நீ – 90

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Okkumkathai நான் வீட்டுக்கதவைத் தட்டிவிட்டு நிற்க… கதவைத் திறந்த நிலாவினி.. எனக்குப் பின்னால் நின்றிருந்த உன்னைப் பார்த்து.. ”ஆ..! வா.. தாமரை.. நல்லாருக்கியா..?” என்று கேட்டாள்.

நான் உள்ளே நுழைந்தேன். நீ ”நான் நல்லாருக்கேன்ங்க..! நீங்க எப்படி இருக்கீங்க..? உங்களுக்கு ஒடம்பு நல்லாருக்குங்களா..?” என்று கேட்டாய்.

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

” ம்..! நானும் நல்லாகிட்டேன்..! வா.. உள்ள வா..!!” என்று உன்னை வரவேற்று உபசரித்தாள்.!

நான் பயப்படுவதற்கு எந்த காரணமும் இருக்கவில்லை.

உள்ளே போனதும்.. நீ வாங்கி வந்தவைகளை நிலாவினியிடம் கொடுத்து.. ”உங்கள பாக்க வரமுடியல..! என்னை மன்னிச்சுருங்க..” என்றாய்.

” பரவால்ல விடு..! எங்கண்ணன் உன்கிட்ட நடந்துட்டதுக்கு.. நான்தான் உன்கிட்ட மன்னிப்பு கேக்கனும்…” என்று எந்த வித ஈகோவும் இலலாமல் அவள் உன்னிடம் சொன்னாள்.

உடனே நீ ”ஐயோ.. அதெல்லாம் நான் அப்பவே மறந்துட்டங்க. !” என்றாய்.

உன்னை உட்கார வைத்து விட்டு நான் உடை மாற்றி பாத்ரூம் போய் வந்தேன்.

நிலாவினி உன் நலன் பற்றியும் வேலை நிலவரம் பற்றியும் உன்னிடம் அக்கறையுடன் விசாரித்தாள். நீ வாங்கி வந்த பூவை எடுத்து வெளியே வைத்தவள்.. ”இதெல்லாம் எதுக்குப்பா வாங்கிட்டு வந்த..?” என்று கேட்டாள்

”ஐயோ.. அப்படி சொல்லாதீங்க..! நான் இது வாங்கினதே கம்மி..!” என்றாய்.

நீ வாங்கி வந்த பூவை உன்னிடமே கொடுத்தாள். ”நீ… வெச்சுக்கோ..! இனிமே இது உனக்குத்தான் பொருத்தமா இருக்கும்..!!” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு.. நீ மட்டும் அல்ல… நானும் ஆடிப்போனேன். ”ஏய்.. என்ன சொல்ற.. நிலா..?” என்று அவளைப் பார்த்துக் கேட்டேன்.

” ஏன்.. நான் இப்ப.. அப்படி என்ன சொல்லிட்டேன்..?” என்று கேட்டாள்.

”ஏன்.. நீ பூ வெக்கக்கூடாதுனு ஏதாவது இருக்கா..?அதுல என்ன பிரச்சினை உனக்கு. .?” என்று கேட்டேன்.

” ஒரு பிரச்சினையும் இல்ல..!” என்றாள்.

”அப்பறம் ஏன்… அப்படி சொல்ற..?”

சிரித்து.. உன்னைப் பார்த்து..”நான் உனக்கு எந்த கெடுதலும் பண்ண மாட்டேன். ! என்னை நம்பு..!!” என்றாள்.

”ஐயோ..! என்னக்கா சொல்றீங்க..? நான்.. உங்கள போயி…” என நீ பதறினாய்.

அவள் சிரித்து ”நீ… நொய் நொடி இல்லாம.. நல்லா இருக்கனும் தாமரை..! பூவ நீ வெச்சுக்கோ..! மனசுல வேற எதுவும் நெனச்சுக்காத..!!” என்றாள்.

நீ கண்கள் பனிக்க… ”எல்லாம் உங்க ஆசிக்கா…” என்று சட்டென குனிந்து அவள் காலைத் தொட்டாய்.

இப்போது அவள் பதறிப்போனாள். எனக்கே ஒரு நொடி திகைப்பேற்பட்டது..! ‘என்ன நடக்கிறது இங்கே..?’

நிலாவினி பதற்றம் தணயாமல் உன்னை நிமிர்த்தி.. ”ஏய்.. என்ன இது..? என்ன பண்ற…?” என தடுமாறினாள்.

”நீங்கள்ளாம் எனக்கு தெய்வங்க..” என்றாய்.

”கடவுளே..!!” என நெக்குருகிப் போய்.. அப்படியே உன்னைக் கட்டிக்கொண்டாள். அவள் கண்கள்கூட லேசாக கலங்கி விட்டது..!

நான் திகைப்புடன் நடப்பதை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தேன். நிலாவினி என்னைப் பார்த்துச் சொன்னாள். ”நீங்க.. இவளையே கல்யாணம் பண்ணிட்டிருந்துருக்கலாம்..! நான்லாம்.. குணத்துல இவளவிட சின்னவ..!”

நீ ”ஐயோ.. அப்படி சொல்லாதிங்க..! நீங்க எங்க.. நான் எங்க….” என்றாய்.

” இருந்தாலும்.. உன்னளவுக்கு நான் இல்ல… தாமரை..”

”ஐயோ..! நான்.. தாங்க.. ரொம்ப மோசமா… இருந்தங்க…” என்று நீ.. உன் கடந்த காலத்தைச் சொல்லவர… அதைப் புரிந்து கொண்ட நிலாவினி…

”ஏய். . அப்படியெல்லாம் சொல்லாத..!! அத மறந்துரு..!! நீ நல்லவ… நல்லவதான். .!!” என்றாள்.

எனக்கு உன்மீது இருந்த.. அபிப்ராத்தை விட… இப்போது நிலாவினி மீது.. மிக அதிகமக.. நல்ல அபிப்ராயம் உண்டானது..!!

அப்பறம்… பேச்சை மாற்றி.. மூவரும் சாப்பிட உட்கார்ந்தோம்..! நிலாவினி உன்னை மிக நன்றாகவே உபசரித்தாள்..!! சாப்பிட்ட பின்பு.. நீ மெதுவாக.. ”நான்.. போகட்டுங்களா..?” என்று என்னிடம் கேட்டாய்.

உடனே நிலாவினி ”எங்க போற..?” என்று கேட்டாள்.

”அஙகீங்க… என் வீட்டுக்கு..?” என நீ தயக்கத்துடன் சொல்ல…

அவள் ”இதுவும் உன் வீடு மாதிரிதான்..! இன்னிக்கு நீ இங்கதான்.. எங்கயும் போகக்கூடாது..! சொல்லுங்க அவளுக்கு..! ” என்று என்னிடம் சொன்னாள்.

நான் உன்னைப் பார்க்க.. நீ மிகவும் பரிதாபமாக என்னைப் பார்த்தாய். நான் சிரித்து ”இது மேலிடத்து உத்தரவு..! மீறனும்னு நெனைக்காத..! இருந்துரு..!!” என்றேன்.

நிலாவினி ”இருந்துட்டு.. காலைலவேணா.. இப்படியே வேலைக்கு போய்க்கோ..! இந்த வீட்ல இருக்கறது உனக்கொன்னும் புதுசு இல்ல..!! என்னை பத்தியும் கவலைப்படாத.. உன் வீட்ல இருந்தா.. நீ எப்படி பிரியா இருப்பியோ.. அப்படியே இரு..!!” என்றாள்..!

நீ.. மேலே பேசாமல்.. சிரித்தாய்..!!

இரவில் நீண்ட நேரம் மூவரும் பேசினோம்..! அதில் பெருமபாலும் உன்னைப் பற்றியதுதான்.! பார்க்கப்போனால் நான் அதிகம் பேசவே இல்லை..! நிலாவினியும்.. நீயும்தான் பேசினீர்கள்..!!

நாம் மூவரும் பேசிக்களைத்து தூங்கியபோது நள்ளிரவு தாண்டி விட்டது..!!

மீண்டும் நான் காலையில் கண்விழித்த போது.. மணி ஏழரையாகியிருந்தது..! நான் எழுந்திருக்க மனமின்றி படுத்துக்கொண்டிருந்த போது.. நீ காபியுடன் வந்தாய்..!

”காபி குடிங்க..”

”ம்.. ம்ம்..! நீ எப்ப எந்திரிச்ச..?”

”நேரத்துலயே… எந்திரிச்சுட்டங்க…!!”

”நிலா…?”

”சாப்பாடு செஞ்சிட்டிருக்குங்க..”

நான் எழுந்து பாத்ரூம் போய் வந்து காபியை வாங்கிக்கொண்டு சமையல் கட்டுக்குப் போனேன்..! நிலாவினி என்னைப் பார்த்து சிரித்தாள். ”குட்மார்னிங்…”

” குட்மார்னிங்…!!” என்று அவள் பக்கத்தில் போய் சமையல் மேடைமேல் உட்கார்ந்து கொண்டு காபி குடித்தவாறு.. அன்றைய சமையல் பற்றிப் பேசினேன்..!!

எட்டுமணிக்கெல்லாம் நீ குளித்து வேலைக்குப் போகத் தயாராகியிருந்தாய்..!

உணவு வேலைகளை முடித்துவிட்ட நிலாவினி..! ”இன்னிக்கும் இருந்துட்டு போயேன் தாமரை..?” என்றாள்.

நீ தயக்கத்துடன் ”இல்ல.. பரவாலலீங்க்கா..! நான் அப்பப்ப வந்து உங்கள பாத்துட்டு போறேன்..” என்றாய்.

”எங்கண்ணன நெனச்சு பயப்படறியா..?” என்று கேட்டாள் நிலாவினி.

” ஐயோ.. அப்படியில்லீங்…”

நான் குறுக்கிட்டு ”சரி.. பரவால்ல.. நீ.. அடிக்கடி வந்து போய்ட்டிரு..!” என்றேன்.

”சரிங்க..!!” என்றாய்.

காலைச் சிற்றுண்டியைச சாப்பிட்ட பின்… உனக்கு டிபன் பாக்ஸிலும் உணவைப் போட்டுக் கொடுத்து உன்னை அனுப்பி வைத்தாள் நிலாவினி..!!

அவள் செயல் எனககேகூட கொஞ்சம் வியப்பையும்.. நிறைய குழப்பத்தையும்தான் ஏற்படுத்தியது..!! இருப்பினும் நான் அவளிடம் அதுபற்றி எதுவும் பேசவில்லை..!!

மேலும் இரண்டு நாட்கள் கழித்து… ஒரு காலைவேளை.. நீ வந்திருந்த போது.. என் அப்பாவின் இரண்டாவது மனைவியும்.. அவளது மகளும்.. நிலாவினியைப் பார்க்க.. என் வீட்டிற்கு வந்திருந்தனர்..!!

இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் இங்கயே வந்துவிடுவார்களாம்..! வீடு கூட பார்த்துவிட்டதாகச் சொன்னார்கள்..!! அவர்களையும் நன்றாகத்தான் உபசரித்தாள் நிலாவினி. அவர்கள் வந்த சிறிது நேரத்தில் நீ வேலைக்குப் போக.. விடைபெற்றுப் போனாய்..! நீ போனதும்.. உன்னைப் பற்றி நிலாவினியிடம் கேட்டாள் என் அப்பாவின் மனைவி..! ”இந்த பொண்ணு யாரு..?”

நான் இந்தக் கேள்வியை எதிர் பார்க்கவில்லை. நீ என்ன சொல்லப் போகிறாயோ.. என்று நான் குழம்பிக்கொண்டிருக்க.. நீ வெகு இயல்பாக சிரித்த முகத்துடன்… ” என் பிரெண்டு..!! ரொம்ப நல்ல பொண்ணு..!!” என்றாள்.

அப்பறம் பேச்சு மாறியது..! என் அப்பாவின் மனைவியின்.. மகளின் படிப்பு முடிந்து விட்டதாம்..! என் அக்கா மூலமாக… அவளுக்கு தெரிந்த இடத்தில் ஏதோ வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்..! சரியான மாப்பிள்ளை அமைந்தால்… அவளது திருமணத்தை முடித்து விடுவார்களாம்…!! இதெல்லாம்.. என் மனைவியிடம்… அவர்களாகவே சொன்ன செய்தி..!! என் தங்கை என்று உரிமை பெற்ற அந்தப் பெண்.. என்னுடன் எவ்வளவோ பேச முயன்றாள்..! ஆனால் நான்தான் அவ்வளவாகப் பிடிகொடுக்காமலே பேசினேன்…! அது ஏன் என்பதுதான் எனக்கும் புரியவில்லை..!! என் அப்பாவின் மேலுள்ள என் கோபம்தான்… என்னை அப்படி நடந்து கொள்ள வைக்கிறது.. என்று தோண்றியது எனக்கு..!!

அவர்கள் போனபின்… என் மனைவி அதே கேள்வியை என்னிடம் கேட்டாள். ”அந்த பொண்ணுகிட்டக்கூட ஏன் சரியா பேசமாட்டேங்கறீங்க..? அவ என்ன பண்ணா உங்களை..? நீங்க ஒரு அண்ணாங்கற பாசத்துலதான.. அந்த பொண்ணு உங்ககிட்ட வந்து பேசுது..? ஒரு நாலு வார்த்தை… நல்லா..கலகலனு பேசினாத்தான் என்ன..?”

அவளை அணைத்தவாறு சொன்னேன். ”எனக்கும் அது புரியுதுமா..! ஆனா.. ஏனோ.. என்னால… அப்படி.. அவகூட சிரிச்சு பேச முடியல..!!”

”இப்படியே இருக்காதிங்க..! உறவுகளுக்குள்ள.. நல்லதும் கெட்டதுமா.. நாலு விசயம் இருக்கத்தான் செய்யும்..! அத அட்ஜஸ்ட் பண்ணிட்டுத்தான் வாழனும்..!! எனக்காக.. நீங்க.. அந்த பொண்ண.. உங்க தங்கச்சியா ஏத்துகிட்டுத்தான் ஆகனும்…!!” என்றாள்….!!!!!

-சொல்லுவேன்……!!!!!!

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000