This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
Idhu Nanban Tamil Kamakathaikal – ஓகே வா போவோம் என்று விக்கி மெல்ல சுவாதியின் கைகளை பிடித்து கொண்டு வெளியேறினான் .வெளியே எல்லாரும் ஒரு இடத்தில ஆடி பாடி கொண்டு இருந்தனர் ,இன்னொரு பக்கம் கல்யாண ஜோடிக்கு என்று ஒரு மேடை போட்டு அவர்களோடு வந்தவர்கள் கிப்ட் கொடுத்து போட்டோ எடுத்து கொண்டு இருந்தனர் .
ஹ கிப்ட் கொடுத்துட்டு கிளம்பிடுவோமா என கேட்டாள் சுவாதி .கிப்ட் ஏதும் வாங்கி இருக்குமோ என்ன என கேட்டான் .நீ வாங்க மாட்டேன்னு தெரியும் அதான் நான் நேத்தே காலைல ஆஸ்பத்திரி போகும் போது வாங்கிட்டேன் என்றாள் .ம்ம் ரொம்ப நல்லது சரி வா போயி கொடுத்துட்டு கிளம்புவோம் இன்னைக்கு ஞாயிற்று கிழமை வேற இங்க இருந்தா நல்லாவா இருக்கும் வா போவோம் என்றான் .
இருவரும் மேடைக்கு அருகே வரை போனார்கள் .பின் சுவாதி நின்று விட்டாள் .வா போவோம் ஏன் நிக்குறே என்றான் .அந்த டாக்டர் அம்மா இருக்காங்க அவங்க நம்மாலேயே முறைச்சு பாக்குறாங்க சோ எப்படி போறது என்றாள் .நடந்து தான் போனும் என்றான் விக்கி .விளையாடதாடா எனக்கு அவங்க முறைக்கிரத பாத்தா எனக்கு பயமா இருக்கு என்றாள் .
என்னது பயமா இருக்கா அடச்சீ வா போயி கொடுத்துட்டு போவோம் என்றான் .இல்ல நான் வரல நீயே போயி கொடுத்துடு நான் இங்க நிக்குறேன் என்றாள் .அவர்கள் அங்கே தயங்கி கொண்டு இருப்பதை பார்த்து மேடையில் இருந்து சிமி வாங்க என்பது போல் சுவாதியை பார்த்து கை அசைத்தாள் .இல்ல இருக்கட்டும் என்பது போல சுவாதி சொல்ல மீண்டும் அவள் சைகையில் வர சொன்னாள் .
அதன் பின் டாக்டர் ஜெனிபர் மீண்டும் வந்தார் .என்ன உங்க ரெண்டு பேரையும் அடிக்கடி ஓர் ஆள் வந்து கூப்பிடனுமா வாங்க மேல போட்டோ எடுக்கலாம் என்றார் .இல்ல டாக்டர் அது வந்து ஒரே கூட்டமா இருக்கு அதான் என்று சுவாதி சொல்ல ஒன்னும் இல்ல என் கூட வாங்க என்று டாக்டர் சுவாதியின் கைகளை பிடித்து கொண்டு நடக்க அப்பா நம்ம தப்பிச்சோம் என்று ஒன்றும் தெரியாதது போல விக்கி அந்த பக்கம் திரும்பி போன் பேசுவது போல நடிக்க ஹலோ விக்னேஷ் நீங்களும் வாங்க உங்க வோயிப் மட்டும் தனியாவா போட்டோவுக்கு போஸ் கொடுப்பாங்க சோ நீங்களும் வாங்க என்றார் .
இல்ல போன் என்றான் .அட ஞாயிற்று கிழமை கூடவா போன்லே வொர்க் பண்ணுவிங்க அதான் உங்க கூட சுவாதி சண்ட போட்டு இருக்க வாங்க அப்புறம் போன் பேசலாம் என்று டாக்டர் சொல்ல வேறு வழி இல்லமால் சுவாதி பின்னே சென்றான் .பின் சுவாதியும் விக்கியும் மேடை ஏற மேடையில் இருந்த ராக்கியின் அம்மா டாக்டர் மேரி இவர்களை பார்த்து கோபத்தோடு முறைத்து விட்டு அந்த பக்கம் முகத்தை திருப்பி கொள்ள விக்கிக்கும் சுவாதிக்கும் புரிந்து விட்டது .
இருந்தாலும் இருவரும் கிப்ட்டை ராக்கி மற்றும் சிமியிடம் கொடுத்து விட்டு இருவருக்கும் வாழ்த்து சொன்னார்கள் .பின் போட்டோவிற்கு நிற்க சொல்ல வேண்டாம் என்று சொன்னார்கள் ஆனால் டாக்டர் மற்றும் சிமி கட்டாயப்படுத்த விக்கியும் சுவாதியும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர் .இருவரும் கொஞ்சம் இடைவெளி விட்டு நிற்க போட்டோ கிராபர் நல்லா நெருக்கமாக நிற்க சொன்னான் .அப்போதும் இருவரும் ஓரளவே நெருங்கினர் .
இன்னும் கொஞ்சம் பக்கம் போங்க சார் என்று போட்டோ கிராபர் சொல்ல சும்மா நெருக்கமா நில்லுங்க மிஸ்டர் விக்னேஷ் என்றார் டாக்டர் .இருவரும் நன்கு நெருங்கி நின்றனர் .இருவரும் ஒன்றாக பக்கத்து பக்கத்தில் நின்று போட்டோ எடுப்பது இதுவே முதல் முறை .அதனாலே இருவருக்கும் உள்ளும் ஒரு பரசவமும் சந்தோசமும் ஏற்பட்டது .சுவாதி அவன் பக்கத்தில் நின்றதால் அவன் தோள் பட்டைகளையும் தன் தோள் பட்டையையும் வைத்து கண்களிலே இருவரின் உயரத்தையும் அளந்து பார்த்தாள் .
பரவல இந்த விக்கி பயபுள்ள என்னைய விட உயரமா தான் இருக்கான் என்று அவன் பக்கம் திரும்பி மனதில் நினைத்து கொண்டு இருக்க மேடம் இங்க பாருங்க என்று சுவாதியைபோட்டோ கிராபர் சொல்லவும் அது வரை அவன் பக்கம் அவனுக்கே தெரியமால் பார்த்து கொண்டு இருந்தவள் அவன் பார்த்து விடுவான் என்று உடனே முன்னே பார்க்க அதற்குள் விக்கி பார்க்க அவளும் பார்க்க இருவரும் ஒரு நொடி பார்த்து கொண்டு முன்னே போடோவுக்கு போஸ் கொடுத்தனர் .விக்கி சுவாதி தன்னை அது வரை பார்த்து விட்டு உடனே திரும்ப முடியமால் திணறியதை நினைத்து சிரித்தான் .
அது சுவாதிக்கும் புரிந்து விட்டது .பின் இருவரும் போட்டோ எடுத்து விட்டு சிமியிடம் நாங்கள் கிளம்புறோம் என்றாள் சுவாதி .அதலாம் முடியாது இந்தா இன்னும் 10 நிமிசத்துல சாப்பாடு ரெடி ஆகிடும் அத சாப்பிட்டு போங்க என்றாள் .இல்லைங்க நான் இருக்கிறதுல சாப்பிடலாமான்னு தெரியல அதான் நாங்க கிளம்புறோம் என்றாள் .இருங்க ஒரு நிமிஷம் அண்ணி சுவாதி நம்மதுல சாப்பிடற மாதிரி ஏதும் அயிட்டம் இருக்கா என கேட்டாள் .ம்ம் அதலாம் வெஜ் ஐட்டம் சாப்பிடலாம் இரு சுவாதி ஒரு கால் மணி நேரம் இருந்து சாப்பிட்டு போ என்றார் ,
சரி என்று சொல்லி விட்டு இருவரும் கீழே உள்ள சேரில் போயி உக்காந்தனர் .அங்கு பின் மணமக்களை வாழ்த்தி சிலர் மைக்கில் பேசினார்கள் .அப்புறம் போட்டோவுக்கு மனமக்களோடு போஸ் கொடுத்தனர் .விக்கி ஒரு பக்கம் அதை கண்டுகொள்ளமால் மொபைல் நோண்ட சுவாதி மேடையை பார்த்து கொண்டு இருந்த்தால் .ஒரு அரை மணி நேரம் அமைதியாக பார்த்து கொண்டே இருந்தவள்
தன்னை மீறி ரொம்ப போர் அடிக்குது உனக்கு எப்படி இருக்கு இதலாம் பாக்க என்றாள் .யாரு மேடம் என் கிட்ட தான் பேசினிங்களா என கேட்டான் விக்கி .ஆமா தமிழ தான பேசுனேன் இங்க வேற யாரும் தமிழ் பேசுறவங்க இருக்காங்களா என்ன என்றாள் .அது தெரியல எனக்கு மேடம் என் கிட்ட தான் பேசுனிங்களா என கேட்டான் .ஆமாடா லூசு உன் கிட்ட தான் பேசுனேன் என்றாள் .இல்ல நேத்து என் கிட்ட யாரோ பேசாத பேசாதன்னு கத்தி சண்ட போட்டாங்க அதான் இப்ப அவங்க பேசுற மாதிரி இருக்கேன்னு கேக்குறேன் என்றான் .
என்ன பண்ண ரொம்ப போர் அடிக்குதே அதான் மூனவது மனுசனா நினைச்சு பேசுறேன் என்றாள் . ஒ அப்படியா என் பேர் விக்கி விக்னேஷ் உங்க பேர் என்று அவள் பக்கம் திரும்பி கை குலுக்குவது போல நிட்ட சுவாதி சிரித்தாள் .ம்ம் ஓகே என் பேர் சுவாதி என்று சொல்லி அவளும் கை குலுக்கினாள் .அப்புறம் என்ன பண்றீங்க என்றான் .நான் இங்க தமிழ் ஏப் எம்ல ஆர் ஜேவா வொர்க் பண்றேன் நீங்க என்றாள் .
ஒ நீங்க தான் அந்த ஆர்ஜே சுவாதியா நான் உங்க பெரிய பேன்ங்க என்று விக்கி சொல்ல அதை கேட்டு சுவாதி சிரித்தாள் .சும்மா கிண்டல் பண்ணாதிங்க என்றாள் .இல்லங்க நிஜமாதாங்க என்று சொல்லி விட்டு விக்கி அவளே தேர்ட் பிரசன் மாதிரி பேச சொல்றா நம்மளும் அப்படியே மூவ் பண்ணி சொல்லிற வேண்டியது தான் என்று நினைத்து கொண்டு நான் உங்க குரலுக்கு மட்டும் பேன் இல்லைங்க உங்கலேக்கே தான் ஏன்னா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அப்புறம் என்று சொல்லும் போதே போன் வர
எவண்டா அந்த விளங்கதாவன் டேவிட் ஆ தான் இருக்கும் என்று நினைத்து கொண்டு போனை பார்த்தான் அது மணி இவன் இந்நேரம் போன் பண்றான் போயி பிறந்த குழந்தைய கொஞ்ச வேண்டியது தானே என்று நினைத்து கொண்டு போனை எடுத்து ஹெலோ ஹெலோ என்று சொல்ல அங்கு ஒரே இரைச்சலாக இருக்க அவன் பேசுவது கேக்கவில்லை இரு ஒரு நிமிஷம் என்று சொல்லி விட்டு சுவாதியை பார்த்து நான் ஒரு போன் பேசிட்டு வந்துறேன் என்றான் .ஓகே என்றாள் .
விக்கி போனை வைத்து கொண்டு கொஞ்சம் தள்ளி போனான் .அதன் பின் சுவாதி தனியாக உக்காந்து இருந்தாள் .என்னடா ப்ளைட் டிக்கெட் பேசிட்டேன் கிடைச்சுடும் என்றான் விக்கி மணியிடம் .டேய் நான் அதுக்கு கூப்பிடல என்றான் .பின்ன எதுக்கு கூப்பிட்ட என்றான் விக்கி .நாளைக்கு ஆபிஸ்ல ரொம்ப முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு நம்ம பாசே வராராம் அதுனால பப்பு பார்டினு போயி தூங்கமா இருந்து நாளைக்கு கம்பனில வந்து தூங்கிடத என்றான் மணி ,சரிடா என்றான் விக்கி ,
அது இருக்கட்டும் என்ன தீடிருன்னு பாஸ் வராரு என கேட்டான் .தெரியல என்றான் .பின் இருவரும் ஆபிஸ் விசயங்களை பேசி கொண்டு இருக்க அங்கு தனியாக உக்காந்து இருந்த சுவாதி கொஞ்சம் எரிச்சல் ஆனாள் .அப்போது அங்கு மேரி டாக்டர் வந்து எல்லாரையும் சாப்பிட கூப்பிட்டார் .அப்போது எல்லாரையும் போக சொல்லி கொண்டு இருந்தார் .சுவாதி எந்திரிக்க வில்லை .நீ வா என்று சுவாதியை பார்த்து கூப்பிட சுவாதி பரவல இருக்கட்டும் என்றாள் .
வா என்று மெல்ல அதிகாரமாக சொல்ல சுவாதி மெல்ல எழுந்தாள் .டாக்டர் அவள் கையை பிடித்து கொண்டார் .கருவ அழிக்காம இருந்ததுக்கு சந்தோசம் என்றார் .சுவாதி ஒன்றும் சொல்ல வில்லை .அப்புறம் கல்யாணம் பண்ணிங்களா இல்ல இன்னும் லிவிங் டு கெதர் தானா என கேட்டார் .
அது வந்து வந்து என்று சுவாதி சொல்ல முடியமால் திணற போதும் பொய் சொல்ல ட்ரை பண்ணாத இன்னும் ரெண்டு பேரும் மேரேஜ் பன்னலலெ என கேட்டார் .ஆமா டாக்டர் என்றாள் .ம்ம் நீங்க மத்தவங்கள ஏமாத்துறதா நினைச்சு உங்கள நீங்களே ஏமாத்தி கிட்டு இருக்கீங்க அதான் உணமை சரி நீ போயி சாப்பிடு குழந்தைய நல்ல படியா பெத்து எடு என்று சொல்லி விட்டு போக சுவாதி அங்கேயே நின்று கொண்டு இருந்தாள் , Idhu Thozhan Tamil Kamakathaikal
தொடரும்
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000