கண்ணாமூச்சி ரே ரே – 35

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Sex Stories In Tamil – “ஒ..ஒன்னுல்லக்கா.. வந்து..” தென்றல் தயங்க,

“ம்ம்.. சொல்லு..!!” ஆதிரா அவளை தூண்டினாள்.

“இ..இல்ல.. ‘அண்ணன் தூங்கிட்டு இருப்பான்.. இப்போ கால் பண்ணா அவனுக்கு பயங்கரமா கோவம் வரும்.. கன்னாபின்னான்னு கத்துவான்..’னு சொல்ல வந்தேன்க்கா..!!” அப்பாவியாக சொன்னாள் தென்றல்.

“ஓ.. சரி சரி..!! அ..அதனால என்ன.. பரவால.. ஹிஹி..!!” அசடு வழிந்தாள் ஆதிரா.

கதிர் வந்து சேர்வதற்கு இன்னும் ஒருமணி நேரமாவது ஆகும் என்று ஆதிராவுக்கு தோன்றியது.. அதற்கு முன்பாக அவள் முடிக்க நினைத்திருந்த இன்னொரு வேலை இப்போது ஞாபகத்திற்கு வந்தது..!! கதிருக்கும் சேர்த்து காலை உணவு தயார் செய்யுமாறு தென்றலை பணித்துவிட்டு.. தடதடவென படிக்கட்டு ஏறி தனது அறைக்கு விரைந்தாள் ஆதிரா..!! அலுமினிய உடலும், அகண்ட தலையுமாக இருந்த அந்த டார்ச் லைட்டை கையில் எடுத்துக் கொண்டாள்.. மீண்டும் படியிறங்கி ஹாலுக்கு வந்தாள்..!!

மாடிப்படிக்கட்டின் மறுபுற மறைவிற்கு சென்றாள்.. அங்கிருந்த அலமாரியை அசைத்து நகர்த்தினாள்..!! காற்றைத்தவிர உள்ளே வேறேதும் இல்லாத காலி அலமாரி.. அதிக பலம் தேவையின்றி எளிதாகவே அப்புறப்படுத்த முடிந்தது..!! அலமாரியின் அடியில் விரிக்கப்பட்டிருந்த தரைவிரிப்பை இழுத்து ஒருபுறமாக ஒதுக்கினாள்.. தரையோடு பொருந்திய ஒரு மரக்கதவு இப்போது பார்வைக்கு வந்தது.. அந்த வீட்டுக்குள் அடங்கிய நிலத்தடி நிலவறைக்கு இட்டுச் செல்கிற மரக்கதவு..!!

கதவைத் திறந்து விரித்து, எதிர்பக்கமாக சாய்த்து வைத்த ஆதிரா.. உள்ளே தெரிந்த சிறிய மரஏணியில் கால்கள் பதித்து கீழிறங்கினாள்.. இறங்கியதுமே இடப்பக்கமாக இன்னொரு கதவு தென்பட்டது.. அதையும் தள்ளித் திறந்து அந்த ரகசிய அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள்..!!

பழங்கால மாளிகை வீடுகளில் இந்த மாதிரி நிலவறை அமைந்திருப்பது இயல்பான ஒன்றுதான்.. எதிரிகளிடம் இருந்தோ, எதிர்பாராத நிகழ்வுகளில் இருந்தோ மறைந்து கொள்ள ஏதுவான இடம்..!! இரண்டு தலைமுறைகளாக இந்த அறையில் யாரும் அதிகமாக புழங்குவது கிடையாது.. தாமிரா ஒருத்தியைத் தவிர..!! சிறுவயதில் இருந்தே சுட்டித்தனம் மிகுந்தவள் அல்லவா..?? ஏதாவது சேட்டை செய்து.. அம்மா, அப்பா, தாத்தா என்று யாரிடமாவது அடி வாங்கிவிட்டு.. இந்த அறையில் வந்து அடைந்து கொள்வாள்..!! பருவமடைந்த பிறகும் கூட.. இந்த அறையில் கணிசமான நேரத்தை ஒதுக்குவதை வாடிக்கையாகவே வைத்திருந்தாள்..!! அந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் நகல் ஏதாவது சிக்குமா என்றுதான்.. ஆதிரா இப்போது இந்த அறைக்குள் அடியெடுத்து வைத்திருப்பது..!!

அறை முழுவதையும் அடர் இருட்டுதான் நனைத்திருந்தது.. மின்விளக்கு பழுதாகி போயிருக்க, ஆதிராவின் கையிலிருந்த டார்ச்லைட்தான் சொற்பமான வெளிச்சத்தை, அறைக்குள் பாய்ச்சிக் கொண்டிருந்தது..!! அறைக்குள் நுழைந்ததுமே ஒரு பழைய புழுங்கல் நெடி.. சிலந்திகளின் கால்வண்ணத்தில் ஆங்காங்கே நூலாம்படை..!! மங்கலாக காட்சியளித்த அறைக்குள் இருந்த பொருட்கள் மீது.. டார்ச்லைட்டின் நீள்க்கற்றை வெளிச்சம் படர்ந்து, பிறகு அடுத்த பொருளுக்கு நகர்ந்தது..!!

காரை பெயர்ந்துபோன சுவர்ப் பூச்சு.. இன்சுலேஷன் இற்றுப்போன எலக்ட்ரிகல் வயரிங்.. ஒட்டடை படிந்த நான்கு ரெக்கை மின்விசிறி..!! மரக்கட்டில்.. மேஜை.. புத்தகங்கள்.. நாற்காலி.. அலமாரி.. இரும்புப் பெட்டகம்.. அழுக்கு பிடித்த அலுமினிய வாஷ் பேஸின்.. பக்கவாட்டில் யானை தந்தங்கள் பாதிக்கப்பட்டு, பரப்பு முழுவதிலும் தூசு படிந்த, ஒரு ஓவல் ஷேப் நிலைக்கண்ணாடி..!!

மேஜையும், அலமாரியுமே ஆதிராவின் இலக்காக இருந்தது..!! டார்ச்லைட்டை வாயால் கவ்விப் பிடித்துக்கொண்டு.. மேஜை ட்ராயரிலும், அலமாரி அடுக்குகளிலும் அவசர அவசரமாய் தேடினாள்.. அந்த ஆராய்ச்சி கட்டுரையின் நகலினை தாமிரா இங்கேனும் பதுக்கியிருக்கிறாளா என்று பார்த்தாள்..!! தாமிராவுடைய பத்தாம் வகுப்பு பாடப்புத்தகம்.. குறிப்பேடு.. ஹேர்பேண்ட்கள்.. உள்ளாடைகள்.. சுருட்டி வைக்கப்பட்ட அவளது ஓவியங்கள்.. வீட்டுக்கு தெரியாமல் சுவைத்திட்ட சாக்லேட் ராப்பர்கள்..!!

ஒரு ஐந்தாறு நிமிடங்கள் ஆர்வமான, தீவிரமான தேடுதல்.. உருப்படியாய் எதுவும் சிக்கவில்லை.. உள்ளங்கை முழுக்க தூசி அப்பிக்கொண்டதுதான் மிச்சம்..!!

“ப்ச்..!!”

தேடுதலை கைவிட்டு ஏமாற்றமும், சலிப்புமாய் எழுந்துகொண்ட ஆதிரா.. ‘நச்’ என்று எதிலோ முட்டிக்கொண்டாள்..!!

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..!!!”

தலையை தேய்த்து விட்டுக் கொண்டே, எதில் இடித்துக்கொண்டோம் என்று பார்த்தாள்..!! ஆளுயரத்திற்கு நின்றிருந்த ஓவியப்பலகை.. தாமிரா உபயோகப் படுத்துகிற ஓவியப்பலகை..!! அதன் மேற்புற தடித்த காகிதத்தில்.. தாமிராவால் ஆரம்பிக்கப்பட்டு, முடிக்காமல் விடப்பட்ட அந்த ஓவியம்..!!

டார்ச்லைட்டின் வெளிச்சத்தில் ஆதிரா அந்த ஓவியத்தை பார்த்தாள்.. ஊர்மக்கள் கூடிநின்று வேடிக்கை பார்க்க, அரைநிர்வாண நிலையில் இருந்த ஒரு பெண்ணை, அடித்து இழுத்து வருகிற ஓவியம்.. குறிஞ்சியை மனதில் கொண்டு வரையப்பட்ட ஓவியம் என்று, அதை பார்த்ததுமே புரிந்துகொள்ள முடிந்தது..!!

அந்த ஓவியத்தை பார்த்ததுமே ஆதிராவின் மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல் வெட்டியது.. இதே மாதிரியான ஒரு ஓவியத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது..!! ‘எங்கே பார்த்திருக்கிறோம்.. எங்கே பார்த்திருக்கிறோம்..?’ என்று நெற்றியை கீறிக்கொண்டு சில வினாடிகள் யோசித்தாள்.. அவ்வாறு யோசிக்க யோசிக்க, படக்கென அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தது.. அதனுடன் சேர்ந்து தாமிரா சம்பந்தப்பட்ட சில நினைவுகளும்..!! மனதுக்குள் ஒரு திருப்தி பரவ.. அவளுடைய உதட்டில் மெலிதாக ஒரு புன்னகை அரும்பியது..!!

“க்க்க்க்ர்ர்ர்ர்…!!!!!!”

திடீரெனெ பின்பக்கமாக அந்த சப்தம் கேட்கவும்.. ஆதிரா பதறிப்போய் திரும்பி பார்த்தாள்.. இவள் திரும்பி பார்த்ததும், இருளுக்குள் யாரோ படக்கென மறைவது போல ஒரு தோற்றம்.. வாசல் கதவு மெலிதாக அசைந்து கொண்டிருந்தது..!! ஆதிராவின் நெஞ்சுக்குழிக்குள் ஒரு திடுக்..!!

“தென்றல்..!!!!” – அவளது குரல் அவளையும் அறியாமல் பிசிறடித்தது.

“தென்றல்..!!!!”

மீண்டும் ஒருமுறை அழைத்துப் பார்த்தாள்.. பதில் ஏதும் வரவில்லை.. வெறும் பிரம்மையாக இருக்குமோ என்றொரு குழப்பம்..!! கையில் இருந்த டார்ச்லைட்டை அப்படியும் இப்படியுமாய் திருப்பி.. அறையை சுற்றி சுற்றி வெளிச்சத்தை பாய்ச்சிப் பார்த்தாள்.. வேறெந்த உருவமும் தென்படவில்லை..!!

அவ்வாறு டார்ச்லைட்டின் வெளிச்ச குவியத்துடன் ஆதிரா அந்த அறையை அலசிக் கொண்டிருந்த போதுதான்.. அவளது நாசியில் சர்ரென்று அந்த வாசனை ஏறியது.. மனதை கொள்ளை கொள்கிற அந்த அற்புத வாசனை.. மகிழம்பூவின் வாசனை..!! அறையின் பழைய நெடியை தாண்டி.. அதிக வீரியத்துடன் ஆதிராவின் நாசியை தாக்கியது..!! அந்த வாசனையை நுகர நேர்ந்ததுமே ஆதிராவின் மனதுக்குள் ஒரு அமானுஷ்ய உணர்வு பரவ ஆரம்பித்தது.. உடலில் மெலிதாக ஒரு நடுக்கம் பரவ, விரல்கள் வெடவெடத்தன..!!

“விஷ்ஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்க்..!!!!!!!”

திடீரென ஆதிராவின் காதோரமாய் அந்த சப்தம்.. அவளுடைய இதயத்துடிப்பு உடனே ஜிவ்வென்று சொடுக்கி விடப்பட்டது.. ‘ஹ்ஹ்ஹாக்..’ என்று மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டாள்..!! யாரோ அவளை அணுகுவது போலவும், அண்டுவது போலவும் அவளுக்குள் ஒரு உணர்வு.. அருகிலிருந்து யாரோ விடுகிற மூச்சுக்காற்றை அவளால் உணர முடிந்தது..!!

“யா..யாரு..?? யாரது..??”

வாய்விட்டே கேட்டுவிட்டாள்.. அப்படியும் இப்படியுமாய் காற்றில் கைகளை அசைத்து அசைத்து பார்த்தாள்.. யாரும் தட்டுப்படவில்லை..!! மகிழம்பூவின் வாசனை அவளை சற்றே கிறுகிறுக்க வைத்தது.. தேகத்தில் ஒரு தடுமாற்றத்தை உணர்ந்தாள்.. அந்த அறையை விட்டு உடனே அகன்று விடவேண்டும் போல அவளுக்குள் ஒரு உந்துதல்..!! அவசரமாய் வாசலை நோக்கி நகர்ந்தாள்.. அவ்வாறு நகர்ந்தவள், இரண்டு அடி எடுத்து வைத்ததுமே, திடீரென ப்ரேக் பிடித்தது போல நின்றாள்..!!

ஆதிரா நடக்கும்போது அவளது கையிலிருந்த டார்ச்லைட் நிலைக்கண்ணாடியின் மீது வெளிச்சத்தை சிந்த.. எதேச்சையாக அதை பார்க்க நேர்ந்த பிறகுதான், ஆதிரா அவ்வாறு ப்ரேக்கடித்து நின்றாள்..!! முகத்தில் ஒருவித மிரட்சியுடன் அந்த நிலைக்கண்ணாடியை நெருங்கினாள்.. டார்ச் வெளிச்சத்தை அதன்மீது தெளித்தாள்..!! தூசி அப்பியிருந்த கண்ணாடியில் அந்த வாசகம் கிறுக்கப்பட்டிருந்தது.. ஒரு குழந்தையின் கிறுக்கலைப் போல.. தெளிவில்லாமல்.. கோணல் மாணலாய்..!!

“கண்ணாமூச்சி ரே ரே..!!”

அத்தியாயம் 16

கரடுமுரடான மலைச்சரிவில் கார் மேல்நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது.. கதிர் காரோட்டிக் கொண்டிருந்தான்.. அவனுக்கருகே ஆதிரா கைகட்டி அமர்ந்திருந்தாள்.. இருவருடைய முகத்திலும் ஒரு கெட்டிப்பட்ட அமைதி..!! கதிர்தான் முதலில் அந்த அமைதியை குழைத்தான்..!!

“அட்ரஸ் வச்சிருக்கிங்கள்ல ஆதிரா..??”

“இல்ல கதிர்.. அவர் அட்ரஸ்லாம் தரல..!!”

“அப்புறம்..??”

“சர்ச்ல இருந்து லெஃப்ட்ல போற ரோட்ல.. லாஸ்டா, தனியா இருக்குற வீடுன்னு சொன்னார்.. வொய்ட் கலர் பில்டிங்காம்..!!”

“ஓ.. சரி சரி..!!”

ஆதிராவும் கதிரும் நேற்று அகல்விழியின் வீட்டில் இருந்து கிளம்புகையிலேயே.. தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதித்தனர்..!! அந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் நகலை எப்படியாவது கைப்பற்றுவதுதான் அவர்களது நோக்கமாக இருந்தது..!! ‘பட்டப் படிப்புக்கென ஆரம்பிக்கப்பட்ட ஆராய்ச்சிதானே இது.. தாமிராவின் கல்லூரியில் இதுபற்றி விசாரித்துப் பார்த்தால் என்ன..?’ என்று அவர்களுக்கு தோன்றியது..!! அதன்படியே.. குன்னூரில் இருக்கிற அந்த கலைக் கல்லூரிக்கு கால் செய்து.. விஷயத்தை தெளிவாக விளக்கி விசாரித்தனர்..!!

தாமிராவும், அகல்விழியும் மேற்கொண்ட அந்த ஆராய்ச்சிக்கு.. அந்த கல்லூரியை சேர்ந்த ப்ரொஃபஸர் ஒருவர் கைடாக பணிபுரிந்த தகவல் கிடைத்தது.. ‘மேலும் தகவல் பெற அவரை அணுகுங்கள்’ என்று கல்லூரியில் இருந்து அவரை கைகாட்டிவிட்டனர்..!! அவருடைய தொடர்பு எண்ணை பெற்றுக்கொண்டு கால் செய்து பேசினர்.. அவரிடம் நேரில் சந்தித்து பேச அனுமதி வாங்கினர்..!! அவரது வீடும் அகழியின் சுற்று வட்டாரத்திலேயேதான் அமைந்திருந்தது.. அங்குதான் இப்போது கதிரும், ஆதிராவும் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள்..!!

ஆதிரா சொன்ன சர்ச் வந்ததும், இடதுபுறம் காரை திருப்பினான் கதிர்.. மிக குறுகலான மண்சாலை.. மிதமான வேகத்தில் அதே சாலையில் ஐந்து நிமிடங்கள் பயணிக்க.. தனியாக நின்றிருந்த அந்த வெண்ணிற கட்டிடம் பார்வைக்கு வந்தது..!! ஆதிராவின் வீடு அளவிற்கு அரண்மனை போல இல்லாவிடிலும்.. செல்வச் செழுமையுடனே அழகுற காட்சியளித்தது அந்த வீடு..!!

காரை வெளியே நிறுத்திவிட்டு.. கேட் திறந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள்.. கோரைப் புற்களுக்குள் கால்பதித்து நடந்தார்கள்..!! வீட்டை சுற்றிலும் ஒரே நிசப்தம்.. தூரத்து நீர்வீழ்ச்சியின் ஓசை மட்டும், இங்குவரை சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது..!!

கதவுக்கு பக்கவாட்டில் பெயர்ப்பலகை தெரிந்தது.. பேராசிரியர் மணிமாறன்.. Ma, Mphil, PhD-யுடன் இன்னும் ஏதோ ஒரு புரியாத படிப்பை படித்திருந்தார்..!! பெயர்ப்பலகைக்கு கீழே காட்சியளித்த காலிங் பெல்லை கதிர் அழுத்தினான்..!!

“க்க்க்ர்ர்ர்ர்ர்…!! க்க்க்ர்ர்ர்ர்ர்…!! க்க்க்ர்ர்ர்ர்ர்…!!”

மூன்று நான்குமுறை காலிங்பெல் சத்தம் ஒலித்தும், உள்ளிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை.. கதவு திறக்கப்படவில்லை.. ஆதிராவும், கதிரும் சற்றே குழப்பமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..!!

“அவர் நம்பருக்கு வேணா கால் பண்ணி பாருங்க ஆதிரா..!!”

“இருங்க.. பண்ணிப் பாக்குறேன்..!!”

ஆதிரா தனது கைப்பையில் இருந்து செல்ஃபோனை எடுத்துக் கொண்டிருக்கும்போதே, கதிர் அவளை தடுத்தான்.

“ஒரு நிமிஷம் இருங்க.. வீட்டுக்கு பின்னாடி ஏதோ பேச்சு சத்தம் கேக்குற மாதிரி இல்ல..??”

கதிர் குழப்பமாக சொன்னதும், ஆதிராவும் நெற்றி சுருக்கத்துடன் தனது காதை உன்னிப்பாக்கி கவனித்தாள்.. ஆமாம்.. வீட்டுக்கு பின்புறம் இருந்து மிக சன்னமாக ஒரு பேச்சுக் குரல்.. ஆனால், தெளிவில்லாமல்..!!

“ஆமாம்.. கேக்குது..!!” Koothi Sex Stories In Tamil

– தொடரும்

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000