மஹாவுடன் ஒரு மழைத்தருணம் – 1

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamakathaikal – மென்காமக்கதை ரசிகர்களுக்கானது. ஒரு மழை நாள் மாலையில் இரு காதல் உள்ளங்களுக்கு இடையில் நடக்கும் கதை. கதை நடக்கும் சூழலை விளக்க, உங்களை அந்த சூழலுக்கு இழுத்து செல்ல, மூட் க்ரியேட் செய்ய, சற்றே மெனக்கெட்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை மறவாமல் எனக்கு சொல்லுங்கள். நன்றி. – ஸ்க்ரூட்ரைவர்

சொட்டு சொட்டாய் விழ ஆரம்பித்த மழைத்துளிகள், சில நொடிகளிலேயே ‘சட சட சடவென’ பெருமழையாய் மாறின. வானத்தை யாரோ வாளால் கிழித்துவிட்ட மாதிரி, நீரை அள்ளித் தெளித்தது. நான் பைக்கை வீட்டுக்குள் செலுத்தி, போர்டிகோவிற்குள் நிறுத்துவதற்கு முன்பே, தெப்பலாய் நனைந்திருந்தேன். பைக்குக்கு ஸ்டேன்ட் போட்டுவிட்டு, வீட்டுக்கு பக்கவாட்டில் இருந்த படிக்கட்டில் ஏறி, என்னுடைய மாடி போர்ஷனுக்கு ஓடினேன்.

வாசலுக்கு வெளியில் இருந்த பூந்தொட்டியை தூக்கி, வீட்டு சாவியை தேடினேன். ஏமாந்தேன். சாவியை காணவில்லை. குழப்பமாக இருந்தது. திரும்பி வாசலை பார்க்க, கதவு திறந்திருந்தது தெரிந்தது. நான் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் யார் நுழைந்தது..? திருடனாய் இருக்குமோ..? நான் மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைந்தேன். ஹாலில் யாரையும் காணோம். மேலும் நடந்து கிச்சனுக்குள் எட்டிப் பார்த்தேன். வாஷ் பேசினுக்கு பக்கத்தில் மஹா நின்றிருந்தாள். என்னை பார்த்ததும், எளிறுகள் தெரிய ஏளனமாய் சிரித்தாள்.

“என்னடா இது..? நனைஞ்ச கோழி மாதிரி வந்து நிக்குற..? மழை பெஞ்சா கொஞ்சம் ஓரமா ஒதுங்கி நின்னுட்டு.. அப்புறமா வர்றதுக்கு என்ன..? ம்ம்..?”

“ஒதுங்குறதுக்குள்ள நல்லா ஊத்திடுச்சு மஹா..!! அதுசரி.. நீ என்ன பண்ணிட்டு இருக்க இங்க..?”

“சும்மா உன்னை பாக்கனும்னு தோணுச்சு.. வந்தேன்..!!” சொல்லிக்கொண்டே அவள் கிச்சனில் இருந்து ஹாலுக்குள் நுழைந்தாள்.

“சாவி எப்படி கிடைச்சது..?”

“ஆமாம்.. பெரிய தங்கமலை ரகசியம்.. நீ பூந்தொட்டிக்கு கீழ சாவியை ஒளிச்சு வைக்கிறதை.. போன தடவை வந்தப்பவே பாத்தேன்..!! நீ இருப்பேன்னு நெனைச்சேன்.. நீ இல்லை.. அதான்.. வீட்டை தொறந்து உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..!! சும்மா இருக்க வேணாமேன்னு கிச்சனை கிளீன் பண்ணிட்டு இருந்தேன்..!! எல்லாம் குப்பையா போட்டு வச்சிருக்கடா.. ம்ம்ம்.. இந்தா.. தலையை தொவட்டிக்கோ..!!”

சொல்லிக்கொண்டே மஹா சோபா மீது கிடந்த டவலை எடுத்து என் மீது வீசினாள். நான் டவலை கேட்ச் செய்து தலையை துவட்டிக் கொண்டேன். மஹா உதட்டில் ஒரு குறும்பு புன்னகையுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சற்றே மெல்லிய குரலில் கேட்டேன்.

“என்ன திடீர்னு என்னை பாக்க வந்திருக்க..?”

“ஏன்.. வரக்கூடாதா..?” அவள் குறும்பு கொஞ்சமும் குறையாமல் கேட்டாள்.

“அதுக்கில்ல.. இப்படி சொல்லாம கொள்ளாம.. திடீர்னு..”

“ஐயோ ராமா..!! சும்மா பாக்கனும்னு தோணுச்சு.. வந்தேன்னு சொல்றன்ல..? விடு.. என்ன சாப்பிடுற..? காபியா..? டீயா..?”

நான் ஓரிரு வினாடிகள் அவள் முகத்தையே உற்றுப் பார்த்தேன். ஒன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை. அப்புறம் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு சொன்னேன்.

“காபியே போடு மஹா..!!”

“ஓகே.. போட்டு வைக்கிறேன்.. நீ போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா..!! இந்த கோலத்துல உன்னை பாக்க.. ரொம்ப காமடியா இருக்கு..!!”

அவள் மீண்டும் ஒருமுறை சிரிப்பை உதிர்த்துவிட்டு, கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள். நான் என்னுடைய பெட்ரூமுக்குள் நுழைந்தேன். தலையை நன்றாக துவட்டிவிட்டு, வேறு ஆடை அணிந்து கொண்டேன். மனம் மஹாவை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது.

இந்த மஹா என்கிற மஹாலட்சுமி என் நண்பன் வசந்தின் மனைவி. நான், மஹா, வசந்த் எல்லாம் ஒரே காலேஜில்தான் படித்தோம். நான் அசோக். ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவன். மஹா ஒரு நடுத்தர பிராமண குடும்பத்தில் இருந்து வந்தவள். வசந்த் ஒரு கோடீஸ்வர அப்பாவுக்கு ஒரே வாரிசு. வெவ்வேறு குடும்ப பின்னணியில் இருந்து வந்திருந்தும், எங்களுக்குள் காலேஜில் இரு இனிய நட்பு இருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வசந்துக்கும், மஹாவுக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் வீடு அண்ணாநகரில். நான் வசிப்பது மேற்கு மாம்பலத்தில். நான் அவ்வப்போது அவர்கள் வீட்டுக்கு விசிட் விடுவேன். அவர்கள் இருவரும் எப்போதாவது என்னை பார்க்க வருவார்கள். ஆனால் மஹா மட்டும் தனியாக வந்திருப்பது இதுவே முதல்முறை.

வேறு உடைகள் அணிந்துகொண்டதும் நான் கிச்சனுக்கு சென்றேன். மஹா காபி தயாரிப்பதில் மும்முரமாய் இருக்க, நான் அமைதியாய் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். கல்லூரி முதல் நாளில் பார்த்தது மாதிரிதானே இன்னும் இருக்கிறாள்..? அதே வசீகர புன்னகை.. அதே குறும்பு கொப்பளிக்கும் குழந்தை முகம்.. லேசாக சதை போட்டிருக்கிறாள். அதுகூட அவளுடைய அழகை மேலும் ஜொலிப்பாகத்தான் காட்டுகிறது. அவளுடைய கோதுமை நிறத்துக்கு, அவள் அணிந்திருந்த அடர்சிவப்பு நிற புடவை எடுப்பாக இருக்கிறது. பெயருக்கு ஏற்ற மாதிரி மஹாலட்சுமியேதான்..!!

“ம்ம்.. இந்தா..!!” அவள் ஒரு காபி கப்பை நீட்ட, நான் வாங்கிக் கொண்டேன்.

“பால்கனிக்கு போயிடலாமா..?”

அவள் சொல்லிவிட்டு, இன்னொரு கப்பை எடுத்துக்கொண்டு என் பதிலுக்காக காத்திராமல் உள்ளே நடந்தாள். என்னுடைய படுக்கை அறைக்குள் நுழைந்து, அதை ஒட்டி ஓரமாய் இருந்த பால்கனிக்கு சென்றாள். அங்கு கிடந்த இரண்டு பிரம்பு நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்து கொண்டாள். என்னிடம் திரும்பி,

“ஏதாவது பாட்டு போடேன்..!!” என்றாள்.

நான் என்னுடைய மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்தேன். எஃப்.எம் மோட் செலக்ட் செய்து மிதமான வால்யூம் வைத்தேன்.

“மனதிலே ஒரு பாட்டு.. மழை வரும் அதைக் கேட்டு.. இது பூபாளம்.. புது ஆலோலம்..”

நடந்து சென்று மஹாவுக்கு எதிரே கிடந்த நாற்காலியில் நான் அமர்ந்துகொண்டேன். மஹா பாட்டை ஹம் செய்து கொண்டே சொன்னாள்.

“ம்ம்.. சிச்சுவேஷனுக்கு மேட்ச்சா எஃப்.எம்ல பாட்டு போடுறான் போல..”

என்றவாறு பாடலை மிகவும் ரசித்தாள். நான் காபியை உறிஞ்ச ஆரம்பித்தேன். இரண்டு உள்ளங்கைகளாலும் காபி கப்பை இறுக்கி பிடித்து உறிஞ்சினேன். கப்பில் இருந்த சூடு என் கைகளில் பரவ, காபிச்சூடு என் தொண்டைக்குள் இறங்க, வெளியில் பெய்த இடிமழைக்கு அது இதமாக இருந்தது. மஹா லேசாக கண்மூடி பாடலை ரசித்துக் கொண்டே, காபி உறிஞ்சினாள். நான் மெல்ல ஆரம்பித்தேன்.

“வசந்த் வரலையா மஹா..?”

“ம்ஹூம்.. வரலை..!!”

“ஏன்..?”

“அவன் கொஞ்சம் பிஸி..!!”

“வெளியூர் போயிருக்கானா..?”

“இல்லை.. வீட்லதான் இருக்கான்..!!”

“வீட்லையா..? வீட்ல அப்படி என்ன பிஸி..?”

“ம்ம்.. நீயே கண்டுபிடி பாப்போம்..!!” அவள் குறும்பாக சொன்னாள்.

“விளையாடாத மஹா.. சொல்லு..!!” நான் சற்றே எரிச்சலாக கேட்டேன்.

“ம்ஹூம்.. நீயே கண்டுபிடி..!!” அவள் குறும்பு கொஞ்சமும் குறையாமல் சொன்னாள்.

“சரி விடு.. நானே போன் பண்ணி கேட்டுக்குறேன்..!!” என்றவாறு நான் செல்போனை எடுத்தேன்.

“அவனுக்கு கால் பண்ண போறியா..? அவன் போனை எடுக்க மாட்டான்..!!” என்றாள் அவள்.

“ஏன்…?”

நான் கேட்டுக்கொண்டே வசந்த் நம்பருக்கு கால் செய்தேன். ரிங் போனது. எடுக்கவில்லை. நான் மீண்டும் இரண்டு மூன்று முறை கால் செய்து ஏமாந்தேன். கால் பிக்கப் செய்யப்படவில்லை. குழப்பமாக மஹாவை ஏறிட்டேன். அவள் குறும்பு கொப்பளிக்கும் முகத்துடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நான்தான் எடுக்கமாட்டான்னு சொல்றேன்ல..?”

சொல்லிவிட்டு அவள் குழந்தை மாதிரி சிரித்தாள். நான் அவளுடைய குழந்தை முகத்தையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பெண் இவள்..? எதைப் பற்றியும் கவலைப்படாமல் எல்லாவற்றிற்கும் சிரித்துக்கொண்டு..? அவளை பார்க்க பார்க்க, எனக்கும் சிரிப்பு வந்தது. அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன்.

“நீ மாறவே இல்லை மஹா.. எல்லாத்திலயுமே உனக்கு விளையாட்டு..!!”

சொல்லிவிட்டு நான் காலிகப்பை டீப்பாய் மீது வைத்தேன். எழுந்துகொண்டேன். வெளியே மழை மேலும் வலுத்திருந்தது. இடியும், மின்னலும் இடைவிடாது வந்து போய்க் கொண்டிருந்தன. சாலை எல்லாம் பனிமூட்டமாய் மங்கலாய் தெரிந்தது. நான் பால்கனி ஓரமாக சென்று, என் கைகளை நீளமாக வெளியே நீட்டினேன். ‘சட சட சட’வென விழுந்த மழைத்துளிகளை உள்ளங்கையில் வாங்கிக் கொண்டேன். வானத்தில் இருந்து விழுந்த மழைத்துளிகள், நேரே என் உள்ளங்கையில் வந்து விழுந்து.. தெறித்து சிதறின. ஒரு ரம்யமான உணர்வு உடலில் பரவியது.

இப்போது மஹாவும் பட்டென்று சேரில் இருந்து எழுந்துகொண்டாள். என்னை நெருங்கியவள், என்னோடு உரசியபடி நின்றுகொண்டாள். அவளும் தன் வலது கையை நீட்டி, தனது உள்ளங்கையை, நீண்டிருந்த எனது உள்ளங்கையின் மேல் வைத்துக் கொண்டாள். மழைத்துளிகள் என் கையில் விழுவதற்கு முன்பே, அவள் தாங்கிப் பிடித்தாள். குழந்தை மாதிரி குதூகலித்தாள். உற்சாகமான குரலில் சொன்னாள்.

“அசோக்.. உனக்கு ஞாபகம் இருக்கா..?”

“என்ன..?”

“காலேஜ்ல ஒரு நாள்.. தேர்ட் செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்ச அன்னைக்குன்னு நெனைக்கிறேன்.. நீயும் நானும் கையை கோர்த்துக்கிட்டு.. ஹாஸ்டல்ல இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை.. மழைல நனைச்சுட்டே போனோமே..? ஞாபகம் இருக்கா..?”

“ம்ம்.. ஞா..ஞாபகம் இருக்கு..!!” நான் கொஞ்சம் தடுமாற்றமான குரலில் சொன்னேன்.

“ச்சே..!! இப்போ நெனச்சு பாத்தா கூட எவ்வளவு சந்தோஷமா இருக்கு.. திரும்ப அந்த டேஸ்லாம் வராதான்னு ஏக்கமா இருக்கு.. இல்ல..?”

அவளுடைய குரலில் ஒரு இனம்புரியாத ஏக்கம் கலந்திருந்தது. கடந்த காலத்துக்கே சென்று சுகமாய் லயித்திருந்தவள் போல காணப்பட்டாள். அவளுடைய உடல் என்னை உரச, அவள் மேனியில் இருந்து வந்த ஒரு இனிய நறுமணம், என் நாசிக்குள் சுர்ரென்று ஏற, எனக்கு ஒரு மாதிரி கிறக்கமாய் இருந்தது. நான் பட்டென்று என் கையை அவளுடைய கையில் இருந்து எடுத்துக் கொண்டேன். அவளை விட்டு சற்றே விலகி நின்று கொண்டேன்.

“என்னாச்சு…?” என்றாள் அவள் சற்று ஏமாற்றமாய்.

“ஒண்ணுமில்லை..!!” என்றேன் நான் எங்கேயோ பார்த்துக் கொண்டு. Mulai Kadikkum Tamil Kamakathaikal

– தொடரும்

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000