This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
பச்சைத் தண்ணீரில் குளித்ததில் என் உடம்பும்.. மனசும் புத்துணர்சசியடைந்தது. உடம்பை விடவும் மனதில்.. இருந்த அழுக்கைக் கழுவ முயன்றேன். நான் குளித்துவிட்டு அறைக்குள் போனபோது.. முன்பே உட்கார்ந்திருந்த சேரில்.. கால்களை மடக்கி.. சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தாள் நிலாவினி. என்னைப் பார்த்ததும் கால்களை எடுத்து கீழே போட்டாள்.
Story Writer : Mukilan
அவள் நெஞ்சைப் பிளந்து கொண்டு ஆழமான ஒரு நெடுமூச்சு வெளியேறியது.
நான் கண்ணாடி முன்னால் நின்று உடம்புக்கு பவுடர் போட்டுக்கொண்டிருக்க… நீ காலை உணவைக் கொண்டு வந்து வைத்தாய். நிலாவினியைப் பார்த்துக் கேட்டேன். ”சாப்பிட்டியா..?”
”ம்..ம்ம்..” என்று என்னைப் பார்த்து தலையாட்டினாள்.
”கொஞ்சம் சாப்பிடு..”
” ம்..ம்ம்.. நீங்க சாப்பிடுங்க.. நான் அப்றமா சாப்பிட்டுக்கறேன்..” என்றாள்.
நான் சாப்பிட உட்கார்ந்து உன்னைப் பார்த்தேன். ”நீ…?”
” நீங்க சாப்பிடுங்க…”
நான் டிவியைப் பார்த்துக் கொண்டு அமைதியாகச் சாப்பிட்டு முடித்தேன். கை கழுவி.. பேண்ட்..சர்ட் போட்டுக் கொண்டு.. நிலாவினியைப் பார்த்தேன். ”இங்கதான இருப்ப..?”
” ம்..ம்ம்..! ஏன்..?” என்று நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
”நான் கெளம்பறேன்..”
” ம்..ம்ம்..!” என்று மீண்டும் தலையை ஆட்டினாள்.
உன்னைப் பார்த்து.. ”சரி.. நான் போகட்டுமா..?”என்றேன்.
நீ சிரித்து..”சரிங்க..” என்றாய்
” நேர நேரத்துக்கு சாப்பிட்டு.. நல்லா ரெஸ்ட் எடு…”
”செரிங்க..”
நான் கிளம்ப… மெதுவாக.. ”ஸாரி..” என முனகினாள் நிலாவினி.
அவளைப் பார்த்தேன். ”என்ன..?”
சட்டென அவள் கண்கள் கலங்கிவிட்டது. ”ஐ ம் வெரி.. வெரி ஸாரி..! நான் உங்களுக்கு எந்த சமாதானமும் சொல்லி.. என்னை நியாயப்படுத்திக்க முடியாது..! பட்.. ஐ லவ் யூ..”
நான் சில நொடிகள் அமைதியாக நின்றேன். என் உணர்வுகளை கொந்தளிக்க விடாமல் அடக்கும் முயற்சியை மேற்கொண்டிருந்தேன்.
சல்வார் துப்பட்டாவில் கண்களைத் துடைத்துக் கொண்டு..என்னைப் பார்த்துச் சொன்னாள். ” உங்க காயத்தை என்னால ஆத்த முடியாது.. ஆனா.. உங்கள அமைதிப்படுத்த.. என்னால முடிஞ்சதெல்லாம் செய்வேன்..!!”
”போனத விடு.. அதப்பத்தி பேசறதுல எந்த நன்மையும் இல்ல..! நம்ம குடும்ப வாழ்க்கையை இனி நாமதான் சீர் பண்ணிக்கனும்..! பழச மறந்துட்டு..புதுசா.. வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்..!” என்றேன்.
என் முகத்தைவிட்டு பார்வையை விலக்காமலே தலையை ஆட்டினாள். ”அப்றம்…”
” ம்..ம்ம்..?”
” காரு நின்னே கெடக்கு.. அத.. எடுத்துக்கலாமே..?”
”வேண்டாம்..” என்று பட்டெனச் சொன்னேன்.
அவள் கண்களில் கேள்வி இருந்தது. ஆனால் அது வார்த்தையாக வரவில்லை.
நானே சொன்னேன். ”எனக்கு நீ மட்டும் போதும்.. அந்த கார்… உங்க வீட்டு ஆளுங்க. உனக்காக குடுத்த நஷ்ட ஈடு..! அது வேண்டாம்..! நான் அதுக்கு ஆசைப்பட்டு மறுபடி உன் கூட குடும்பம் நடத்தற மாதிரி ஆகிரும்..!”
அவள் எதுவும் பேசவில்லை. ”அவள.. பாத்துக்க.. நீ ஆசைப்பட்ட பாக்கியம்.. அவ வயித்துக்குள்ள இருக்கு.. அவளும் அத.. உனக்காகத்தான் சுமந்துட்டிருககா..” என்று அவளிடம் சொல்லி விட்டு நான் கிளம்பினேன்..!!
இரவுதான் நான் மீண்டும் வீடு திரும்பினேன். நிலாவினி வீட்டில்தான் இருந்தாள். இருவரும் நிறைய கலந்து பேசியிருப்பார்கள் என்று புரிந்தது. நாங்கள் மூவரும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிட்டோம். நான் நிலாவினியைக் கேட்டேன். ”உன் வீட்டுக்கு போனியா..?”
”ம்..ம்ம்..! மத்யாணம் போய்ட்டு வந்தேன்..!”
”சொல்லிட்டியா…?”
”ம்..ம்ம்..” தலையாட்டினாள்.
”என்ன சொன்னாங்க..”
”காலைல வந்து உங்கள பாக்கறேன்னாங்க…” என்றாள்.
” எதுக்கு..?”
”நடந்ததுக்கு.. ஒரு.. மன்னிப்பு…”
”இல்ல வேண்டாம்..! மன்னிப்புங்கறது பெரிய விசயம்..! நானும் அந்தளவுக்கு தகதியானவன் இல்ல..!”
”இ..இல்ல… ஒரு. . மரியாதைக்கு. …”
”வேண்டாம்..நிலா.. உங்க சைடு தப்ப சரி பண்ண.. ஏற்கனவே.. நீங்க பரிகாரம் பண்ணிட்டிங்க.! அதுவே போதும்..!”
”எ.. என்ன பரிகாரம்….?”
உன்னைக் கை காட்டினேன். ” இதோ..! இவதான் அந்த பரிகாரம்..! அந்த விசயத்துல.. நான்தான் தப்பானவன்..! இப்பவும் நான்.. நீ எனக்கு துரோகம் பண்ணிட்டேனு சொல்ல மாட்டேன். ! ஆனா நீங்க பண்ண காரியம்… என்னை காயப்படுத்திருச்சு.. அந்த வலிதான்..!! மத்தபடி.. இதுல.. பாவ புண்ணியம் எதுவும் இல்ல..! என்ன… உங்க சைடுல எல்லாருகூடவும்.. இனி என்னால பழைய மாதிரி பழக முடியுமானு தெரியல..! போகப் போக.. எல்லாம் சரியாகும்..! மத்தபடி அவங்க வந்து பேச.. எதுவும் இல்லேன்னு சொல்லிரு..! அது.. இன்னும் என்னை கோபப்படுத்திடலாம்..!!” என்றேன் தீர்மானமாக.
இரவு படுக்கும் போது.. நீ தரையைக் கூட்டிப் பாயை எடுத்து விரித்தாய். அதைப் பார்த்த நிலாவினி சொன்னாள். ” நீ பெட்ல படுத்துக்க தாமரை..”
நீ பதறிப்போனாய். ”ஐயோ.. இல்லீங்க்கா..பெட்ல நீங்க படுத்துக்கங்க.. நான் பாய்ல படுத்துக்கறேன்..”
”ஏய்.. தாமரை.. நீ பெட்லதான் படுக்கனும்..! பாய எனக்கு விட்று..” என்றாள் நிலாவினி.
”ஐயோ.. வேண்டாம்க்கா.. நீங்கதான் பெட்ல படுக்கனும். .” என இருவரும் மாறி.. மாறி விவாதம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
நான் சிறிது நேரம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு பேரில் யாரும் விட்டுக் கொடுப்பது போல தெரியவில்லை. ஆனால் அவர்கள் இரண்டு பேரின் பக்கமும் நியாயம் இருந்தது.
இறுதியாக நீ.. என்னிடம் முறையிட்டாய். ”நீங்களே.. சொல்லுங்க..”
நான் உங்கள் இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்தேன். ”என்ன சொல்றது..?”
நீ ”அக்காவ பெட்ல.. படுத்துக்க சொல்லுங்க..!” என்றாய்.
நிலாவினி ”பரவால்ல தாமரை… நான் எதுவும் நெனச்சிக்க மாட்டேன்.. நீயே மேல படுத்துக்க…” என்றாள்.
நான் ”ஏய்.. என்ன ரெண்டு பேரும்.. இப்படி.. பேசாம ரெண்டு பேரும்..மேலயே படுத்துக்குங்க..” என்றேன்.
நீ சிரிக்க.. நிலா.. ”மூனு பேருக்கு ஏத்த பெட்.. இல்ல அது..” என்றாள்.
”அடஜஸ்ட் பண்ணிக்கலாம்..”
”அந்த பேச்சே வேண்டாம்..! மூனு பேரும் ஒரே பெட்ல படுத்தா.. இவளுக்கு மூச்சு முட்டி இம்சையா இருக்கும்.. அவ வயித்துக்குள்ள இருக்கறது கொஞ்சம்.. ஃபரீயா.. மூச்சு விடட்டும்…! எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல.. நான் கீழ படுத்துக்கறேன்..!” என்றாள் நிலாவினி.
நீ தர்மசங்கடத்தில் நெளிந்தாய். உன் உணர்வுகள் எனக்கு புரிந்தது. நிலாவினியிடம் சொன்னேன். ”உன்ன கீழ படுக்க வெச்சிட்டு.. இவளால பெட்ல நிம்மதியா படுத்து தூங்க முடியும்னு நெனைக்கறியா..?”
”ஏய்..பரவாலல தாமரை..! உன் மனசு எனக்கு மட்டும் புரியாதா.? நான் உனக்காகவா சொல்றேன்..? உன் வயித்துல இருக்கற கொழந்தைக்காத்தானே… படுத்துக்கோ..” என நிலாவினி உன் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.
” ஐயோ… என்னங்க்கா… நீங்க…” என்று நீ .. பரிதவிக்க…
நான் சொன்னேன். ”நான் சொல்றத கேளுங்க ரெண்டு பேரும்..”
”என்ன…?”
” நீங்க ரெண்டு பேரும்.. பெட்ல படுத்துக்குங்க..! நான் தரைல.. படுத்துக்கறேன்..!”
”ஒன்னும் வேண்டாம்.. அதுக்கு நாங்க ரெண்டு பேரும் கீழ படுத்துககறோம்.! நீங்க மேலேயே படுத்துக்குங்க…” என உடனே சொன்னாள் நிலாவினி.
நான் சிரித்து… ”என்ன ஒரு கொடுமை..” என்றேன்.
”என்ன…?”
” ஒரு பொண்டாட்டிகூட வாழ்றவனெல்லாம்.. ஜம்முனு கால் மேல கால் போட்டு.. கட்டிப்புடிச்சு தூங்கறான்.! எனக்கு இங்க ரெண்டு பொண்டாட்டி இருக்காளுங்க.. ஆனா.. பாரு.. தலையணைய கட்டிப்புடிச்சுட்டு தூங்க வேண்டியிருக்கு…” என்றேன்.
நான் சொன்னது என்னவோ விளையாட்டுக்குத்தான். அது நிலாவினிக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் உனக்கு அது.. மன வருத்தத்தைக் கொடுத்து விட்டது. ”மூனு பேரும்.. பெட்லயே படுத்துக்கலாம்க்கா.. பாவம் அவரு… நா வேணா… திரும்பி படுத்துக்கறேன்..” என்றாய்.
நான் சிரித்து..”ஏய்.. அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்ல..! வேணா இப்படி பண்ணலாம்…!” என்றேன்
”என்னங்க…?”
”மூணு பேரும்.. பாய்லயே படுத்துக்கலாம்.. யாருக்கும் எந்த கஷ்டமும் இல்ல..” என நான் சொல்ல… இரண்டு பேரும் தலையாட்டினார்கள். நான் நடுவில் படுத்துக் கொண்டேன். என் வலப்பக்கம் நிலாவினியும் இடப்பக்கம் நீயும் படுத்துக் கொள்ள…. என் வாழ்வின் நிலை மாற்றங்கள் குறித்து வியக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. எத்தனை இன்னல்கள் வந்தாலும்.. இந்த சுமூகமான நிலையை இழந்துவிடக் கூடாது என்று.. எண்ணிக்கொண்டேன்.
டி வி ஓடிக்கொண்டேதான் இருந்தது. ஒரு மணிநேரம் கடந்த போது… நீ தூங்கியிருந்தாய். ஆனால் நிலாவினி தூங்காமல் விழித்திருந்தாள். நான் அவள் பக்கம் புரண்டு.. அவளை அணைத்து… ”நிலா….” என்றேன்.
இதற்கெனவே காத்திருந்தவள் போல… சட்டென என் பக்கம் புரண்டு.. என் மார்போடு ஒட்டிககொண்டாள். ”என்னை மன்னிச்சிருங்கப்பா..” என்ற அவள் குரல் உடைந்திருந்தது……!!!!
-சொல்லுவேன்…..!!!!
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000