நெஞ்சோடு கலந்திடு – 18

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamaveri – “வீட்டுக்கு எப்டி போவீங்க..?” அசோக்கிடம் கேட்டாள் அஞ்சு.

“நான் பைக்ல வந்திருக்கேன்.. அதுலயே..”

“இல்ல இல்ல.. இவ இருக்குற நிலைமைல பைக் வேணாம்.. எங்கிட்ட கார் இருக்கு.. அதுல போயிடலாமா..?” கேட்ட அஞ்சுவை அசோக் நன்றியுடன் பார்த்தான்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்கள் மூவரும் காரில் சென்றுகொண்டிருந்தார்கள். அஞ்சு காரை ஓட்ட, அசோக்கும், திவ்யாவின் பின்சீட்டில அமர்ந்திருந்தார்கள். அஞ்சு நிதானமாகவே காரை செலுத்தினாள். அவ்வப்போது பின்னால் திரும்பி அவர்களை பார்த்துக் கொண்டாள். அசோக் அவளுக்கு வழி சொல்லிக்கொண்டே வந்தான். பாதி தூரம் சென்று கொண்டிருக்கையில்.. திவ்யா அசோக்கிடம் பரிதாபமான குரலில் கேட்டாள்.

“எனக்கு மறுபடியும் தலை சுத்துற மாதிரி இருக்கு அசோக்.. உன் மேல சாஞ்சுக்கவா..?”

“ம்ம்.. சாஞ்சுக்கோ திவ்யா..”

திவ்யா அசோக்கின் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவனுடைய இடுப்பை ஒருகையால் வளைத்துக்கொண்டு.. இமைகளால் விழிகளை மூடிக்கொண்டு.. ஒரு குழந்தையைப் போல.. சுகமாக அவன் நெஞ்சில் படர்ந்து கிடந்தாள்..!! ஊரெல்லாம் அலைந்துவிட்டு நமது வீட்டுக்கு வந்ததும், நம் மனதில் ஒரு நிம்மதியுணர்வு படருமே.. அப்படி ஒரு உணர்வுதான் அப்போது திவ்யாவை ஆக்ரமித்திருந்தது..!! அவளுடைய படபடப்பும் துடிதுடிப்பும் அடங்கி, மனதும் உடலும் அமைதியாகி போனது..!!

திவ்யாவை அந்த நிலையில் பார்க்க, அசோக்கிற்கு அழுகை வந்தது. கண்கள் விட்டு வழிந்த கண்ணீரை திவ்யாவுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டான்..!! மெலிதான விசும்பல் ஒலி கூட வெளியே கேட்க கூடாது என, உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டான்..!! அஞ்சு தன் தலைக்கு மேலிருந்த கண்ணாடி மூலமால, பின்சீட்டில் அமர்ந்திருந்த அசோக்கை கவலையுடன் கவனித்துக்கொண்டே, காரை செலுத்திக் கொண்டிருந்தாள்.

வீட்டை அடைந்ததும், அசோக்கும், அஞ்சுவும் திவ்யாவை கைத்தாங்கலாக அழைத்து சென்று அவளுடைய அறையில் படுக்க வைத்தார்கள். கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அஞ்சு, அப்புறம் கிளம்பினாள். அப்பார்ட்மன்ட்ஸ் கீழ் வரை சென்று அசோக் அவளை வழியனுப்பினான். மிகுந்த நன்றியுணர்ச்சியுடன் அவளிடம் சொன்னான்.

“ரொம்ப தேங்க்ஸ்ங்க அஞ்சு..”

“ச்சே.. இதுக்கெதுக்கு தேங்க்ஸ்..? என் பிரண்டுக்காக இந்த சின்ன ஹெல்ப் கூட நான் பண்ண மாட்டனா..?”

“இ..இருந்தாலும்..”

“ஒன்னும் இழுக்க வேணாம்.. விடுங்க..!! ஆமாம்.. வீட்ல மத்தவங்கல்லாம் எங்க..?”

“எல்லாம் எங்க ஊர் திருவிழாவுக்கு போயிருக்காங்க.. காலைலதான் போனாங்க.. இவளும் நைட்டு போறதா இருந்தது.. இப்படி ஆகிப்போச்சு..!!”

“ம்ம்ம்.. சரிங்க.. பாத்துக்கங்க அவளை.. நான் கெளம்புறேன்..!!”

“ம்ம்.. போயிட்டு வாங்க..!!”

சொல்லிவிட்டு அசோக் புன்னகைக்க, அஞ்சு காரை நோக்கி நடந்தாள். காரை நெருங்கியவள் கார்க்கதவை திறக்கப் போகும் முன்.. ஒருகணம் அப்படியே நின்று.. திரும்பி.. அசோக்கை பார்த்தாள்..!! அசோக் எதுவும் புரியாமல் ‘என்ன..??’ என்பது போல அவளை பார்த்தான். இப்போது அஞ்சு தயங்கி தயங்கி சொன்னாள்.

“அ..அப்போ.. மேட்ச் பாக்குறப்போ.. திவ்யாவை ல..லவ் பண்றதா.. சும்மா வெ..வெளையாட்டுக்கு சொன்னேன்னு சொன்னீங்களே..? நானும் அப்போ அப்படித்தான் நெனச்சேன்..!! ஆனா இப்போ.. எ..எனக்கு என்னவோ அப்படி தோணலை..!!”

சொன்னவள் அதன்பிறகு ஒரு நொடி கூட காத்திருக்கவில்லை. கதவை திறந்து காருக்குள் நுழைந்தாள். ஸ்டார்ட் செய்து சர்ரென பறந்தாள். அசோக் திகைத்துப் போனவனாய் கொஞ்ச நேரம் அங்கேயே நின்றிருந்தான்.

அத்தியாயம் 20

அசோக் காலை கட் செய்தான். செல்போனை பாக்கெட்டில் திணித்துக் கொண்டான். கதவு திறந்து வீட்டுக்குள் நுழைந்தான். திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான். அறைக்குள் நுழைந்தவன் சற்றே ஆச்சரியமானான். சற்று முன்பு வரை அசந்து தூங்கிக்கொண்டிருந்த திவ்யா, இப்போது எழுந்து படுக்கையில் அமர்ந்திருந்தாள். அசோக் உள்ளே நுழைந்ததும் சற்றே எரிச்சலாக கேட்டாள்.

“எங்கடா போயிட்ட என்னை விட்டுட்டு..?”

“நீ தூங்கிட்டு இருந்த திவ்யா.. அதான் உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னு.. வெளில போய் ஃபோன் பேசிட்டு வந்தேன்..!!”

“ஓ.. ஃபோனா..? நானும் இப்போத்தான் ஒரு கால் பேசிட்டு.. ஃபோனை கீழ வச்சேன்..!! ஆமாம்.. யாரு உனக்கு கால் பண்ணினா..?”

“யாரும் பண்ணலை.. நான்தான் பண்ணினேன்.. ஊருக்கு..!!”

“ம்ம்.. என்ன சொன்ன..?”

“ஃபுல்லா சொல்லலை.. மேலோட்டமா சொன்னேன்.. பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லை.. திவ்யா இன்னைக்கு வரமாட்டா.. இன்னைக்கு ஒருநாள் நான் அவளை பாத்துக்குறேன்.. நாளைக்கு நைட்டு ஊருக்கு அனுப்பி வச்சிர்றேன்னு சொன்னேன்..!!”

“ம்ம்.. அவங்க என்ன என்ன சொன்னாங்க..?”

“ஒன்னும் சொல்லலை.. அதான் நான் இருக்கேன்ல.. நான் பாத்துப்பேன்னு நெனச்சிருப்பாங்க..!! அதுசரி.. உனக்கு யார் கால் பண்ணினது..?”

“யாரும் பண்ணலை.. நான்தான் பண்ணினேன்.. திவாகருக்கு..!!”

“ஓ..!! என்ன சொன்னாரு..?”

“நல்லா திட்டினாரு..!!”

“திட்டினாரா..? எதுக்கு..?”

“ம்ம்ம்..?? ‘இந்த எழவுக்குத்தான் ஸ்போர்ட்ஸ்லாம் வேணாம்னு சொன்னேன்.. நான் சொல்ல சொல்ல கேட்காம பேஸ்கட்பால் பேஸ்கட்பால்ன்னு பொலம்பினல.. உனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்..’ அப்டின்னார்..!!”

“ஓ..”

“ப்ச்.. அவர்கிட்ட பேசினா.. ஆறுதலா இருக்கும்னு கால் பண்ணினேன்.. அவர் என்னடான்னா..? போ அசோக்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!”

வருத்தமாக சொன்ன திவ்யா அருகில் அமர்ந்திருந்த அசோக்கின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள். அசோக் அவளுடைய கூந்தலை இதமாக வருடிக் கொடுத்தான். இப்போது அவன் மனதுக்குள் திவாகரின் மீது ஒரு இனம்புரியாத வெறுப்பு பரவ ஆரம்பித்தது. ‘ச்சே.. என்ன மாதிரி காதலன் இவன்..? காதலி காயம்பட்டு கிடக்கையில்.. அவளுக்காக கண்ணீர் சிந்தாவிட்டால் கூட பரவாயில்லை.. காரண காரியங்கள் ஆராய்ச்சி செய்து.. அந்த காயத்தை மேலும் பெரிது படுத்தினால் எப்படி..??’. அசோக்கிற்கு ‘திவாகர் சரியில்லையோ..’ என முதல்முறையாக ஒரு எண்ணம் ஓடியது. இப்போது அசோக் வருத்தமாக சொன்னான்.

“ச்சே..!! அவர் ஏன் இப்படி இருக்குறாரு..?”

“தெரியலைடா.. சில நேரம் அவரை புரிஞ்சுக்கவே முடியலை..!!”

“திவ்யா..”

“ம்ம்ம்..”

“நா..நான்.. உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும்..”

“என்ன..?” திவ்யா அசோக்கின் முகத்தை ஏறிட்டாள்.

“ஒரு வாரமா உன்கிட்ட இருந்து மறைச்சுட்டேன்..”

“எ..என்னடா சொல்ற..?” அவளுடைய குரலில் இப்போது ஒரு பதட்டம் ஏறியிருந்தது.

“திவாகருக்கு குடிப்பழக்கம் இருக்கு திவ்யா..!!”

“அசோக்..!!!” திவ்யாவின் அதிர்ச்சி அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

“ஆமாம் திவ்யா..!! நான் போன வாரம் அவரை ஒரு பார்ல மீட் பண்ணினேன்..!! அவர் அங்க நடந்துக்கிட்ட விதத்தை வச்சு பார்த்தா. அடிக்கடி அவர் அங்க வந்து போவார் மாதிரி தெரிஞ்சது..!!”

“நோநோ..!! இல்ல அசோக்.. நீ ஏதோ தப்பா சொல்ற.. அவருக்கு அந்த மாதிரி பழக்கம்லாம் இல்லை..!!”

“ப்ச்.. சரியாத்தான் சொல்றேன் திவ்யா.. அவரே ‘ஐ ஆம் திவாகர்’னு எங்கிட்ட வந்து கைகுலுக்குனாரு.. நான்தான் என் பேரை அவர்கிட்ட தப்பா சொல்லிட்டு வந்தேன்..!!”

“நீ பேரை தப்பா சொன்னியா..? ஏன்..?”

“காரணமாத்தான்.. பின்னால எதுவும் பிரச்னை வர கூடாதுன்னுதான்..!!”

“என்னடா சொல்ற.. எனக்கு எதுவுமே புரியலை..!! அதனால என்ன பிரச்னை வரப் போகுது..?”

“பொறு.. புரியிற மாதிரியே சொல்றேன்..!! இங்க பாரு திவ்யா.. ட்ரிங்க்ஸ் சாப்பிடுறான்றதாலயே ஒருத்தனை கெட்டவன்னு நாம முடிவு பண்ணிட முடியாது..!! அவரை பார்ல வச்சு பார்த்தப்போ ஃபர்ஸ்ட் எனக்கும் ஷாக்கா இருந்தது..!! அப்புறம் கொஞ்சம் நிதானமா யோசிச்சேன்.. ‘அவர் நல்லவராவே இருக்கலாம்.. உன்னை இழந்துடக் கூடாதுன்னு உன்கிட்ட அந்த உண்மையை மறைச்சிருக்கலாம்.. இப்போதைக்கு இதை தேவையில்லாம பெரிய விஷயமாக்க வேணாம்.. பின்னாடி தேவைப்பட்டா உன்கிட்ட சொல்லிக்கலாம்.. இல்லனா அந்த மேட்டரை அப்படியே விட்டுடலாம்..’ அப்டின்னு தோணுச்சு..!! எப்படியும் நீ திவாகர்ட்ட என்னை பத்தி சொல்லிருப்ப.. என் பேர் அசோக்னு நான் அவர்கிட்ட சொல்லிருந்தா.. அவர் என் மேல இன்ட்ரஸ்ட் காட்டிருப்பாரு.. அது பின்னால பிரச்னையாக வாய்ப்பிருக்கு..!! அதைவிட நான் யாரோ ஒருத்தன் அப்டின்னு அவர் நெனைச்சுக்குறதுதான் நல்லதுன்னு தோணுச்சு.. அதான் என் பேரை மாத்தி சொன்னேன்..!! அவர் மிஞ்சி மிஞ்சி போனா ஒரு அஞ்சு நிமிஷம் என் எதிர உக்காந்திருப்பாரு.. அதுவும் டிம் லைட்ல..!! ஸோ.. அவர் என்னை ப்யூச்சர்ல ஞாபகம் வச்சுக்க சான்சே இல்லை..!!”

“ம்ம்.. இவ்வளவு நடந்திருக்கு.. எல்லாம் என்கிட்டே இருந்து மறைச்சுட்டேல..?” திவ்யாவுடைய குரலில் அதிர்ச்சியும் ஆத்திரமும் சரிசமமாக கலந்திருந்தது.

“ப்ச்.. எல்லாம் உன் நல்லதுக்காகத்தான் திவ்யா..!!”

“போடா..!! இப்போ மட்டும் எதுக்கு வந்து சொன்னியாம்..?”

“அவர் உன்னை திட்டுனார்னு சொன்னதும் எனக்கு மனசு கேக்கலை.. உன்கிட்ட சொல்லிர்றது நல்லதுன்னு தோணுச்சு..!! அவர் சரியில்லையோன்னு எனக்கு ஒரு டவுட் வர ஆரம்பிச்சிடுச்சு.. அதான் சொல்லிட்டேன்..!!”

“உனக்கு டவுட் மட்டுந்தானா..? எனக்கு கன்ஃபார்ம்டே ஆயிடுச்சு.. அவர் சரியில்லைன்னு..!! எப்படி நடிச்சு என்னை ஏமாத்திட்டான்.. பொறுக்கி ராஸ்கல்.. அவனை என்ன பண்றேன் பாரு..!!”

ஆத்திரமாக சொன்ன திவ்யா, அவசரமாக செல்போனை எடுத்தாள். திவாகரின் நம்பருக்கு டயல் செய்ய முயன்றாள். அசோக் அவளை தடுத்து, அவள் கையிலிருந்து அந்த செல்போனை பறித்தான்.

“ஐயோ.. என்ன பண்ற திவ்யா நீ..? பொறுமையா இரு.. அவசரப்படாத..!!”

“இன்னும் எதுக்குடா என்னை பொறுமையா இருக்க சொல்ற..?”

“டென்ஷனாகாம நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. அவர் உன் மேல இருக்குற காதலால கூட அதை மறைச்சிருக்கலாம்.. இப்போதைக்கு இதை ஒரு பெரிய விஷயமாக்காத..!!”

“இப்போ என்னை என்னதான் பண்ண சொல்ற..?”

“அவர்கிட்ட இந்த மேட்டர் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத.. எப்பவும் போல பேசு.. ஆனா முன்னாடி விட இனிமே ரொம்ப கேர்ஃபுல்லா இரு..!! அவரைப் பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுக்கோ.. அவர் உன் மேல வச்சிருக்குற லவ் உண்மைதானான்னு உறுதி பண்ணிக்கோ..!! அது உண்மையா இருந்தா.. இதெல்லாம் ஒன்னும் பெரிய மேட்டரே இல்லை..!! என்ன.. புரியுதா..??”

“ம்ம்.. புரியுது.. புரியுது..!!”

“அதை ஏன் மூஞ்சியை உம்முன்னு வச்சுக்கிட்டு சொல்ற.. கொஞ்சம் சிரிச்சுக்கிட்டேதான் சொல்லேன்..”

“ஈஈஈஈ…!! புரியுது.. போதுமா..?”

“இல்லையே.. உன் வாய்ஸ்ல தெம்பே இல்லையே..?”

“ம்ம்ம்..? அதுக்கு காரணம் உடம்புல தெம்பு இல்லை.. அதான்..!!”

“என்னடி சொல்ற..?”

“பசிக்குதுடா..!!”

“அச்சச்சோ.. திவ்யா குட்டிக்கு பசிச்சிடுச்சா..? ஓகே ஓகே.. ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு.. ஐயா சாப்பாட்டோட வர்றேன்..!!”

“பத்து நிமிஷத்துல எப்படி ஹோட்டலுக்கு போயிட்டு வருவ..?”

“ஹோட்டலுக்கா..?? தி கிரேட் குக் அசோக் இருக்குறப்போ.. ஹோட்டல் எதுக்கு..?”

“நீ சமைக்க போறியா.. அதெல்லாம் தெரியுமா உனக்கு..?”

“என்ன இப்படி கேட்டுட்ட..? பிரம்மாதமா சமைப்பேன்..!!”

“போடா.. வெளையாடாத..!!”

“வெளையாடலை திவ்யா.. ஆறுமாசம் நான் பெங்களூர்ல பிரண்ட்சோட தங்கிருந்தேன்ல.. அப்போ கொஞ்சம் கத்துக்கிட்டேன்..”

“கத்துக்கிட்ட கருமத்தை என்னை வச்சு ட்ரை பண்ணி பாக்க போறியா..?”

“ஹேய்.. ஓவரா பேசாதடி.. எது பேசுறதா இருந்தாலும்.. நான் சமைச்சதை சாப்பிட்டுட்டு.. அப்புறம் பேசு..!!”

“சரி சரி பார்க்கலாம்.. டென் மினிட்ஸ்தான கேட்ட..? யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்..!!” சொல்லிவிட்டு திவ்யா மணிக்கட்டை திருப்பி நேரம் பார்க்க,

“அடிப்பாவி.. பத்து நிமிஷம்னா.. கரெக்டா பத்தே நிமிஷம்தானா..? கொஞ்சம் முன்ன பின்ன ஆகும்..!!”

“ஓகே.. டேக் யுவர் ஓன் டைம்..!! அதுசரி.. என்ன சமைக்க போற..?”

“வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்..!! ஐயாவோட ஸ்பெஷல்..!! உனக்கு ஓகேவா..?”

“எனக்கு டபுள் ஓகே.. அசத்து..!!”

அசோக் முழுதாக நாற்பது நிமிடங்கள் எடுத்துக் கொண்டான். அரிசியை கழுவி குக்கரில் போட்டு.. ஆனியன், சில்லி, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் கட் செய்து.. பட்டாணி உறித்து.. பின்பு எல்லாவற்றையும் சட்டியில் போட்டு.. உப்பு, மிளகு, சோயா சாஸ் ஊற்றி கிளறி..!! அவன் பரபரப்பாக சமைப்பதை, திவ்யா கைகள் கட்டி ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து ரசித்தாள்..!! சமைத்து முடித்து இரண்டு ப்ளேட்களில் ஆவி பறக்க ஃப்ரைட் ரைஸை எடுத்து வந்தான் அசோக்..!!

“ஃப்ரைட் ரைஸ் ரெடி..!!”

“வாவ்..!! ஸ்மெல்லே சூப்பரா இருக்குடா அசோக்..!!” சந்தோஷ கூச்சலிட்டாள் திவ்யா.

“சாப்பிட்டு பாரு.. டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும்..!!”

சாப்பிட்டார்கள்..!! ஆனால் வாசனை இருந்த அளவுக்கு ருசி ஒன்றும் பிரம்மாதமாக இல்லை..!! இரண்டு வாய் அள்ளி வைத்ததுமே அசோக் அதை உணர்ந்து கொண்டான்..!! முகத்தை சுளித்தவாறே திவ்யாவை நிமிர்ந்து பார்க்க, அவளோ..

“நல்லா சமைச்சிருக்குறடா.. செம டேஸ்ட்.. உனக்கு வரப்போறவ ரொம்ப கொடுத்து வச்சவ..!!”

என உற்சாகமாக சொல்லிக்கொண்டே கைநிறைய சாதத்தை அள்ளி வாயில் திணித்துக் கொண்டாள். பசியில் இருந்ததால் அப்படி சொன்னாளோ.. அசோக் மீதிருந்த பாசத்தினால் அப்படி சொன்னாளோ.. அதைக் கேட்டபோது, அசோக் அப்படியே உருகிப் போனான்..!! தன் கையால் சமைத்த உணவை, தன் காதல் தேவதை ஆசையாக சாப்பிடுவதையே கண்கொட்டாமல் பார்த்து ரசித்தவாறு.. அவனும் அமைதியாக உண்ண ஆரம்பித்தான்..!! இப்போது ஏனோ.. சாப்பாடு ருசியாக மாறிவிட்டது போல அவனுக்கு தோன்றியது..!!

சாப்பிட்டு முடித்ததும் அசோக்கே எல்லா பாத்திரங்களையும் கழுவி அடுக்கி வைத்தான். அப்புறம் புகை பிடிக்க வேண்டும் போல தோன்ற, பால்கனிக்கு சென்று ஒரு ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டு அமைதியாக புகை விட்டான். திவ்யாவும் அவனுக்கருகே வந்து நின்று கொண்டாள். அவனுடைய வலது கையை கட்டிக்கொண்டு, அவனது தோளில் ஆதரவாய் சாய்ந்து கொண்டாள். அசோக் மெல்ல ஆரம்பித்தான். Pundai Nakkum Tamil Kamaveri

– தொடரும்

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000