நீ – 86

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Vayiru என் மனைவி.. ஓரளவு மனம் தேறியிருந்தாள். ஆனாலும் அவள் முகம் எப்போதும் இருகிப்போயே இருந்தது..! சோகம்.. துக்கம்.. விரக்தி.. என ஒட்டுமொத்தமாகச் சேர்ந்திருந்த அவள் முகத்தில் சிரிப்பை வரவழைக்க.. எண்ணி.. ”ஒரு ஜோக் சொல்லட்டுமா..?” என்று கேட்டேன்.

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

மெதுவாக என்னை ஏறிட்டுப் பார்த்தாள். புரியாத பார்வை..! ‘இது என்ன மடத்தனம்.?’ என்பது போண்ற பார்வை..!

”உன்னை சிரிக்க வைக்க…” என விளக்கினேன்.

மறுப்பாகத் தலையாட்டினாள். ”ம்கூம்..”

” ஏன்… மா…?”

”என்னால சிரிக்க முடியாதுப்பா..?”

” பரவால்லடா..! சொல்றேன் கேளு..! சிரிக்காட்டா.. பரவால்ல..!!”

”கஷ்டம்பா…” என பெருமூச்செறிந்தாள்.

”ஏய்.. உன் முகத்துல சிரிப்பே.. இல்லாம.. உன்னை பாக்க.. எவ்ளோ கொடுமையா இருக்கு தெரியுமா..?”

என்னை உற்றுப் பார்த்தாள். அவளது தோளை அணைத்தேன். ”சரி.. பரவால்ல விடு..”என்க.. என் தோளில் தலை சாய்த்தாள். அவள் தோளை வருடினேன். ”உன்னோட இருக்கமான முகத்த பாத்து… பாத்து.. எனக்கும் சிரிப்பே வர்றதில்ல..” என்றேன்.

மெல்ல.. ”சரி… சொல்லுங்க..” என்றாள்.

”என்னது..?”

”ஜோக்..?”

”நான்..!” என்றேன். என் மனநிலை மாறி.

புரியாமல் என் முகத்தைப் பார்த்தாள்.

”நான்தான் ஜோக்கர்..! சொல்ல வந்த எல்லா ஜோக்கையும் மறந்துட்டு.. உன்னை சிரிக்க வைக்க நெனைக்கறேனே..! என்னை பாத்தே.. சிரிச்சிக்கோ..!!” என்றேன்

என் வயிற்றைச் சுற்றி கை போட்டு வளைத்து என்னைக் கட்டிக்கொண்டாள். ”எனக்காக நீங்க.. மெனக்கெடறத பாத்தா.. எனக்கு கஷ்டமா இருக்கு..! நான் என்னப்பா பண்றது…? என்னால நார்மலா.. பீல் பண்ணவே முடியல…!” என கலங்கின குரலில் சொன்னாள்.

”போனத விடும்மா..! அதையே நெனச்சிட்டிருக்காத…!”

” கோபமா.. என்மேல..?”

” சே… சே..!! ஐ லவ் யூ…!!”என அவள் நெற்றியில் முத்தமிட்டேன்.

சில நிமிடங்கள் கழித்து… ”குணா.. என்கூட பேசறதே இல்ல..” என்றாள்.

”கோபமிருக்கும்..! மறந்துருவான்..! நீ ஒன்னும் பீல் பண்ணிக்காத..!!”

”உங்களோட பேசறானா..?”

” ம்…ம்ம்..! அப்பப்போ… ரெண்டொரு வார்த்தை…!!”

”நான்.. கண்டிச்சது.. தப்பா..?” என்று கேட்டாள்.

”சே… சே…!!” என அணைத்துக் கொண்டேன்.

சிறிது பொருத்து.. ”தனிமை.. ரொம்ப கொடுமையா இருக்கு..” என்றாள்.

”தனிமையா..? உனக்கென்ன தனிமை..? உன் வீட்ல உன்னைச் சுத்தி… நான்.. உங்கம்மா… உங்கப்பா.. குணா.. நித்யான்னு இத்தனை பேர் இருக்கோமே..?”

”என்னருந்தாலும்.. என் மனசுல என்னமோ… நான் மட்டும் தனியாய்ட்டாப்ல ஒரு பீலிங் எப்பவுமே இருக்கு..! மனசெல்லாம் சொல்ல முடியாத ஒரு வெறுமை..! என்ன செஞ்சாலும் அதை தவிர்க்கவே முடியல..! ரொம்ப கஷ்டமா இருக்கு..! இதெல்லாம் ஒரு பெரிய இழப்பே இல்ல… எனக்கு நீங்க இருக்கீங்கன்னு.. என் புத்தி சொன்னாலும்.. மனசு மட்டும் சமாதானமாகறதே இல்ல…!!” எனறவளை… இருக்கி அணைத்துக் கொள்வது தவிற.. இப்போதைக்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை..!!

நான் ஸ்டேண்டுக்கு கிளம்பும் போது.. நித்யா ஹாலில் இருந்தாள். என்னைப் பார்த்ததும்… ”ஹாய்… பிரதர்..” என்று சிரித்தாள். இள மஞ்சளில் ஒரு சல்வார் அணிந்திருந்தாள்.! அது.. அவளது நிறத்தை பளிச்சென எடுத்துக் காட்டியது..! உறுத்தலா இல்லாத.. அளவான மேக்கப் செய்திருந்தாள். அவளது முகம் பிரகாசத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது..!

”ஹாய்..! என்ன.. ரொம்ப பிரைட்டா இருக்க போலருக்கு..?” என்று கேட்டேன்.

”அப்படியா தெரியறேன்..?” என்று கேட்டாள்.

”ம்.. ம்ம்..! ஏதாவது ஸ்பெஷல்..?” என்றேன். அவளது உற்சாக உணர்வு.. என் மனநிலையிலும் மாற்றத்தை உருவாக்கியது.

” அதெல்லாம் இல்ல..! நார்மலாதான் பண்ணேன்..!”

”ஃபேஷியல்..?”

”ம்..ம்ம்..!” லேசான புன்சிரிப்புக் காட்டினாள்.

”ஸோ… ஸ்வீட்…!!” என்றேன்.

”தேங்க்ஸ்ணா..! நிலா..?”

” இருக்கா..! அத்தை எங்க போனாங்க..?”

”வெளில போனாங்க..! உங்கள்ட்ட.. ஒரு கேள்வி..”

”ஆஹா..!”என்று சிரித்தேன் ”தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே விசயம்..?”

அவளும் சிரித்தாள் ”சரி.. அப்ப புடிச்ச விசயம் என்ன..?”

”அத.. இன்னொரு சந்தர்ப்பத்துல சொல்றேன்..”

”சரி.. நான் கேக்கலாமா..?”

” ம்..ம்ம்..?”

” நீங்க ரசிக்கற மிருகம்… என்ன..?” என்று கேட்டாள்.

‘ஹா.. இவ்வளவுதானா.?’ சட்டென தோண்றியது. ”மனசு…” என்றேன்.

கண்களை விரித்து பளீரெனச் சிரித்தாள் . ”ஓ… வாவ்..!! கிளாசிகல்.. ஆன்ஸர்..!!”

இது என் பதில் இல்லை. என்பதை நான் அவளிடம் சொல்லவில்லை. ”சரி… உனக்கு..?” என்று அவளைக் கேட்டேன்.

” ம்… இந்த நிமிசத்திலேருந்து மனசு..” என்றாள்.

” ம்.. ம்ம்..! குட்…!!”

”மனசு..! என்ன.ஒரு.. ரசணையான.. விந்தையான.. மிருகம் இல்ல. ..?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.

” யா…!!” என்றேன் ”அதுலயும் ஒரு ஸ்பெஷல் இருக்கு தெரியுமா..?”

” ஸ்பெஷலா..?”

” லேடீஸ் மனசு.. கொஞ்சம்.. இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும்..”

”அது.. எப்படி..?”

”ஆண்களோட மனசு.. தந்திரம் பண்ணும்…”

”ம்…ம்ம்..! சரி… பெண்களோட மனசு..?”

” ரசணையான பொய்கள் சொல்லும்..”

”ஓ..!!” என்று லேசாக வியந்தாள் ”ம்.. ம்ம்..! நீங்க நல்ல கலைஞர்தான்..!!”

ஆஹா…! அழகான பெண்கள் வாயால் புகழப்படுவதுகூட… எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது..?

நித்யா ”எப்படி.. இந்த.. மனசு பத்திலாம்.. ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க..?” என்று கேட்டாள்.

”ம்.. ம்ம்..! அது..ஒரு ஆர்வத்துலதான்..!”

”ம்..ம்ம்..! அப்றம்… இன்னொரு கேள்வி…?”

”இது… என்ன கேள்வி நேரமா..?” என நான் கேட்க.. அவளும் சிரித்தாள்.

”சரி… கேளு..” என்றேன்.

” நீங்க ரசிக்கற பறவை..?”

”இமைகள்…!!”

”ஹா…!! வெரி நைஸ்..!!” என்று முகம் அன்னாந்து சிரித்தாள்.

”இதுலயும் பெண்களுக்குத்தான் முதலிடம்…!!” என்றேன் ”சரி… நீ ரசிக்கற பறவை..?”

”இமைகளே…!! இந்த நிமிசத்துலருந்து..!! இப்ப புரியுது..”

”என்ன…?”

” உங்களால.. நிலா.. எப்படி கவரப்பட்டான்னு…”

நான் புன்னகைக்க மட்டும் செய்தேன்..! இது போலெல்லாம் நான்.. நிலாவினியிடம்… எங்கள் திருமணத்துக்கு முன் பேசியதே இல்லை..!

”நிலா… லக்கிதான்..!!” என்றாள்.

”அது.. சரி..! இதப்போய்.. அவகிட்ட எதுவும் சொல்லிடாத..!”

” ஏன்.. சொன்னா என்ன..?”

”அதவிடு..! ஆமா என்னை லக்கின்னியே… ஏன் நீ லக்கி இல்லையா..?” என நான் கேட்க…

”வேண்டாம்..! நான் மூடு அப்செட்டாகிருவேன்..!!” என்றாள்.

”ஏய்.. குணாவும்.. கிட்டதட்ட என்னை மாதிரிதான்..”

”ப்ச்..!” என லேசாக முறைத்தாள் ”நீங்க கெளம்பலை..?”

நான் சிரித்து ”என்ன.. இது..?” என்றேன்.

”ஐய்யோ..! பேசாம போங்கண்ணா..நீங்க..!!” என்றாள்.

என் குரலை மெதுவாக தணித்துக்கொண்டு கேட்டேன். ”ஏன் நித்தி.. ஏதாவது பிரச்சினையா..?”

”இ.. இல்லண்ணா…”

”ஏய்.. பொய் சொல்லாம சொல்லு..”

”இல்லண்ணா… அப்டிலாம் எதுவும் இல்ல..!” என்று குழைந்தாள்.

”ஓகே..!நம்பறேன்..! பட்.. அப்படி ஏதாவது இருந்தா.. தைரியமா.. என்கிட்ட நீ சொல்லலாம்..!”

”உங்களபத்தி.. நீங்க சொல்லனுமா..? அப்படி இருந்தா… நிச்சயமா.. சொல்லுவேண்ணா..! இப்ப.. லேசான.. இதுதான்..!!”

”குடும்பம்னா… அப்படித்தான்..!”

” ம்.. ம்ம்..! என்னருந்தாலும் உங்களவுக்கு.. நான் இல்ல..”

”ஏய்.. எத சொல்ற..?” என்றேன்.

என் மனைவி இருக்கும் அறையைப் பார்த்துவிட்டுக் கேட்டாள். ”தாமரைனு எனக்கு ஒரு அண்ணி.. இருக்காளாமே..?”

நான் திணறினேன். ”உன்கிட்ட யாரு சொன்னது..? குணாவா..?”

”ம்…ம்ம்..!! நீங்க பெரிய ஆளுதான்..!!”

”உனக்கும் தெரிஞ்சு போச்சா..?”

”அதுசரி.. இதுக்கு நிலா.. எப்படி ஒத்துக்கிட்டா…?”

”அது ஒன்னுதான்..! இப்ப வரை.. எனக்கே.. புரியாத ஒரு புதிர்…!!”

”அது எப்படி போகுது..?”

”இப்பவரை நல்லாத்தான் போகுது..” என்றேன்.

”அலோ.. என்கிட்ட சொன்னதுனால.. ஏதாவது ஆகிருமோனு பயப்படறீங்களா..?”

”சே… சே..! நான் அந்த மீனிங்ல சொல்லல.. நித்தி..!”

”ஓகே.. ஓகே..!! என்ஜாய்… பிரதர்..!!” என்று கிண்டலாகச் சிரித்தாள்

”சரி..நான் கிளம்பறேன்..! அப்றம் பேசிக்கலாம்..!!”

”ஓகே..ண்ணா..!! டேக் கேர்…!!”

”தேஙக் யூ… நித்தி..!!”

பை.. பை…!!” என கையசைத்து டாடா காட்டினாள்.

”பை…!!” என நானும் கையசைத்து விட்டு.. வெளியேறினேன்….!!!!!

-சொல்லுவேன்……!!!!!!

– உங்கள் கருத்துக்கள்…..??????

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000