This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
Tamil Kamakathaikal – ஆதிரா அன்று இரவு முழுவதும் உறங்கவே இல்லை.. விடியும்வரை இதே ரீதியிலான கனவு.. விழிகளை விரித்து வைத்தவாறே கண்டிட்ட கனவு..!!
அதேஇரவில்.. ரயிலில் பயணித்த தாமிராவும் அக்காவைப் போலவே உறக்கத்தை தொலைத்திருந்தாள்.. ஆதிரா கற்பனையில் திளைத்துக் கொண்டிருந்தாள் என்றால், தாமிரா கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்..!! ரயில் படுக்கையில் குப்புறப்படுதிருந்தவள், குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள்.. அவள் எழுப்பிய அழுகையோசை ரயிலின் தடதட சப்தத்துக்குள் காணாமல்போய், அடுத்தவர் காதுகளுக்கு எட்டாமலே காற்றில் கலந்திற்று..!!
நள்ளிரவு தாண்டிய சமயத்தில் பாத்ரூம் சென்று.. முகத்தில் நீர் தெளித்து அலம்பிக்கொண்டு.. கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை, தானே பரிதாபமாக பார்த்தவாறு நெடுநேரம் நின்றிருந்தாள் தாமிரா..!!
அக்காவைப் போலவே அவளுக்கும் அத்தான் மீது சிறு வயதில் இருந்தே ஒரு ஈர்ப்பு.. அவள் வளர வளர அந்த ஈர்ப்பும் அவளுடன் வளர்ந்து, கன்னிப்பெண் ஆகையில் காதலென அசுர வடிவம் எடுத்து நின்றிருந்தது..!! உள்ளத்தில் இருந்த காதலை உடன்பிறப்புடன் பகிர்ந்துகொள்வதில் ஆதிரா சற்றே முந்திக்கொள்ள.. உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொள்கிற ஒரு நிலைக்கு தாமிரா தள்ளப்பட்டிருந்தாள்.. அக்கா மீது அவள் வைத்திருந்த அளவிலா அன்புதான் அவளை அவ்வாறு செய்ய வைத்திருந்தது..!!
ஆசைப்படுகிற ஒரு மனதைத்தான் ஆண்டவன் ஆதிராவுக்கு கொடுத்திருந்தான்.. தாமிராவின் மனதையோ அன்பையும், தியாகத்தையும் குழைத்து வார்த்தெடுத்திருந்தான்..!! குழந்தையாய் இருந்த சமயத்தில் இருந்தே.. அக்கா ஆசைப்பட்டதை எல்லாம் அவளது அறிவுக்கு எட்டாத வகையிலேயே விட்டுக் கொடுப்பதுதான் தாமிராவின் இயல்பு.. காதல் விஷயத்திலும் அவ்வாறே நடந்துகொள்ள நினைத்தாள்..!!
தானும் சிபியை காதலிப்பதை அக்காவிடம் சொல்லி.. அவளது மனதில் சிறு சஞ்சலம் வருவதைக்கூட தாமிரா விரும்பவில்லை..!! அதுவுமல்லாமல்.. ஆதிராவுக்குத்தான் சிபியை மணமுடிக்க வேண்டும் என்று, அவளது பெற்றோர்களுடைய மனதில் இருந்த எண்ணமும் அவளுக்கு அரசல் புரசலாக தெரியவர.. ‘அக்கா நிஜமாகவே அதிர்ஷ்டக்காரி’ என்று நினைத்து, ஆதிராவுக்காக மிகவும் சந்தோஷப்பட்டாள்.. அதேநேரம், அவளது மனதிலும் ஒரு இனம்புரியாத விரக்தி..!!
அக்காவின் மனம்போலவே மணவாழ்வு அமையப்போவதில்.. தாமிராவுக்கும் எல்லையில்லா ஆனந்தம்தான்..!! ஆனால்.. சிபி மீது தான் வைத்திருந்த ஆசையும், காதலும்.. தனது மனதுக்குள்ளேயே புதைந்து மரணிக்கப் போகிறதே என்பதை எண்ணும்போது.. அவளது கண்களில் பொங்கிய கண்ணீரையும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை..!! எப்போதும்போலவே இப்போதும் தனிமையில் அழுது தீர்த்தாள்.. இந்தமுறை, தண்டவாளத்தில் தடதடக்கிற ரயிலுக்குள்..!!
தங்கையின் மனதினைப் பற்றியோ, அந்த மனதுக்குள் உறைந்திருந்த காதலைப் பற்றியோ, ஆதிரா அப்போதெல்லாம் அறிந்ததில்லை.. அதேபோல தங்கையின் மைசூர் பயணத்தின்போது நடந்தவையும் ஆரம்பத்தில் அவளுக்கு தெரியாது..!!
வாக்களித்தபடியே மைசூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்திருந்தான் சிபி.. அழுதசுவடு சிறிதளவும் வெளியே தெரியாதவண்ணம், அவனுடன் இயல்பாக சிரித்துப் பேசினாள் தாமிரா..!! இருவரும் முதலில் சிபியின் வீட்டுக்கு சென்றார்கள்.. குளித்து முடித்துவிட்டு அவனது அலுவலகத்துக்கு சென்றார்கள்.. அவனுடைய முதலாளியை சந்தித்துப்பேசி உதவி கோரினார்கள்..!! தாமிராவின் பேச்சு அவருக்கு பிடித்துப்போக, உதவி செய்வதாய் அவரும் உறுதியளித்தார்.. அந்த சந்தோஷத்திலேயே, சிபியும் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு, அலுவலகத்திலிருந்து தாமிராவுடனே கிளம்பினான்..!! மீதியிருக்கிற நாளை ஊர் சுற்றி கழிப்பதாக திட்டம்..!!
அக்காவின் அறிவுரைக்கு மதிப்பு கொடுத்து, கல்யாண விஷயத்தை பற்றி தாமிரா சிபியிடம் வாயைத் திறக்கவில்லை.. ஆனால், எந்த நேரமும் அப்பாவின் அழைப்பு அத்தானின் கைபேசிக்கு வரலாம் என்று எதிர்பார்த்துத்தான் காத்திருந்தாள்..!! சிபியோ இதைப்பற்றியெல்லாம் எதுவும் தெரியாமல்.. இயல்பாக தாமிராவுடன் எல்லா இடங்களுக்கும் சுற்றித் திரிந்தான்.. அவன் முகத்தில் மட்டும் எப்போதும் இருக்கிற அந்த கன்னத்துக்குழி புன்னகை..!!
அலுவலகத்தில் இருந்து கிளம்பியவர்கள், முதலில் மைசூர் அரண்மனை சென்று சுற்றிப்பார்த்து, சிறிது நேரம் செலவிட்டார்கள்.. அந்த புகைப்படமும் அப்போதுதான் எடுத்துக் கொண்டார்கள்.. இருவரும் சற்றே நெருக்கமாக, ஒருவரது புஜம் அடுத்தவரது புஜத்தை அழுத்துகிற மாதிரி..!!
மைசூர் அரண்மனைக்கு எதிரே இருக்கிற ஒரு அசைவ உணவகத்திலேயே, மதிய உணவை முடித்துக்கொள்ள நினைத்து உள்ளே புகுந்தனர்.. காலியாய் இருந்த டேபிளில் அமரச்சென்ற தாமிராவைத் தடுத்த சிபி,
“இங்க வேணாம் தாமிரா.. உள்ள போயிறலாம்..!!”
என்றவாறு உணவகத்துக்குள் இன்னும் உட்புறமாக அழைத்து சென்றான்..!! சற்று தள்ளியிருந்த ஏ/ஸி அறைக்குள் இருவரும் நுழைந்தார்கள்.. உள்ளே மிகவும் சொற்பமானவர்களே அமர்ந்திருக்க, இவர்கள் ஓரமாக கிடந்த மேஜையொன்றில் எதிரெதிரே அமர்ந்துகொண்டார்கள்..!!
தாமிராவின் அபிப்ராயத்தை தெரிந்துகொண்டு சில அசைவ உணவு வகைகளை ஆர்டர் செய்தான் சிபி.. அவையெல்லாம் டேபிளுக்கு வந்து சேர்கிற நேர இடைவெளியில், இயல்பாகத்தான் அந்தப்பேச்சை ஆரம்பித்தான்..!!
“ஹேய் தாமிரா.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்..!!” என்று புன்னகையுடன் சொன்னான்.
“எ..என்ன..??”
“I have a gift for you..!!”
“Woww.. really..??” தாமிரா தனது முட்டைக்கண்களை முழுதாக திறந்தவாறு கேட்டாள்.
“yesss..!!!”
“என்ன கிஃப்ட்.. என்ன கிஃப்ட்..?? காட்டுங்க.. எனக்கு உடனே பாக்கணும்..!!”
“ஹாஹா.. இரு.. அவசரப்படாத..!!”
சிரிப்பை சிந்தியவாறே, அத்தனை நேரம் ஒளித்து வைத்திருந்த அந்த சிறிய பரிசுப்பெட்டியை வெளியே எடுத்தான் சிபி.. அதை தாமிராவிடம் நீட்ட முனையும்போதே, அவனுடைய செல்ஃபோன் சப்தம் எழுப்பியது.. பரிசுப்பெட்டியை கைக்குள் வைத்தவாறே, சட்டைப்பைக்குள் இருந்து செல்ஃபோனை வெளியே எடுத்து பார்த்தான்..!!
“ஹேய் ஒரு நிமிஷம்.. மாமா கூப்பிடுறார்..!!” என்றவன் காலை பிக்கப் செய்து பேச ஆரம்பித்தான்..!!
அப்பா எதற்காக அழைக்கிறார் என்கிற விஷயம் புரிந்த தாமிரா, அமைதியாக அத்தானின் முகத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்..!! செல்ஃபோனில் பேச ஆரம்பித்த சிபி நிறைய ‘ம்ம்’ கொட்டினான்.. பேசப்பேச அவனுடைய முகத்தில் அத்தனை நேரம் இருந்த உற்சாகம் மெல்ல மெல்ல குறைவதை தாமிராவால் உணர முடிந்தது.. எதுவும் புரியாமல் அவனையே குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!!
“ஒ..ஒரு நிமிஷம் மாமா.. நா..நான் இப்போ கொஞ்சம் வேலையா இருக்கேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு திரும்ப கூப்பிடவா..??”
தயக்கமாக சொன்ன சிபி, அழைப்பை பட்டென துண்டித்தான்.. எதிரே அமர்ந்திருந்த தாமிராவை, ஏறிட்டு வெறுமையாக பார்த்தான்..!! அவன் முகத்தில் தெரிந்த திகைப்பும் தவிப்பும், தாமிராவை இன்னும் அதிகமாகவே குழம்பியது..!!
“எ..என்னத்தான்.. என்னாச்சு..?? அப்பா என்ன சொன்னாரு..??”
“ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்ல தாமிரா..!!” சிபியின் குரலில் ஒரு புது தடுமாற்றம்.
“அப்புறம் ஏன் ஒருமாதிரி ஆய்ட்டிங்க..??”
“இ..இல்லையே..!!”
“இல்ல.. உங்க முகமே சரியில்ல..!! அப்பா என்ன சொன்னார்ன்னு சொல்லுங்க..!!”
“அ..அது.. அது வந்து..”
“ம்ம்..??”
“ஆ..ஆதிராவுக்கும்.. ஆதிராவுக்கும் எனக்கும் கல்யாணம் பண்றதா..”
“வாவ்..!!! நல்ல விஷயம்தான.. அதுக்கு ஏன் ஷாக்காகிட்டிங்க..??” தாமிரா போலி சந்தோஷத்துடன் குதூகலித்தாள்.
“அ..அதுக்கு இல்ல.. ஆனா..”
“என்ன ஆனா..??”
“ஒ..ஒன்னும் இல்ல..!!”
தளர்வாக சொல்லிவிட்டு சிபி அமைதியாகிப் போனான்.. தாமிரா ஓரிரு வினாடிகள் அவனது முகத்தையே கூர்மையாக பார்த்தாள்.. அந்த முகத்தில் தெரிந்த உணர்வுகளில் இருந்து அவளால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை..!! ஒரு சில வினாடிகள்.. பிறகு..
“ஹ்ம்ம்.. சரி விடுங்க..!! அது இருக்கட்டும்.. எனக்கு என்ன திடீர்னு கிஃப்ட்லாம்..??”
என்று தாமிரா இயல்பாக கேட்டுக்கொண்டே, சிபியின் கையிலிருந்த அந்த பரிசுப்பெட்டியை பறித்தாள்.. உள்ளே என்ன இருக்கிறதென்று ஆர்வமாக பிரித்து பார்த்தாள்..!!
உள்ளே.. அந்த தங்க மோதிரம்.. இரண்டு இதயங்கள் ஒன்றோடொன்று பிண்ணியிருப்பது மாதிரியான வேலைப்பாட்டுடன்..!! காதல் பரிசாக கொடுப்பதற்கு கச்சிதமான மோதிரம் என்பது.. பார்த்ததுமே பளிச்சென்று புரிந்தது..!!
தாமிரா அதை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை..!! நெஞ்சுக்குள் ஒருவித அதிர்ச்சி அலைகள் ‘விர்ர்ர்.. விர்ர்ர்ர்..’ என்று வீறிட்டு கிளம்ப.. முகம் முழுவதிலும் பரவிப்படர்ந்த ஒரு திகைப்போடு.. சிபியை மெல்ல மெல்ல ஏறிட்டு பார்த்தாள்..!! அவனோ சோர்ந்து போனவனாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.. இவள் அவனை பார்க்கவும், இப்போது உலர்ந்துபோன குரலில் சொன்னான்..!!
” ஐ.. ஐ லவ் யூ தாமிரா..!!”
காதில் வந்து விழுந்த வார்த்தைகளில் தாமிரா அப்படியே ஆடிப்போனாள்.. அவளது மனதுக்குள் அப்படியொரு உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது..!! தனது மனதில் இருப்பவன் தன்னைத்தான் காதலிக்கிறான் என்பதற்காக சந்தோஷப்படுவதா.. அல்லது.. அக்காவுக்கு மட்டும் இது தெரியவந்தால், அவள் எப்படி துடித்துப்போவாள் என்றெண்ணி துக்கப்படுவதா..?? எந்தமாதிரியான உணர்வை வெளிப்படுத்துவது என்றுகூட புரியாமல் விக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள் தாமிரா..!!
அழுகை வரும்போல் இருந்தது அவளுக்கு.. கண்களில் ஒருதுளி கண்ணீர் முணுக்கென்று எட்டிப் பார்த்தது.. அதை சிபி பார்ப்பதற்கு முன்பே அவசரமாக துடைத்துக்கொண்டவள், கையிலிருந்த பரிசுப்பெட்டியை டேபிளில் விசிறினாள்.. விருட்டென இருக்கையில் இருந்து எழுந்தாள்.. விடுவிடுவென அறைக்கதவை நோக்கி நடந்தாள்..!!
“தாமிரா.. தாமிரா நில்லு..!!”
பின்னாலிருந்து சிபி கத்துவதை அவள் பொருட்படுத்தவில்லை.. வேகமாய் நடந்து அந்த உணவகத்தை விட்டு வெளியேறினாள்.. சாலையில் வந்த ஒரு ஆட்டோவை கைநீட்டி நிறுத்தி ஏறிக்கொண்டாள்..!!
“எல்லிம்மா..??” ஆட்டோ ட்ரைவர் கேட்டதற்கு, ஓரிரு வினாடிகள் திகைத்தாள்.. பிறகு..
“ஃபிலோமினா சர்ச்..!!”
என்று மைசூரில் தனக்கு தெரிந்த ஒரு இடத்தை சொன்னாள்..!! சொல்லிவிட்டு.. ஆட்டோ பின்சீட்டில் தலைசாய்த்து, கண்ணீர் சிந்தி கன்னத்தை நனைக்க ஆரம்பித்தாள்..!!
சர்ச் என்று சொன்னது நல்லதாய் போயிற்று.. தாமிராவால் உள்ளே சென்று மனம்விட்டு அழ முடிந்தது..!! பார்ப்பவர்களில் சிலர் பாவமன்னிப்பு கேட்கிறாள் என்று நினைத்துக் கொண்டார்கள்.. ‘உறவினர் எவருக்காவது உடல்நலம் சரியில்லையாய் இருக்கும்’ என்று சிலர் உச்சுக்கொட்டினர்..!! அரைமணிநேரம்.. அழுது தீர்த்திருந்தாள் தாமிரா.. அதற்குள் இருபது மிஸ்ட் கால் அவளது செல்ஃபோனுக்கு வந்திருந்தது.. சிபியிடம் இருந்து..!!
“வீட்டுக்கு வர்றேன் அத்தான்.. வந்து பேசிக்கலாம்..!!”
சிபியை செல்ஃபோனில் அழைத்து பேசிவிட்டு, சர்ச்சில் இருந்து கிளம்பினாள் தாமிரா..!!
மனதில் ஒரு முடிவுடன்தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.. தனது காதலால் அக்காவின் சந்தோஷத்துக்கு எந்த பங்கமும் வந்துவிடக் கூடாது என்பதுதான் அந்த முடிவு..!! ‘தனக்கு சிபி மீது காதல் இல்லை.. தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை..’ என்று உறுதியாக அவனிடம் தெரிவித்தாள்..!! தணிகைநம்பிக்கு கால் செய்து, ஆதிராவுடனான திருமணத்துக்கு அவனது சம்மதத்தை தெரிவிக்குமாறு வற்புறுத்தினாள்..!! அவளது உறுதியான பேச்சில் சிபி சற்றே தளர்ந்து போயிருந்தான்..!!
“ப்ளீஸ் தாமிரா.. நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ..!! நா..நான்.. நான் என் லைஃபை உன் கூட வாழணும்னு ஆசைப்படுறேன்.. ஆதிராவை விட நீதான் எனக்கு பொருத்தமானவளா இருப்பேன்னு நெனைக்கிறேன்..!! உன்னை நான் நல்லா பாத்துப்பேன் தாமிரா.. உனக்கு ஒரு நல்ல புருஷனா நடந்துப்பேன்..!!”
“ஹையோ.. அதுலலாம் எனக்கு சந்தேகம் இல்லத்தான்.. நீங்க நல்லவரு.. நல்லா பாத்துப்பிங்க.. எனக்கு தெரியும்..!!”
“அப்புறம் என்ன.. வீட்ல என்ன சொல்லுவாங்களோன்னு நெனைக்கிறியா..?? நாம ரெண்டு பேரும் ஒண்ணாப்போய் நின்னு.. ‘கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறோம்’ன்னு சொன்னா.. கண்டிப்பா அவங்க ஒத்துப்பாங்க தாமிரா.. சந்தோஷப்படத்தான் செய்வாங்க..!!”
“தெரியும் அத்தான்..!! ஆனா.. அது நடக்காது..!!”
“அதான் ஏன்னு கேக்குறேன்..??”
“ஏன்னா என்ன சொல்றது.. எனக்கு உங்கள புடிக்கும், உங்கமேல அன்பு இருக்குது.. ஆனா.. உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் எப்போவுமே நெனச்சது இல்ல..!!”
“சரி.. இதுக்கு முன்னாடி நெனச்சது இல்லைன்னா பரவால.. இப்போ ஏன் நெனச்சு பாக்க கூடாது..??”
“நான் நெனச்சு பாக்குறது இருக்கட்டும்.. நீங்க ஏன் அக்காவை பத்தி கொஞ்சம்கூட நெனைச்சு பாக்க மாட்டேன்றிங்க..?? அவ என்ன அத்தான் பாவம் பண்ணினா..?? அவகிட்ட என்ன குறை கண்டிங்க..??”
“இங்க பாரு.. ஆதிரா மேல நான் எந்த குறையும் சொல்லல.. அவ நல்ல பொண்ணுதான்..!! ஆனா.. நான் விரும்புறது உன்னை.. என் மனசுல நீதான் இருக்குற..!! ஆதிராவை கட்டிக்கிட்டு நான் சந்தோஷமா இருக்க முடியாது தாமிரா..!!”
“இல்லத்தான்.. தப்பா சொல்றீங்க.. அக்காவை கட்டிக்கிட்டா நீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருப்பிங்க..!! அவ உங்களை எவ்வளவு லவ் பண்றா தெரியுமா.. உங்க மேல உயிரையே வச்சிருக்கா அத்தான்..!! சின்ன வயசுல இருந்தே உங்க மேல அவளுக்கு அவ்வளவு ஆசை..!! உங்ககிட்ட எக்ஸ்ப்ரஸ் பண்றதுக்கு அவளுக்கு ஒரு தயக்கம், வெட்கம்.. அவ்வளவுதான்..!! மத்தபடி.. எங்கிட்ட எல்லாம் சொல்லிருக்கா..!! அந்த அளவுக்கு உங்கமேல உசுரா இருக்குற அக்காவை கட்டிக்க, நெஜமாவே நீங்க ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்..!!”
“……………………..” சிபி இப்போது சற்றே வாயடைத்துப்போய் நின்றிருந்தான்.
“வீட்ல எல்லாம் சந்தோஷமா இருக்காங்க அத்தான்.. அக்கா, அப்பா, அம்மா, திரவியம் அங்கிள், வனக்கொடி அம்மா.. எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க.. அவங்க சந்தோஷத்தைலாம் கெடுக்கப் போறிங்களா..??”
“நாம கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அந்த சந்தோஷம் அவங்களுக்கு கெடைக்கும் தாமிரா..!! ஆதிராவுக்கு வேணா வேற..”
“இல்ல.. எனக்கோ அக்காவுக்கோ சத்தியமா அதுல சந்தோஷம் கெடைக்காது..!!”
“தாமிரா..!!”
“ப்ளீஸ்த்தான்..!! கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. உங்களை கல்யாணம் பண்ணிக்க சுத்தமா இன்ட்ரஸ்ட்டே இல்லாத நான் வேணுமா.. இல்ல.. உங்களையே நெனச்சு ஒவ்வொரு நிமிஷமும் உருகிக்கிட்டு இருக்குற அக்கா வேணுமா..?? யாரை கல்யாணம் செஞ்சுக்கிட்டா உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு யோசிச்சு பாருங்க..!! என் முடிவை நான் சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்..!!” Pundai Nakkum Tamil Kamakathaikal
– தொடரும்
NEXT PART
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000