல்றது அவ இப்ப அவனோட லவ்வர் இல்ல என்றது .
ஆமா ஆனா சுவாதி என்னைய லவ் பண்றாளான்னு தெரியலையே என்றான் ,அவ லவ் பண்றாளா இல்லையோ நீ உன் லவ்வ என்னைக்குமே விட்டுடாத என்றது மனம் , பின் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மணிக்கு விசயம் தெரிஞ்சு இருக்கா இல்லையான்னு பாப்போம்னு நினைச்சு கிட்டு போன் அடிச்சான் .மணி எடுக்கவே இல்லை யாரு என கேட்டாள் வள்ளி ,விக்கி என்றான் மணி ,எடுக்கவே எடுக்காதிங்க அவனுக்கு மட்டும் நமக்கு விசயம் தெரிஞ்சு போச்சுன்னு தெரிஞ்சா அப்புறம் அப்புறம் அங்கேயே செட்டில் ஆகிடுவான் அதுனால எடுக்காதிங்க என்றாள் வள்ளி .
அதன் பின் வைத்து விட்டு சரி எதுவா இருந்தாலும் சமாளிப்போம் என்று முடிவு செய்து கொண்டான் ,அடுத்த நாள் கடைசியாக சாப்பிங் போனான் ,அங்கு மணி வள்ளி அவர்களின் குழந்தை என எல்லாருக்கும் பொருள்கள் வாங்கி கொண்டு வரும் போது ஒரு கடையில் ஒரு ட்ரெஸ் பார்த்தான் ,அது அமெரிக்க பெண்கள் அணிவது போன்ற உடை உடனே அந்த பொம்மையை கண்ணை மூடி கொண்டு பார்க்கும் விக்கிக்கு சுவாதி அந்த உடையில் இருப்பது போல் இருந்தது ,ம்ம் பரவல நம்ம ஆளு இந்த மாதிரி மார்டர்ன் ட்ரெஸ்ல நல்லா தான் இருப்பா , வாங்குவோமா வேணாமா வேணாம் கால் பாதி தெரியிற மாதிரி இருக்கு நல்லா இருக்காதே அது ம்ம் பரவல வீட்ல நமக்கு மட்டும் போட்டு காம்பிக்க சொல்வோம் என்று நினைத்து கொண்டு உள்ளே சென்றான் ,உள்ளே சென்றவுடன் அவனை அறியாமல் மேலும் பல ட்ரெஸ்கலை அவளுக்கு என்று எடுத்தான் ,
சார்ட் பேன்ட் லேக்கின்ஸ் மேலும் பல பல மார்டன் ட்ரெஸ்களை எடுத்தான் ,எல்லாம் எடுத்து விட்டு வரும் போது ஒரு அமெரிக்க பெண் தனது கல்யாணத்திற்கு உடை எடுத்து கொண்டு இருந்தாள் , அது வெள்ளை நிறத்தில் ஆன உடை ,அந்த பெண் போட்டு வெளியே வந்து தன் தாயிடம் காட்டி கொண்டு இருப்பதை பார்த்த விக்கிக்கு ,பேசாம இந்த ட்ரெஸ்யும் எடுத்துடுவோம் வெள்ளை ட்ரெஸ்க்கும் அதுக்கும் ஏஞ்சல் மாதிரி இருப்பா என்று நினைத்து கொண்டு அந்த ட்ரெஸ் வேணும் என்று கடைக்கார பெண்ணிடம் கேட்டான் , அதற்கு அவள் bride (கல்யாண பெண் )எங்க சார் என கேட்டாள் .
இல்ல அது வந்து நான் இத என் லவ்வருக்கு வாங்கி தரனும் போல இருக்கு அதான் என்று இழுத்தான் ,ஓகே சார் ஆனா சரியான சைஸ் தெரியாட்டி நல்லா இருக்காதே என்று சொன்ன பின் விக்கி யோசித்தான் அதுவும் சரி தான் அவ கிட்ட போன் பண்ணி கேப்போமா என்று நினைத்து கொண்டு போனை எடுத்தான் ஆனால் வழக்கம் போல் பேச மனசு வர வில்லை .
பின் கடைக்கார பெண்ணிடம் வந்து எதாச்சும் ஒரு சைஸ் கொடுங்க பரவல என்றான் ,அட்லிஸ்ட் ஆள் யார் மாதிரி இருப்பாங்கன்னு காட்டுங்க என்று இரண்டு மூன்று பெண்களை காட்ட அவனும் ஒரு பெண்ணை காட்டி அந்த அளவுக்கு ட்ரெஸ் எடுத்தான் , பின் விலையை கேட்டு அதிர்ந்தான் ,என்னது இவலவா என்றான் ,ஆமா சார் வெடீங்க் டிரஸ் காஸ்ட்லி தான் என்றாள் ,
ஆனால் விக்கிக்கு அதை வாங்கிய தீர வேண்டும் போல் இருந்தது அதனால் காசை பற்றி கவலை படமால் அதை வாங்கி கொண்டு ரூமுக்கு சென்று அந்த டிரஸ் எடுத்து பார்த்து பல தடவை அந்த ட்ரெஸ்ல் சுவாதியை நினைத்து பார்த்தான் ,ம்ம் தேவதை மாதிரி தான் இருக்க என்ன பண்ண அதான் இறங்கி வர மாட்டிங்கிர போல நான் தான் ஒரு லூசு நீயாச்சும் வெட்கத்த விட்டு லவ் சொல்லலாமல என்று அவள் போட்டோவை பார்த்து பேசி கொண்டு இருந்தான் ,
பின் அன்று மாலை ஒரு வழியாக 15 நாள் பிசினஸ் ட்ரிப் முடித்து கொண்டு அமெரிக்காவை விட்டு கிளம்பினான் ,அவனுக்கு இந்தியாவில் சுவாதிக்கு குழந்தை பிறந்ததை பற்றி எதுவும் தெரியாது அதே போல் அவனுக்கு மனதிற்குள் சுவாதி மட்டும் தான் இருந்தாள் ,எப்படி அவ முகத்த பாக்க போறோம் போறதுக்கு முன்னாடி ரொம்ப திட்டி இருந்தேன் என்ன சொல்றாளோ என்று நினைத்து கொண்டே பயணித்தான் ,
தொடர்புக்கு.. [email protected] ஆதரவுக்கு நன்றி…??
தொடரும்
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000