♥ நீ -54♥(வாசகர் கதைகள்)

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

”வாடா..” என்று மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள் என் அக்கா. அடுப்படியில் ஏதோ வேலையாக இருக்க வேண்டும் ”புது மாப்பிள்ளை…! எங்க உன் பொண்டாட்டி..?”

”அவ.. வீட்ல இருக்கா..”

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

”எப்ப வந்தீங்க… ஊட்டிலருந்து..?”

” நேத்து.. ”

”நல்லா.. ஊரச்சுத்தினீங்களா..?”

”ம்..ம்..!!”

”உன் மூஞ்சப்பாத்தாலே தெரியுது..” என்று சிரித்தாள் ”என்னவோ சொன்னாப்ல..”

”சரி.. எங்க ஒருத்தரையும் காணம்..?”

”அம்மா குளிச்சிடடிருக்கு..! குழந்தைங்க ஸ்கூல் போய்ட்டாங்க..”

”ஏன்… நீ போகல..?”

”எனக்கு ஒடம்பு கொஞ்சம் செரியில்ல..! அதான் லீவ் சொலலிட்டேன்..!”

”என்னாச்சு.. ஒடம்புக்கு. .?”

”கொஞ்சம்.. ஃபீவரிசா இருக்கு..! டேப்லெட் போட்றுக்கேன்..! உக்காரு காபி போடறதா..?”

”இல்ல.. வேண்டாம்..!” சோபாவில் சாய்ந்தேன் ”உன் புருஷன்..?”

”மச்சான்னு சொன்னா.. என்ன கொறஞ்சா போவ..?” என்று கடிந்து கொண்டாள்.

”ஏன்.. உன் புருஷன்னு சொன்னா மட்டும் என்ன.. நீ கொறஞ்சா போயிடப்போறே.. இல்ல உன் புருஷன் கொறைஞ்சுருவாப்லயா..?”

குளித்துவிட்டு என் பெரியம்மா வந்தாள். தலைமுடியை உலர்த்தியவாறு. ”வாடா..! எப்ப வந்த..?”

”இப்பத்தான்..”

”அவ வல்ல…?”

”வீட்ல இருக்கா…”

”சாயந்திரமா..அவள கூட்டிட்டு வா..! உங்கக்கா.. மெனக்கெட்டு என்னென்னமோ பண்ணிட்டிருக்கா..” என்றாள்.

அக்காவைப் பார்த்தேன் ”என்ன பண்ற..?”

சிரித்தாள் ”விருந்துடா..”

”அதுக்கு..?”

”பலகாரம் பண்றேன்..”

”ரொம்பல்லாம் அலட்டிக்காத..”

” ஏன்டா..? அவகூட ஏதாவது சண்டையா..?”

”அடச்சீ… போகுதே உன் புத்தி..! ஸ்பெஷலா எதுவும் பண்ண வேண்டாம்..! எப்பயும்போல.. சிம்பிளா… பண்ணா போதும்..!!”

”நீ சரிடா..! ஆனா வர்றவ என்ன நெனைப்பா..? உங்கக்கா விருந்துக்கு கூப்ட்டு.. என்ன பண்ணி போட்டுட்டானு கேக்க மாட்டாளா..?”

”மாட்டா..! அவ அப்படிப்பட்டவ இல்ல. .”

”ஆமா..! புதுசுல எல்லா பொண்டாட்டிகளும் அப்படித்தான்..!”

”ஆனா.. அவ அப்படி இல்ல..”

” க்கும்..! அதையும் பாக்லாம்..!!”

”ம்பாரு.. பாரு..”

” பின்ன.. பாக்காமயா போயிருவேன்..?” என்று கிண்டலாகச் சிரித்தாள்.

அவர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினேன்.

சடங்கு.. சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து விட்டன.! எங்கள் தனிக்குடித்தனம் தொடங்கிவிட்டன..!

காலை நேரம..!! நன்றாக தூங்கிக்கொண்டிருந்த என்னை.. உலுக்கி எழுப்பினாள்.. நிலாவினி. புரண்டு படுத்து.. ”இன்னும் கொஞ்சம்..துங்க விடேன்..” என்றேன்.

”மணி.. என்ன இப்ப..?” என் பக்கத்தில் உட்கார்ந்து.. என்மேல் சாய்ந்து கொண்டு கேட்டாள்.

”ஏன்.. வாட்ச் ஓடறதில்லையா..? அப்ப மொபைல்ல பாரு தெரியும்..!” என்றேன்.

”ம்..ம்..! நல்ல யோசணை..! ஆனா.. புருஷா..! இப்ப.. நான் மணீகேக்கல..! மணியாச்சு.. எந்திரிங்கன்னு சொல்ல வந்தேன்..!”

”ம்..ம்..! மணி என்ன..?”

”எட்டு…”

”ம்..ம்..! எட்டுதானா..?”

”எட்டுதானா இல்ல..! எட்டாகிப்போச்சு..! எந்திரிச்சு.. குளிங்க..!!”

”நீ.. குளிச்சாச்சா..?”

”ம்..ம்..!!”

”டிபன். .?”

” இட்லி.. தோசை…”

”தனிக்குடித்தனத்துல… உனக்கு சிரமம் .. ஏதாவது..?”

”பழக வேண்டியதுதான.. எத்தனை நாளைக்கு பெத்தவளே சமைச்சு போடுவா..? நமக்கும் குழந்தைகள் பொறந்தா.. அதுகளையும் கவனிசசு… எல்லாம் பழக வேண்டியதுதான..? சிரமம் பாத்தா எப்படி குடும்பம் நடத்தறதாம்..?”

”ம்..ம்..!” ‘ஆவ் ‘ என வாயைப் பிளந்து கொட்டாவி விட… ‘சத்’ தென என் வாய்மீது அடித்தாள். ”தூங்கினது போதும்..! எந்திரிங்க..”

”ம..ம்..! முத்தம்..?”

” மொதல்ல போய் வாய் கழுவிட்டு வாங்க..”

”ஏன். .?”

”வாய்ல நெறைய கிரிமி.. இருக்கும்.!!”

”நாம.. அசைவம்தான..? சைவமில்லியே..?”

”அசைவம்தான்..! அதுக்காக.. புழு.. பூச்சி… பாக்டீரியாவெல்லாம் சாப்பிட மாட்டேன்..” என்று என் கன்னததில் அடித்தாள்.

அவளை இருக்கி.. அவள் மோவாயைக் கடித்தேன்.

”ம்..ம்..” என்று சிணுங்கினாள்.

அவள் உதட்டை முத்தமிடப்போக… அவளது கையை வைத்து என் உதட்டைத் தடுத்தாள்.

அவளை இழுத்துப் போட்டு.. பிண்ணிக்கொண்டேன். அவள் மார்பில் முகம் புரட்டினேன்.

” எத்தனை மணிக்கு எந்திரிச்ச.. நீ.?”

” அஞ்சரைக்கு…” என்றாள்.

”அவ்ளோ நேரத்துல எதுக்கு எந்திரிச்ச..? உன் புருஷன் என்ன ஆபீஸ் போறவன்னு நெனைச்சியா..? டான்னு.. ஏழரை.. எடடு மணிக்கு கெளம்பறதுக்கு..?”

”இதுக்கெல்லாம் ஆபீஸ் போகனும்னு.. இல்ல..”

”நைட் தூங்கறப்பவே.. மிட் நைட்டுக்கு மேல…”

”அப்பவும்.. அஞ்சரைக்கு முழிப்பு வந்துருச்சு..! பாத்ரூம் போய்ட்டு வந்து.. உங்கள கட்டிப்புடிச்சு.. உங்க பக்கத்துல படுத்துப் பாத்தேன்..! நீங்க சும்மா.. பெரண்டு பெரண்டு படுத்திட்டிருந்தீங்க..! சரி.. உங்க தூக்கத்த கெடுக்க வேண்டாம்னு நானே எந்திரிச்சுட்டேன்.! அப்பவே.. பின்னால வீட்ல பாத்திரமெல்லாம் உருண்டுட்டிருந்துச்சு..!!”

”ம்..ம்..!! அது.. ஒரொரு நாளைக்கு நாலு.. நாலரைக்கெல்லாம் எந்திரிச்சூரும்…!!”

”அது.. பேரு என்ன..?”

”மேகலா…”

”கல்யாணத்துக்கு வந்துருந்தாங்க இல்ல. .?”

” ம்..ம்..!!”

”வேலைக்கு போகுதா..அது..?”

”இல்ல.. வீட்லதான்…இருக்கு..!!”

”அவங்க வீட்டுக்காரரு..?”

”வாட்ச் கடை வெச்சிருக்காரு..”

”அதுலெல்லாம்..என்ன வருமானம் கெடைக்கும்..?”

”ம்..ம்..! சரி.. சரி.. கிஸ் தா..!!”

”ஒன்னும் தர்றதில்லை.. விடுங்க.. என்னை..”

”நீயா..தராம விடமாட்டேன்..”

”அழிச்சாட்டியம் பண்ணாதிங்கப்பா..”

”தம்பி எந்திரிக்கறதுக்குள்ள குடுத்துட்டேன்னா..உனக்கு நல்லது..”

”ஆ…! எந்திரிச்சா…?”

”அப்றம்.. வெளையாட தங்கை பாப்பா வேனும்னு கேப்பான்..”

”ச்சீ..! தந்து தொலையறேன்..!!” என்று என் உதட்டில் அவள் உதட்டைப பதித்தாள். சிறிது நேர இன்பத்தழுவல்.. அன்பு முத்தங்களுக்குப் பிறகு.. எழுந்து குளிக்கப போனேன்.

என் தலைக்கு எண்ணை வைத்து.. ஒரு குழந்தையைக் குளிப்பாட்டுவது போல.. என்னைக் குளிப்பாட்டி விட்டாள். குளித்து விட்டு வந்து.. தலைதுவட்டும் போது கதவு தட்டப்பட்டது. நிலாவினி போய் கதவைத் திறந்தாள். குணா…!!

”வாடா…” என்றேன்.

”டிபன் ஆச்சாடா..?” என்று கேட்டான்.

”ஆச்சு..! ஆனா இன்னும் சாப்பிடல.. உக்காரு..!!”

தங்கையைப் பார்த்து.. ”ஆமா.. என்னது உன் நைட்டியெல்லாம் இப்படி நனஞ்சிருக்கு..?” என்று கேட்டான்.

”நான் குளிச்சன்டா…” என்றேன்.

”நீ குளிச்சா… இவ எப்படி..?”

”அது.. அப்படித்தான்..!!” என்க…

நிலாவினி புன்சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போனாள்.

ஒன்றாக உட்கார்ந்து டிபன் சாப்பிட்டோம்..! அதன்பின்… ஒன்றாகவே ஸ்டேண்டுக்கு கிளம்பினோம்..!! கார் அவன் வீட்டில்தான் இருந்தது. நடந்து போகும்போது குணாவிடம் கேட்டேன். ”கல்யாணத்துக்கு அடுத்த நாள்.. சுவேதாகூட புரோகிராமா..?”

”ஆமா..! உனக்கெப்படி தெரியும். .?”

”அவளே சொன்னா…”

”அவள எங்க பாத்த…?”

”தொட்டபெட்டால பாத்து… மானத்த வாங்கிட்டா…”

”என்னடா சொல்ற..?”

”என்னத்த சொல்றது..? உன் தங்கச்சி சண்டை போட்டா..”

”அப்படி.. என்னடா.. பண்ணா..அவ..?”

”ஹனிமூன் போன எடத்துல வந்து…ஒருத்தி வழிஞ்சு… வழிஞ்சு பேசினா… பொண்டாட்டி சும்மா விடுவாளா.. என்ன..? அப்பறம் ஒரு வழியா… சமாளிச்சேன்…!!” என்றேன். …!!!!!

– சொல்லுவேன்…..!!!!!!

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000