This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
Sappum தொடர்ந்தார் போல.. இரண்டு வாரங்களுக்கு மேலாக.. நீ.. நிலாவினியைப் பார்க்க வரவில்லை..! அது எனக்கு சற்று உறுத்தலாக இருந்தது..! அதை உனனிடமே.கேட்க நினைத்தேன்..! இரவு.. உன்னை பேருந்து நிலையத்தில் வைத்துக் கேட்டேன். ”நிலாவ.. பாக்கனும்னு.. ஒரு எண்ணமே வரலையா.. உனக்கு..?”
இந்த கதையை எழுதியவர் : MUKILAN
நீ.. திடுக்கிட்டு என்னைப் பார்த்தாய்.
”இந்த மாதிரி நேரத்துலதான்டி.. மனவருத்தத்துல இருக்கற ஒருத்தருக்கு.. ஆறுதல் தேவைப்படும்..! நிலா ரொம்பமே இடிஞ்சு போயிருக்கா.. அவள இப்படியே விட்டா.. அவ தனிமை நோய்லயே வாடி.. பைத்தியமாகிருவா போலருக்கா..! ஒரு எட்டு வந்து பாக்கறதுல.. உனக்கென்ன கஷ்டம்..?” என்றேன்.
” ஐயோ..” எனப் பதறினாய் ”அப்படி.. இல்லீங்க.. அது.. வந்து…”
” அவ ஒன்னும்.. மோசமானவ.. இல்லேன்னு.. உனக்கே தெரியும்..! அவ உன்ன எப்படியெல்லாம் பாத்துட்டா..? அப்பயும் நீ.. வராம இருக்கறது.. நல்லதில்ல..”
”நா… நாளைக்கு.. வரங்க..” என்றாய்
” ம்..! சரி… வந்து பாரு..!!” என்றேன்.
”வர்டறங்க…” என.. நீ மனவருத்தத்துடன்தான்.. விடைபெற்றுப் போனாய்..!!
மறுநாள் காலை பத்து மணியிருக்கும்.. என்னைப் பார்க்க… ஸ்டேண்டுக்கே வந்து விட்டாள் தீபா.! புடவையில் இருந்த.. அவளைப் பார்த்ததும்.. இரண்டு நிமிடம் பிரம்மித்து.. பின் சுதாரித்துக்கொண்டு… பேசினேன். ”ஹேய்..! கருப்பு…!! வா.. வா.. என்ன.. இங்க…?”
பற்கள் பளீரிடச் சிரித்தாள் ”உங்கள பாக்கலாம்னுதாங்க வந்தேன்..!!”
” அப்படியா..? வா.. வா..!! எப்ப வந்த ஊர்லருந்து..?”
”நான்.. வந்து ரெண்டு நாளாச்சுங்க..”
”ஓ..! அவ.. எதும் சொல்லல..! சரி.. எப்படி இருக்கே..?”
” நான்.. நல்லாருக்கங்க..! அக்காக்கு எப்படிங்க இருக்கு..?”
” ம்.. ம்ம்..! தேவலை..!! உன் புருஷன்..?”
” ஊட்ல இருக்காப்லிங்க..!”
” நீ மட்டும்தான் வந்தியா..?”
” ஆமாங்க..!!”
” ஏதாவது.. ஜோலியா..?”
”ஆமாங்க…”
” உன் புருஷன விட்டுட்டு.. தனியா வர்ற அளவுக்கு.. அப்படி.. என்ன ஜோலி கருப்பு..?” என நான் கேட்க..
சுற்றிலும் பார்த்துவிட்டு.. ” உங்ககிட்ட.. கொஞ்சம் பேசனுங்க..” என்றாள்.
”என்கிட்டயா..?”
” ஆமாங்க..! நான் வந்ததே உங்ககிட்ட பேசனும்னு தாங்க..”
கொஞ்சம் திகைப்படைந்தேன். ”என்கிட்ட பேசனும்னு.. வந்தியா…?”
” ஆமாங்க..”
” அப்படி.. என்ன பேசனும்..?”
”கொஞ்சம்.. தனியா…! ஏதாவது சாப்பிட்டே…பேசலாங்களே..?” என்றாள்.
”ம்..! சரி… நட..! என்ன சாப்பிடற..? காபி.. டீ…?”
”அது வேண்டாங்க..”
” ஜூஸ்…?”
” ம்..! வாங்க…!!” என முன்னால் நடந்தாள்.
சிறிது தள்ளி இருந்த…பழக்கடைக்குக் கூட்டிப் போனேன். இரண்டு ஜூஸ் சொல்லிவிட்டு உள்ளே போய் உட்கார்ந்தோம்..!! திருமணத்துக்குப் பிறகு… அவளது இளமை இன்னும் கொஞ்சம் மெருகேறியிருந்தது…! பருவக்கன்னங்களில் செழுமையும்.. கண்களில் சந்தோசமும் கூடியிருந்தது..!!
”சொல்லு.. அப்படி.. என்ன விசயம்..?” என்று கேட்டேன்.
” மொதல்ல.. என்மேல.. ஏதாவது கோபமானு சொல்லுங்க..” என்று கேட்டாள்.
”எதுக்கு..?”
”இல்ல.. அக்காவ பாக்க வரலேன்னு..?”
”ஏய்.. பரவால்ல விடு..!!”
” ஸாரிங்க..! நெனச்சேன்..! ஆனா வரமுடியல..!!”
” பரவால்ல விடு.. கருப்பு..! நீ வந்த விசயம் என்னன்னு சொல்லு..” என்றேன்.
ஜூஸ் வந்தது..! அவளிடம் ஒன்றைக்கொடுத்து விட்டு.. நானும் ஒன்றை எடுத்துக் கொண்டேன்.! ”ம்… குடி…”
ஸ்ட்ராவை வாயில் வைத்து கொஞ்சமாக உறிஞ்சி விட்டு.. என்னைப் பார்த்தாள். மெதுவாக.. ” செங்காளுக்கு.. ஒரு பிரச்சினை..” என்றாள்.
”என்ன பிரச்சினை..?”
”நேத்து.. அவள பாத்து.. சத்தம் போட்டிங்கன்னா..” என்றாள்.
”நானா..?”
”அக்காவ பாக்க வரலேனு..?”
”சத்தம் போடல..! ஆனா…”
”ராத்திரி பூரா.. ஒரே அழுகை..! தப்பு.. அவமேல இல்ல..” என்றாள்.
குழப்பத்துடன் அவளைப் பார்த்தேன். ”என்ன சொல்ற.. தீபா..?”
”என்னைவே.. அவ.. உங்ககிட்ட சொல்லக்கூடாதுனு சொன்னா..! ஆனா எனக்குத்தான் மனசு பொருக்கல..! இப்ப நான்.. உங்கள பாக்க வந்ததுகூட.. அவளுக்கு தெரியாது..! தெரிஞ்சா.. திட்டுவா..” என்றாள்.
இப்போதும் புரியவில்லை. ”நீ… என்ன சொல்றேன்னு.. புரியல..! கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு..!!” என்றேன்.
”அவ… ரெண்டு வாரமா.. எவ்ளோ கஷ்டப்படறா தெரியுங்களா..?”
”ஏன்..? இப்பத்தானே.. ஆஸ்பத்ரியெல்லாம் போய்… ஆபரேசன் எல்லாம் பண்ணி… மறுபடி ஏதாவது பிரச்சினையா…?”
”ஐயோ.. அதெல்லாம் இப்ப.. எந்த பிரச்சினையும் இல்லிங்க..” என்றாள்.
”அப்றம்.. வேற என்ன பிரச்சினை..?”
”அககாவ பாக்க அவளுக்கும் ஆசைதாங்க..! விட்டாக்கா.. அவ நாள் பூரா.. அக்காகூடவே இருந்துருவா… ஆனா…” என தயங்கினாள்.
”ம்.. சொல்லு…!!”
”அவள… அந்த வீட்டுப்பக்கம்.. வரக்கூடாதுனு சொல்லிட்டாங்க..” என்றாள்.
திடுக்கிட்டேன் ”என்னடி சொல்ற..?”
”ஆமாங்க..!!”
” யாரு…. சொன்னது…?”
”உங்க… மச்சான்…”
”குணாவா..?”
” ஆமாங்க…”
” எப்ப…?”
”இது நடந்து ரெண்டு வாரமாச்சுங்க..! அவ.. என்கிட்ட வந்து.. சொல்லிட்டு… ஒரே ஒப்பாரி..!!” என்றாள்.
”இதை.. ஏன்.. மொதவே என்கிட்ட சொல்லல..?”
” இத.. எப்படிங்க… அவ வந்து உங்ககிட்ட சொல்ல முடியும்..? அதனால உங்க குடும்பத்துல.. ஏதாவது பிரச்சினை வந்துட்டா…? அதனாலதாங்க.. அவ சொல்லல..!!” என அவள் சொல்ல…. என்னுள் பொசுபொசுவென ஒரு கோபம் எழுந்தது… குணா மீது..!
தீபா தொடர்ந்து ”இதெல்லாம் விட… இன்னொன்னு சொல்லிருக்காருங்க..! அதைக்கேட்டுத்தான்… எனக்கே ரொம்ப கஷ்டமா போச்சு..” என்றாள்.
”என்ன…?”
”உங்கள விட்றச்சொன்னாருங்களாம்..! உங்கள விட்டுட்டு.. உங்களுக்கு பதிலா.. அவரு வர்றதா சொன்னாருங்களாம்..! அதோட.. உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து… வாரத்துல ஒரு நாள்.. வெளில போலாம்.. நம்ம பிரெண்ட்ஸ் எல்லாரும் ஜாலியா இருக்கலாம்..! கமிட்டானா… உனக்கு நல்ல அமௌண்ட் தரோம்னெல்லாம் சொல்லியிருக்காருங்க..! அதத்தாங்க.. அவனால தாஙகிக்கவே முடியல…! பாவம்.. எப்படி அழறா தெரியுங்களா..? அவ ஒன்னும் உத்தமி இல்லதாங்க..! அப்படி இருந்தவதான்…! ஆனா நீங்க என்னிக்கு அவ வாழ்க்கலை வந்தீங்களோ.. அன்னிலருந்து அவ.. சுத்தமாவே மாறிட்டா..!!” என்றாள்.
அவள் சொனனதைக் கேட்டதும்.. மிகவுமே கொதிப்படைந்து விட்டேன் நான்..! குணா மீது.. ஒரு பக்கம் ஆத்திரம் கொப்பளிக்க.. மறுபக்கம்.. உன் மீது கோபமும்.. ஆதங்கமும் உண்டானது..! எனக்கு உடனே.. உன்னைப் பார்க்க வேண்டுமெனத் தோண்றியது..! என் ஜூஸை.. ஒரே தம்மில் குடித்துவிட்டு தீபாவிடம் சொன்னேன். ”ஜூஸ குடி..! நான் இப்பவே.. அவளப் பாத்து.. நாலு அறை விடனும்..!!”
தீபா உடனே பதற்றத்துடன் சொன்னாள். ”இன்னிக்கு அவ வேலைக்கு வல்ல…”
”ஏன்…?”
”அவளுக்கு மனசு செரியில்லேன்னு வீட்லதான் இருந்தா..! நான் இங்க… மார்க்கெட் போறதா சொல்லிட்டு வந்தேன்..! ஆனா உங்கள பாக்கத்தான் வந்தேன்னு.. அவளுக்கு தெரியாது..!!”
”ஓ..! சரி.. இப்ப வீட்லதான இருக்கா..?”
”ம்… ம்ம்..!!” என்று விட்டு மீதி ஜூஸையும் குடித்தாள்.
நான் எழுந்தேன். ”நீ என்ன பண்ற.. தீபா..! என் கூட வர்றியா… இல்ல…?”
”எங்கீங்க..?” என்று கேட்டுக்கொண்டே அவளும் எழுந்தாள்.
”அவள பாக்கத்தான்.. போறேன். .”
” வர்றங்க..! ஆனா.. மார்க்கெட் போகனுங்க..”
புதிதாக திருமணம் ஆனவள். ஒருவேளை என்னுடன் வருவதில்.. ஏதாவது பிரச்சினைகள் வரலாம் என்று தோண்றியது. ”சரி.. அப்ப நான் போகட்டுமா..?” என்றேன்.
”இப்பவே… அவள பாக்கனுங்களா..?” என்று கேட்டாள்.
”ஆமா..! இப்ப இருக்கற ஆத்திரத்துக்கு.. அவளப் பாத்து.. அவ காது ஜவ்வு கிழியற மாதிரி ஒரு அறை விடனும்..” என்றேன்.
உடனே ”ஐயோ.. வேணாங்க..! அவள அடிச்சிராதிங்க.. அவ தாங்க மாட்டா..! நானும் உங்ககூடவே வர்றேன்..” என்றாள்.
”மார்க்கெட்…?”
” அது… பரவால்லீங்க…”
”ம்.. சரி.. வா..!!” என வெளியேறினேன் ” நீ இங்கயே நில்லு..! நான் போய் கார எடுத்துட்டு வந்தர்றேன்..!” என அவளை கடை முன்பாக நிறுத்திவிட்டுப் போய்.. காரை எடுத்து வந்தேன்.
கதவைத் திறந்து பின்னால் உட்கார்ந்தாள் தீபா.
” போலாமா..?” என்று கேட்டேன்.
”ஒரு நிமிசம்.. அப்படியே.. மார்க்கெட் பக்கம் போனீங்கன்னா…” என்று…சிரித்தாள்.
”ம்..!” அவளுக்காக மார்க்கெட் போனேன்.
அவசரமாக இறங்கி.. ஓடினாள். கொஞ்சம் தக்காளி.. வெங்காயம்.. பூண்டு.. காய்கறியெல்லாம் வாங்கி வந்தாள். காரில் உட்கார்ந்து ”ம்.. போலாம்..” என்றாள்.
”நேரா போயிடலாமில்ல…?”
” ம்.. ம்ம்..! போலாங்க..!!”
பத்ரகாளி அம்மன் கோவில் ரோட்டில் கார் போக.. கொஞ்சமாக முன்னால் சாய்ந்து கேட்டாள். ”கோபமா இருக்கீங்களா..?”
”ஏன் தீபா..?”
” பாவங்க..! அவள அடிச்சிராதிங்க..! எனக்காக.. ப்ளீஸ்…” என்றாள்.
”ஏன்டி.. இவ்ளோ நடந்துருக்கு..! அதுக்கப்பறம்.. என்னையும் பாத்துருக்கா..! அப்பவும் எனகிட்ட சொல்லாம மறைச்சிருக்கா.. அவளை அப்படியே விடச்சொல்றியா..?” என நான் ஆதங்கத்தோடு சொல்ல…
” ஐயோ.. வேண்டாங்க..! அப்படி உங்களுககு அடிக்கனும்னு இருந்தா.. என்னை வேணா அடிச்சிககுங்க..! நான் வாங்கிக்கறேன்…!!” என்றாள் தீபா….!!!!!!
– சொல்லுவேன்……!!!!!!!
NEXT PART
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000