நெஞ்சோடு கலந்திடு – 23

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil New Sex Stories – அசோக் எக்கச்சக்க ஆத்திரத்தில் இருந்தான். தன் ஆத்திரம் மொத்தத்தையும் ஆக்சிலரேட்டரிடம் காட்டினான். முழுவதுமாய் முறுக்கப்பட்ட ஆக்சிலரேட்டர் பைக்கை ‘விஷ்ஷ்..’ என உச்சபட்ச வேகத்தில் சீற வைத்தது. ஸ்பீடாமீட்டர் முள் 100ஐ முத்தமிட.. அந்த பாரில் இருந்து வீடு செல்லும் பாதையில் பைக் பறந்து கொண்டிருந்தது.

அசோக் மனதுக்குள் திவாகரை திட்டிக்கொண்டே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். ‘ச்சே.. என்ன மனிதன் இவன்..?? எவ்வளவு ஆபத்தான ஆள் இவன்..?? என்ன ஒரு வெறி அவனுக்கு..?? என்ன ஒரு சூழ்ச்சிக்கார குணம்..?? இவனைக் கட்டிக்கொண்டு திவ்யா நிம்மதியாக இருக்கப்போவதில்லை.. இருக்கவே போவதில்லை..!! விட மாட்டேன்.. என்னுடைய திவ்யா இப்படி ஒரு குரூர புத்தி உடையவன் கையில் சிக்க விடவே மாட்டேன்..!! யார் என்று நினைத்துக்கொண்டான் என்னை..?? என்னிடமே எவ்வளவு எகத்தாளமாக பேசுகிறான்..?? நான் யார் என்று இன்று அவனுக்கு காட்டுகிறேன்..!!’

ஒரு அரை மணி நேரத்தில் அசோக் வீட்டை அடைந்தான். வீட்டுக்குள் நுழைந்தபோது, கார்த்திக் எதையோ கொறித்துக்கொண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தான். பரபரப்பாக உள்ளே நுழைந்த அசோக்கை வித்தியாசமாக பார்த்தான்.

“என்னாச்சு அசோக்.. ஏன் ஒரு மாதிரி இருக்குற..?”

“திவ்யாவை எங்கத்தான்..?”

“அவ ரூம்ல இருக்குறா.. ஏன்..?”

அசோக் அவனுக்கு பதில் சொல்லாமல் உள்ளறைக்குள் நுழைந்தான். ‘டேய்.. என்னடா ஆச்சு..?’ சமையலறையில் இருந்து வெளிப்பட்டுக் கேட்ட அக்காவையும் அவன் கண்டுக்கொள்ளவில்லை. விடுவிடுவென நடந்து திவ்யாவின் அறைக்குள் புகுந்தான். உள்ளே லேப்டாப்பை தட்டிக் கொண்டிருந்த திவ்யாவின் கையைப் பற்றி இழுத்தான். திவ்யாவுக்கு எதுவும் புரியவில்லை.

“எ..என்னடா..? என்னாச்சு..?”

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் திவ்யா.. வா..!!”

“என்ன பேசணும்..?”

“இங்க வேணாம்.. வா.. மொட்டை மாடிக்கு போயிடலாம்..!!”

அசோக் திவ்யாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். திவ்யாவுடையை கையை இறுகப்பற்றி தரதரவென இழுத்து செல்லும் அசோக்கையே சித்ராவும், கார்த்திக்கும் திகைப்பாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன நடக்கிறது என்று எதுவும் புரியாமலே திவ்யா அசோக்கின் வேகத்துக்கு ஈடு கொடுத்து அவன் பின்னால் சென்றாள். மொட்டை மாடியை அடைந்ததும் பொறுமை இல்லாமல் கத்தினாள்.

“ஐயோ.. என்னாச்சு அசோக்.. இவ்வளவு அவசரமா எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்த..?”

“உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் திவ்யா..!!”

“அப்படி என்ன முக்கியமான விஷயம்..?”

“நான் யாரு..??”

“ப்ச்.. இதைக் கேட்கத்தான் கூட்டிட்டு வந்தியா..?” திவ்யா சலிப்பாக கேட்டாள்.

“கேக்குறதுக்கு பதில் சொல்லு திவ்யா.. நான் யாரு..??”

“ம்ம்.. நீ என்னோட பெஸ்ட் ஃபிரண்ட்..!!”

“உனக்கு என்னை புடிக்குமா..?”

“என்ன கேள்வி இது..?”

“பதில் சொல்லு திவ்யா..!!”

“சரி.. சரி..!! ரொம்ப ரொம்ப பிடிக்கும்..!! போதுமா..?”

“உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா..?”

“இருக்கு.. அதுக்கு என்ன இப்போ..?”

“எவ்வளவு..??”

“எக்கச்சக்கமா இருக்கு..!! என்ன ஆச்சு உனக்கு..??”

“நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்குத்தான் செய்வேன்னு நம்புறியா..?”

“இங்க பாரு அசோக்.. என்னை படைச்ச கடவுளை விட நான் உன்னை அதிகமா நம்புறேன்..!! என்ன மேட்டர்னு கொஞ்சம் சொல்லித் தொலையேன்..!!”

திவ்யா எரிச்சலாய் சொல்லிவிட்டு அசோக்கின் முகத்தையே குழப்பமாய் பார்த்தாள். அசோக் சில வினாடிகள் எதுவும் பேசவில்லை. திவ்யாவுடைய கண்களையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் மிகவும் இறுக்கமான குரலில் கேட்டான்.

“என்மேல அவ்வளவு நம்பிக்கை இருக்குன்னா.. நான் எது சொன்னாலும்.. அப்படியே கண்ணை மூடிட்டு செய்வியா..?”

“ம்ம்.. செய்வேன்..!!”

“ப்ராமிஸ்..??”

“ப்ராமிஸ்..!!! என்ன செய்யணும்..? சொல்லு.. இந்த மாடில இருந்து குதிக்கணுமா..?” திவ்யா இன்னும் எரிச்சலாகத்தான் காணப்பட்டாள்.

“இல்லை.. திவாகரை உன் மனசுல இருந்து அழிக்கனும்..!!”

அசோக் தெள்ளத்தெளிவாக சொல்ல, திவ்யா உச்சபட்ச அதிர்ச்சிக்கு உள்ளானாள். அவள் சுத்தமாக அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவளுடைய முகத்தில் ஓடிய அதிர்ச்சி ரேகைகள் அப்பட்டமாய் தெரிந்தன. அவள் வாயிலிருந்து வார்த்தைகள் திக்கி திணறி வெளிப்பட்டன.

“அ..அசோக்.. எ..என்ன சொல்ற நீ..?”

“ஆமாம் திவ்யா.. இந்த நிமிஷத்துல இருந்து..!! அவரை நீ மறந்துடணும்.. அவர்கிட்ட இருந்து சுத்தமா விலகிடனும்.. எந்த வகைலையும் அவரை இனி நீ காண்டாக்ட் பண்ண கூடாது..!!”

“எ..எனக்கு எதுவும் புரியலை அசோக்.. எ..என்னாச்சு இப்போ திடீர்னு..?”

“அவர் சரியில்ல திவ்யா.. ரொம்ப மோசமான ஆள்..!! அவரை கட்டிக்கிட்டு நீ சந்தோஷமா இருப்பேன்னு எனக்கு நம்பிக்கை இல்ல..!!”

“ஏ..ஏண்டா அப்படி சொல்ற..?”

“அவரோட நடத்தை சரியில்ல.. எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு அவருக்கு.. கோபம், பொறாமை, சூழ்ச்சி, பழிவாங்குறதுனு.. அவரோட கேரக்டர்சே ஒண்ணுகூட சரியில்லை..!! பத்தாததுக்கு நெறய பொண்ணுகளோட தொடர்பும் இருக்கு..!! அவர் உனக்கு வேணாம் திவ்யா..!!”

“அ..அசோக்.. நீ நெனைக்கிற மாதிரி அவர் இல்லைடா..!!”

“ஐயோ திவ்யா.. நீ நெனைக்கிற மாதிரிதான் அவர் இல்ல..!! நான் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டுத்தான் சொல்றேன்..!! என்னை நம்பு..!!”

“சரி.. உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்..?”

திவ்யா அந்த மாதிரி கேட்கவும், அசோக் இப்போது சற்று திணறினான். ‘திவாகரே இதெல்லாம் சொன்னான்.. இப்படி எல்லாம் பேசினான்..’ என்று சொன்னால் சத்தியமாக இவள் நம்பப்போவதில்லை. உடனே திவாகருக்கு கால் செய்து கேட்பாள். அவன் இவளிடம் நடிப்பான். இந்த லூசும் அவனுடைய தேன் தடவிய வார்த்தைகளை நம்பி ஏமாறும். அதனால் உடனடியாய் ஒரு பொய்யை தயார் செய்து, திக்கி திணறி திவ்யாவிடம் ஒப்பித்தான்.

“எ..எனக்கு தெரிஞ்ச ஒரு பி..பிரண்ட் மூலமா விசாரிச்சேன்..”

“யார் அவர்..?”

“அ..அதை என்னால சொ..சொல்ல முடியாது..!!”

“ஏன்..??”

“தான் யார்னு காட்டிக்க அவர் விரும்பலை.. திவாகரால தனக்கு ஆபத்து வந்துடுமோன்னு பயப்படுறாரு..!!”

“ஓ.. அவரை நீ நம்புறியா..?”

“ஆமாம்.. அவரை நான் முழுசா நம்புறேன்..!! நீ என்னை நம்புறியா திவ்யா..??”

அசோக் பரிதாபமாக கேட்டுவிட்டு திவ்யாவையே பார்க்க, அவளுக்கு இப்போது என்ன சொல்வதென்றே புரியவில்லை.

“என்னடா.. இப்படி கேக்குற..?” என்றாள் அவளும் பரிதாபமாக.

“அப்போ அவரை மறந்துடுறேன்னு சொல்லு..!!”

“நா..நான் வேணா திவாகர்கிட்ட ஒரு தடவை பே..பேசி பார்க்கவா..?” திவ்யா தயங்கி தயங்கி கேட்டாள்.

“நோ திவ்யா..!! அதுக்கு நான் அல்லோ பண்ண மாட்டேன்..!!”

“ஏண்டா..?”

“அவருக்கு ஏற்கனவே என்மேல எக்கச்சக்கமா கோவம்… இப்போ நீ அவர்கிட்ட பேசினா.. அவர் உன்னை நல்லா குழப்பி விட்ருவாரு.. நீயும் அதை நம்புவ..!! உன் கண்ணுக்கு நான் கெட்டவனா தெரிவேன்.. அதான் சொல்றேன்..!!”

“நீ அவரை தப்பவே புரிஞ்சு வச்சிருக்குற அசோக்.. அவருக்கு உன் மேல எந்த கோவமும் கிடையாது..!! அவர்கிட்ட பேசினா.. இதுக்கு ஒரு நல்ல முடிவு கெடைக்கும்னு எனக்கு தோணுது..!!” திவ்யா பிடிவாதமாக இருக்க, அசோக் இப்போது எரிச்சலானான்.

“சரி.. போ.. போய் பேசு..!! அவர்தான் உனக்கு முக்கியம்னா.. போய் பேசு..!! ஆனா ஒன்னு.. அப்புறம் என்கிட்டே எப்போவும் பேசாத..!!”

அசோக் அவ்வாறு இரக்கமே இல்லாமல் சொல்ல, திவ்யா அப்படியே ஆடிப் போனாள். அவளுடைய கண்கள் பட்டென கலங்கி போயின. அவளது மனம் முழுவதும் குழப்பத்தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ‘சிறு வயதில் இருந்தே தான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் நண்பனா..?? அல்லது சில நாட்கள் மட்டுமே அறிமுகம் ஆனவாக இருந்தாலும், வாழ்வின் மிச்ச நாட்களை பகிர்ந்து கொள்ள திட்டமிட்டிருந்த காதலனா..?’ அவளால் எளிதில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தத்தளித்தாள். அவள் ஊமையாயிருக்க, அசோக்கே இப்போது கேட்டான்.

“என்ன திவ்யா.. ஒன்னும் சொல்ல மாட்டேன்ற..?”

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை அசோக்.. ஒரே குழப்பமா இருக்கு..!!”

“ஓ..!! அப்போ இன்னும் என் மேல உனக்கு நம்பிக்கை வரலை.. இல்ல..? அன்னைக்கு ட்ரெயின்ல.. லைஃப்ல எந்த முடிவா இருந்தாலும் என்னை கேட்டுத்தான் எடுப்பேன்னு சொன்னியே.. அதெல்லாம் சும்மா பேச்சுக்கு சொன்னியா.. எல்லாம் வெறும் நடிப்பா திவ்யா..??” அசோக்கின் வார்த்தைகள் திவ்யாவை மிகவும் காயப்படுத்தின. துடித்துப் போனாள்.

“இப்படிலாம் பேசாத அசோக்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!”

“இங்க பாரு திவ்யா.. உன்னை கஷ்டப்படுத்தனும்னு நான் இப்படி பேசலை.. உன் வாழ்க்கை மேல எனக்கு இருக்குற அக்கறைலதான் இப்படிலாம் பேசுறேன்..!! நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.. இது உன் லைஃப்ல ரொம்ப முக்கியமான டெசிஷன்.. இதுல ஏதாவது தப்பா முடிவெடுத்தேன்னா.. உன் லைஃபே ஸ்பாயில் ஆயிடும்..!! உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா.. நான் உனக்கு நல்லதுதான் செய்வேன்னு முழுசா நீ நம்புனா.. நான் சொல்ற மாதிரி கேளு.. இல்லன்னா.. அப்புறம் எப்போவுமே நான் உனக்கு ஹெல்ப் பண்ண முடியாத மாதிரி போயிடும்..!! நல்லா யோசிச்சு சொல்லு..!!”

அசோக் சொல்லி முடித்துவிட்டு, திவ்யாவின் முகத்தையே அமைதியாக பார்த்தான். அவள் சொல்லப் போவதை வைத்துதான்.. திவ்யாவுடனான தன் நட்பும் தொடரப் போகிறது என்ற அபாயமும்.. அவன் இதயத்தை ட்ரம்ஸ் வாசிக்க செய்தது. திவ்யா கண்களில் நீர் கசிய, தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். இது தன் வாழ்வின் மிக முக்கியமான முடிவு என்பதை அவளும் இப்போது நன்கு உணர்ந்திருந்தாள். அசோக்கின் முகமும், திவாகரின் முகமும் மாறி மாறி அவளது மனக்கண்ணில் வந்து போயின.

ஒரு அரை நிமிடம் திவ்யா அந்த மாதிரி அமைதியாக யோசித்திருப்பாள். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவளாய், கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள். அசோக்கின் முகத்தை ஏறிட்டு பார்த்து தெளிவாக சொன்னாள்.

“ஓகே அசோக்.. நீ சொல்றதை நான் நம்புறேன்..!! அவரை விட்டு விலகிடுறேன்..!!”

திவ்யா சொன்னதும் அசோக் அப்படியே முகம் மலர்ந்து போனான். அவன் மனதில் ஒரே நேரத்தில் நிம்மதியும், சந்தோஷமும் போட்டி போட்டுக்கொண்டு பொங்கி வழிந்தன. தன் வாழ்க்கையையே அவன் கையில் ஒப்படைக்க துணிந்த அவனது தோழியை மிகவும் பெருமிதமாக பார்த்தான். நெஞ்சுக்குள் ஒரு உணர்ச்சி ஊற்று பீறிட்டு கிளம்பியது. உதடுகளை கடித்து அந்த உணர்சிகளை அடக்கிக் கொண்டான்.

“தே..தேங்க்ஸ் திவ்யா.. தேங்க்ஸ்..!!” என வார்த்தை வெளியே வராமல் தடுமாறினான்.

“நீதான் எனக்கு முக்கியம் அசோக்..!! சொல்லு.. நான் என்ன பண்ணனும்..?”

“சொல்றேன்.. மொதல்ல இந்த சிம்மை கழட்டி தூரமா போடு.. வேற நம்பர் மாத்திக்கோ..!!”

“ம்ம்..”

“அவருக்கு ஃபைனலா ஒரு மெயில் அனுப்பிச்சுடு..!! ‘நான் உங்களை லவ் பண்ணலை.. அன்னைக்கு நீங்க சூசயிட் பண்ணிக்கிறேன்னு மிரட்டுனதுல நான் குழம்பி போய் அப்படி சொல்லிட்டேன்.. இப்போ நான் தெளிவாயிட்டேன்.. நீங்க எனக்கு வேணாம்.. தயவு செய்து என்னை இனி தொந்தரவு செய்யாதீங்க.. என்னை நிம்மதியா இருக்க விடுங்க.. நான் எந்த வகைலயாவது உங்களுக்கு கஷ்டம் கொடுத்திருந்தா என்னை மன்னிச்சுடுங்க..’ அப்டின்னு ஒரு மெயில் அனுப்பிச்சுட்டு.. அந்த மெயில் ஐடியும் க்ளோஸ் பண்ணிடு..!! அவர் என்ன ரிப்ளை பண்ணிருக்கார்னு பார்க்க கூட அதை ஓப்பன் பண்ணாத..!!”

“ம்ம்.. சரி.. ஆனா அவர் எப்படியும் என்னை காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணுவாரு..!!”

“கண்டிப்பா பண்ணுவாரு.. எனக்கும் தெரியும்.. உன்னை அவ்வளவு சீக்கிரமா அவர் விட மாட்டார்..!! நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ திவ்யா.. இது ரொம்ப ரொம்ப முக்கியம்.. எந்த காரணம் கொண்டும் அவர் கூட நீ பேசக்கூடாது.. அவர்கிட்ட பேசினா நிச்சயமா உன்னை குழப்பிடுவாரு..!! அவர் உன்னை தேடிவந்தா முகம் கொடுத்து பேசாத.. மூஞ்சில அடிச்ச மாதிரி பேசி அனுப்பிடு..!! கொஞ்ச நாள்ல அவரோட முயற்சியை அவர் கை விட்ருவாரு.. அப்புறம் உனக்கு எதுவும் பிரச்னை இல்லை.. புரியுதா..?”

“ம்ம்.. சரிடா..!! புரியுது..!!” திவ்யாவின் குரல் சோகமாக ஒலிக்க, அசோக் அவளுடைய தோளைப் பற்றி தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

“இங்க பாரு திவ்யா.. நீ சரியான முடிவுதான் எடுத்திருக்குற.. அதுக்காக சந்தோஷப்படு..!!”

“ம்ம்ம்ம்..” திவ்யா புன்னகைக்க முயன்று தோற்றாள்.

“நான் உன்கூட இருக்கேன் திவ்யா.. நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்குத்தான் செய்வேன்.. எல்லாம் நான் பாத்துக்குறேன்..!!”

“ம்ம்.. நீ இருக்குற தைரியத்துலதான்.. நான் இருக்கேண்டா அசோக்..!!”

சொல்லிவிட்டு திவ்யா அசோக்கின் தோளில் சாய்ந்து கொள்ள, அவன் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான். Koothi Tamil New Sex Stories

– தொடரும்

நெஞ்சோடு கலந்திடு – 23

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000