நெஞ்சோடு கலந்திடு – 14

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil New Sex Stories – உடை விஷயம் மட்டும் இல்லை. திவாகரிடம் எப்படி பேச வேண்டும் என்பது பற்றியும் நிறைய ஆலோசனைகள் கேட்டுக் கொண்டாள். அசோக்கும் அட்வைஸ்களை வாரி வழங்கினான்.

“அவர்கிட்டயும் போய் லூசு மாதிரி வளவளன்னு பேசிட்டு இருக்காத.. அவருக்கு பேச சான்ஸ் கொடு.. நீ பேசுறதை விட.. அவர் பேசுறதை கவனி..”

“ம்ம்..”

“சந்தோஷமான மேட்டர் மட்டுமே பேசு.. உன் கவலைலாம் அவர்கிட்ட சொல்லி புலம்பிட்டு இருக்காத.. ஆம்பளைங்களுக்கு அழுமூஞ்சி பொம்பளைங்களை புடிக்கவே புடிக்காது..!! ”

“ம்ம்..”

“அவர் ஏதாவது ஜோக் அடிச்சா நல்லா சிரி.. மொக்கை ஜோக்கா இருந்தா கூட பரவால..”

“ஹாஹா..!! ஓகே..!!”

“முக்கியமான விஷயம்.. அவர் செய்ற சின்ன சின்ன விஷயங்களை கூட பாராட்டி பேசு.. மறந்து கூட எதுக்காகவும் அவரை கிரிட்டிசைஸ் பண்ணாத..”

“ஏன்..?”

“உன் ஆளுக்கு அதை தாங்கிக்கிற மென்டாலிட்டி கிடையாது.. நான் கவனிச்சிருக்கேன்..!! அப்டியே ஏதாவது சொல்றதா இருந்தாலும்.. சாஃப்டா, நாசூக்கா சொல்லு..”

“ம்ம்.. ஓகேடா..”

அவர்கள் சந்திக்கும் நாளும் வந்தது..!! ஆர்வ மிகுதியில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே திவ்யா அந்த காபி ஷாப்பை அடைந்திருந்தாள். நொடிக்கொருமுறை மணிக்கட்டை திருப்பி மணி பார்த்துக் கொண்டாள். திவாகர் எப்போது வருவான் என்று பொறுமை இல்லாமல் காத்திருந்தாள். அசோக்கிற்கு அவ்வப்போது கால் செய்து அப்டேட் கொடுத்தாள்.

“ரொம்ப போரடிக்குதுடா..”

“உன்னை யார் இவ்ளோ சீக்கிரம் அங்க போக சொன்னது..?”

“நான் என்ன பண்றது..? அந்த ஆட்டோக்காரன் சீக்கிரம் வந்துட்டான்.. வந்து பார்த்தா திவாகர் இன்னும் வரவே இல்ல..”

“அவனை உதைச்சா எல்லாம் சரியா வரும்..”

“எவனை..?”

“ம்ம்.. அந்த ஆட்டோக்காரனை..!! சரி.. அவர் வர்றதுக்கு இன்னும் பதினஞ்சு நிமிஷம் இருக்கு.. அங்கேயே உக்காந்துட்டு இருக்காத.. எல்லாம் ஒருமாதிரி பாக்க போறாங்க.. பக்கத்துல எங்கயாது போய் சுத்திட்டு வா..”

“பக்கத்துல என்ன இருக்குது.. ஒரே ஒரு புக் ஸ்டால்தான் இருக்குது..”

“நல்லதா போச்சு.. ஏதாவது ஒரு புக் வாங்கி அவருக்கு பிரசன்ட் பண்ணேன்.. சர்ப்ரைசா இருக்கும்..!!”

“வாவ்… நல்ல ஐடியாவாத்தான் இருக்குது..? என்ன புக் வாங்குறது..?”

“அது கூட நான்தான் சொல்லனுமா..? போய் பாருடி.. சோம்பேறி..!!”

“சரி சரி.. திட்டாத..!!”

திவ்யா அந்த புத்தக கடைக்குள் நுழைந்தாள். ஒரு ஐந்து நிமிடங்கள் எந்த முடிவுக்கும் வர முடியாமல் சுற்றி சுற்றி வந்தாள். அப்புறம்.. ‘திவாகருக்குத்தான் கவிதைகள் மீது மிகவும் ஆர்வம் ஆயிற்றே. ஏதாவது கவிதைத்தொகுப்பு வாங்கிக் கொடுக்கலாம்’ என்று முடிவு செய்தாள். கவிதைத்தொகுப்பு பகுதிக்கு சென்று தேடினாள். மேலும் ஒரு ஐந்து நிமிடங்கள் செலவழித்து அந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்தாள். மீரா எனும் கவிஞருடைய கவிதைத்தொகுப்பு..!!

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

பக்கங்கள் புரட்டி ஒரு சில கவிதைகளை வாசித்த திவ்யாவுக்கு மிகவும் பிடித்து போனது. அந்த புத்தகத்திற்கு பில் போட சொன்னாள். பர்ஸ் திறந்து பணம் எடுத்து கொடுத்தாள். மீதிப்பணம் தந்த பெண்ணிடம்..

“பென் இருக்கா..?” என்று கேட்டாள்.

அந்தப்பெண் ஒரு பேனாவை எடுத்து நீட்ட, புத்தகத்தின் முதல் பக்கம் திறந்து ‘அன்புடன் திவ்யா..’ என்று எழுதினாள். இல்லை இல்லை.. எழுத முயன்றாள். ஆனால்.. பேனா ஒத்துழைக்கவில்லை. மை தீர்ந்து போயிருந்தது போலிருக்கிறது. ‘இது எழுதலைங்க..’ என்று மீண்டும் அந்தப் பெண்ணிடமே திரும்ப, அவளோ இப்போது வேறு ஒரு கஸ்டமருக்கு பில் போடுவதில் பிஸியாக இருந்தாள்.

எழுதாத பேனாவை வைத்து தலையை சொறிந்தவாறு திவ்யா நின்றிருக்கையில்தான், அவள் முன்னே அந்த கரம் நீண்டது. விரல்களுக்கிடையே ஒரு பால்பாயின்ட் பேனாவை பிடித்திருந்தது அந்த கரம். கரிய நிறத்தில்.. நீளமான.. கூர்மையான.. பால்பாயின்ட் பேனா..!! கூடவே மென்மையாக அந்த குரலும் ஒலித்தது.

“Wherever you go.. don’t forget your pen..!!”

திவ்யா திகைத்துப் போய் திரும்பி பார்க்க, வெண்பற்கள் தெரிய சிரித்தவாறு திவாகர் நின்றிருந்தான். மழமழவென்று ஷேவ் செய்து பளிச்சென வந்திருந்தான். ஜீன்ஸ், டிஷர்ட் அணிந்திருந்தான். கண்ணுக்கு கருப்பு நிறத்தில் குளிர் கண்ணாடி கொடுத்திருந்தான். அவனுடய உடலில் இருந்து ஒரு உயர் ரக சென்ட் வாசனை வெளிப்பட்டு.. அருகில் இருப்பவர்களின் நாசியில் குப்பென ஏறியது..!!

“ஹா..ஹாய்…” என்றாள் திவ்யா திகைப்பு மாறாமலே.

“பேனா வேணாமா..?”

“ஆங்.. வேணும் வேணும்..”

அவசரமாக சொன்ன திவ்யா அவன் கையில் இருந்த பேனாவை வாங்கிக் கொண்டாள். வெட்கம் அவளை பிடுங்கி தின்றது. கன்னங்கள் சிவக்க ஓரக்கண்ணால் திவாகரை பார்த்துக் கொண்டே, புத்தகம் திறந்து ‘அன்புடன் திவ்யா..’ என்று எழுதினாள். பேனாவை மீண்டும் அவனிடம் நீட்டினாள். அதை வாங்கி தன் பாக்கெட்டில் செருகிக் கொண்ட திவாகர், சற்றே கிண்டலான குரலில் சொன்னான்.

“சொல்வேன்னு எதிர்பார்த்தேன்.. நீ சொல்லலை..”

“என்னது..?”

“தேங்க்ஸ்..!!”

“ஓ.. ஸாரி..!! தேங்க்ஸ்.. ஃபார் யுவர் பென்..” திவ்யா அசடு வழிந்தாள்.

“இட்ஸ் ஓகே..” திவாகர் சிரித்தான்.

“அண்ட் தென்.. திஸ் இஸ் ஃபார் யூ..”

திவ்யா புத்தகத்தை அவனிடம் நீட்ட, அவன் ‘ஓஹ்.. தேங்க்ஸ்..’ என்று ஆச்சரியப்பட்டவாறே அதை வாங்கிக்கொண்டான். பக்கங்களை புரட்டி மேலோட்டமாக வாசித்தான். அப்புறம் மெல்லிய குரலில் சொன்னான்.

“லவ்லி..!!”

“யா.. நானும் சில கவிதைகள் வாசிச்சு பாத்தேன்.. ரொம்ப நல்லா இருந்தது..”

“நான் கவிதையை சொல்லல..”

“அப்புறம்..?”

“உன்னை சொன்னேன்..!! யூ லுக் லவ்லி..!!”

திவாகர் திவ்யாவின் கண்களை கூர்மையாக பார்த்தவாறு சொல்ல, திவ்யாவின் முகத்தில் இப்போது குப்பென்று ஒரு நாணம் வந்து குடிகொண்டது. ‘ஓஹ்.. தேங்க்ஸ்..’ என்று வெட்கப்பட்டவள், தலையை குனிந்து கொண்டாள்.

“ஷேல் வீ மூவ்..?” திவாகர் கேட்க.

“ம்ம்.. யா..” திவ்யா தலையசைத்தாள்.

இருவரும் காபி ஷாப்புக்குள் நுழைந்தார்கள். ஓரமாய் கிடந்த ஒரு டேபிளை தேர்வு செய்து அமர்ந்து கொண்டார்கள். ஆளுக்கொரு காபி ஆர்டர் செய்து கொண்டார்கள். கண்ணாடி தடுப்பு வழியாக.. வெளியே சாலையில் செல்லும் வாகனங்கள் பளிச்சென தெரிந்தன. வேடிக்கை பார்த்தார்கள். கொஞ்ச நேரத்தில் திவாகர்தான் மெல்ல ஆரம்பித்தான்.

“ஃபோட்டோவை விட நேர்ல நீ ரொம்ப அழகா இருக்குற திவ்யா..”

“ம்ம்..”

“உன் மேக்கப், லிப்ஸ்டிக், உன் ட்ரஸ்.. எல்லாமே.. ஜஸ்ட் பெர்ஃபக்ட்..!!”

“நான் போட்டிருக்குற ட்ரஸ் பிடிச்சிருக்கா..?”

“ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..”

“ம்ம்.. அசோக்தான் செலக்ட் பண்ணினான்.. அவனுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்..” திவ்யா அந்த மாதிரி வெகுளித்தனமாக சொல்ல,

“ஓ..” என்றவாறு திவாகர் பட்டென முகம் சுருக்கினான்.

“என்னாச்சு..?”

“ஒண்ணுல்ல..!! ட்ரெஸ் கூட அவனை கேட்டுத்தான் செலக்ட் பண்ணுவியா..?”

“ஆமாம்.. அவன் எது சொன்னாலும் கரெக்டா இருக்கும் தெரியுமா..? நானும் எது பண்ணினாலும் அவனை கேட்டுத்தான் பண்ணுவேன்..” திவ்யா ரொம்பவே பெருமையாக சொன்னாள்.

“ரொம்ப பிடிக்குமோ அவனை..?”

“என்ன இப்படி கேட்டுட்டீங்க..? அசோக்தான் எனக்கு எல்லாமே..!!”

“ம்ம்ம்ம்..” என்று இறுக்கமாக சொன்னவாறு, திவாகர் ஒரு பெருமூச்சு விட்டான்.

“ஆமாம்.. ஏன் இதெல்லாம் கேக்குறீங்க..?”

“இல்ல.. சேட்லயும் எப்போ பார்த்தாலும் அசோக் புராணம் படிக்கிற.. நேர்லயும் அதேயே ஆரம்பிச்சுட்டியே.. அதான் கேட்டேன்..!!”

“ஓ.. ஸாரி..”

“இட்ஸ் ஓகே..!! ம்ம்ம்… நாம ஒரு அக்ரீமன்ட்டுக்கு வரலாமா திவ்யா..?”

“என்ன..?”

“இனிமே நாம பேசுறப்போ.. அசோக்கை பத்தி எதுவும் பேசவேணாம்..!! நம்மை பத்தி பேசிக்கவே ஆயிரம் விஷயம் இருக்குறப்போ.. எதுக்கு தேவையில்லாம அவனை பத்தி பேசி.. நேரத்தை வேஸ்ட் பண்ணனும்..? ம்ம்..? நீ என்ன சொல்ற..?”

உதடுகளில் அழகாக ஒரு புன்னகையோடும், கண்களை இடுக்கி கூர்மையாக பார்த்தவாறும் திவாகர் கேட்க, திவ்யா திகைத்துப் போனாள். அவன் முன்வைத்த ஒப்பந்தம் அவளுடைய மூளைக்குள் புகுந்து, இதயத்தை பற்றி பிசைந்தது..!! தான் சிறுவயதில் இருந்து ஆதரவாக பற்றியிருந்த அசோக்கின் கையை, யாரோ வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து.. பிரிப்பது மாதிரி ஒரு உணர்வு..!!

“ம்ம்.. சரி..” என்றாள் மனதில் ஒரு உறுத்தலுடனே.

அத்தியாயம் 17

திவ்யாவும், திவாகரும் ஒரு மணி நேரம்தான் பேசியிருப்பார்கள். ஆனால் அவள் அதைப்பற்றி இரண்டு மணி நேரங்கள் அசோக்கிடம் கதையளந்தாள். ‘அவர் அப்படி.. அவர் இப்படி..’ என்று..!! அசோக் பற்றி இனி பேசவேண்டாம் என்று திவாகர் சொன்னதை மட்டும் அசோக்கிடம் மறைத்து விட்டாள். அதையே வேறு மாதிரி சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டாள்.

“அவர் ரொம்ப பொசஸிவ் தெரியுமா..? அவர் அப்படி இருக்குறது எனக்கு பிடிச்சிருக்கு..”

அவள் சொல்ல சொல்ல அசோக்கிற்கு எரிச்சல் கிளம்பும். இருந்தாலும் எல்லாவற்றையும் உள்ளே போட்டு மறைத்துக் கொண்டு அவள் சொல்லுவதற்கெல்லாம் ‘உம்’ கொட்டிக் கொண்டிருப்பான்.

திவ்யா இந்த மாதிரி அவனை இம்சை செய்தாள் என்றால், சித்ராவின் டார்ச்சர் வேறு மாதிரி இருந்தது. எப்படி என்கிறீர்களா..? இது.. திவ்யாவும், திவாகரும் சந்தித்துக் கொண்டதற்கு அடுத்த நாள் நடந்தது..!!

மார்க்கெட் சென்று காய்கறி வாங்கிக்கொண்டு அசோக்கும், சித்ராவும் திரும்ப வந்து கொண்டிருந்தார்கள். அசோக் பைக்கை ஓட்ட, பின் சீட்டில் அமர்ந்தவாறே சித்ரா தொணதொணத்துக் கொண்டு வந்தாள்.

“என்னடா.. அவ நேத்து அந்தப்பையனை போய் பார்த்தாளாமா..?”

“ம்ம்.. ஆமாம்.. போய் பார்த்துட்டு.. ஹண்ட்ரட் ரூபிசுக்கு காபி குடிச்சுட்டு வந்திருக்கா..”

“எப்படி.. அவளுக்கு புடிச்சிருந்ததாமா..?”

“காபியா..?”

“அடச்சை..!! அந்த பையனைடா..!!”

“புடிச்சதாலதானக்கா பார்க்கவே போனா..” அசோக் எரிச்சலாக சொன்னான்.

“நீ ஏண்டா இவ்வளவு கோவப்படுற..? ஹ்ம்ம்… நெனச்சா எனக்கும் பாவமாத்தான் இருக்கு..!!”

“என் நெலமையை நெனச்சா..?”

“இல்லடா.. அந்தப்பையனை நெனச்சா..!! இந்த அடங்காப் பிடாரியை கட்டிக்கிட்டு அவன் என்ன பாடு படப்போறானோ..? அவன் வாழ்க்கை கெட்டு குட்டிச்சுவராத்தான் ஆகப் போகுது..!! ஷேர் வாங்கி விக்கிறானா அவன்..? சோறு கூட இல்லாம தெருத்தெருவா பிச்சை எடுக்க போறான் பாரு..!!” சித்ரா திவ்யாவை திட்ட, அசோக்கிற்கு கோவம் வந்தது.

“இப்போ எதுக்கு தேவையில்லாம அவளை திட்டுற..? நீயும் லேசுப்பட்டவ இல்லக்கா.. எப்பவும் அவளை விட ஒரு படி மேலத்தான் நிக்கிற நீயும்..!!”

“ம்க்கும்.. அவுகளை சொன்னதும்.. இவுகளுக்கு கோவத்தை பாரு..”

“ஏன் சொல்லமாட்ட..? உனக்குலாம் என் கஷ்டம் எங்க புரியப்போகுது..? உனக்கு எல்லாமே நக்கலாத்தான் இருக்குது..!!”

“அப்படி என்ன தம்பி உனக்கு கஷ்டம்..?”

“காதலிக்கிற பொண்ணுக்கே.. இன்னொரு பையனை அவ காதலிக்க ஐடியா கொடுக்குற கொடுமை இருக்கே.. அதெல்லாம் அனுபவிச்சு பார்த்தாதான் தெரியும்..”

“ஹாஹா..!! உன்னை யாரு அப்படிலாம் கஷ்டப்பட சொன்னது..? உனக்கெதுக்கு இந்த தேவை இல்லாத வேலை எல்லாம்..?? பெரிய தியாகி இவரு.. ‘எங்கிருந்தாலும் வாழ்க’னு எடுத்ததுக்கெல்லாம் அவளுக்கு அட்வைஸ் கொடுத்துக்கிட்டு இருக்காரு..!! அவதான் உனக்கு இல்லைன்னு ஆகிப் போச்சுல..? அவ எக்கேடோ கெட்டு போறான்னு.. விட்டு தலை முழுகி தொலைக்க வேண்டியதுதான..?”

“ப்ச்.. அப்டிலாம் என்னால விட முடியலைக்கா..!! பாவம் அவ.. அப்பாவி..!! என் ஹெல்ப் இல்லன்னா அவ ரொம்ப கஷ்டப்படுவா..!!”

“உன்னை வேணாம்னு சொன்னவளுக்காக இப்படி உருகுறியேடா..? இங்க பாரு.. அக்கா சொல்றதை கேளு.. இந்த லவ் அட்வைஸ் கொடுக்குற வேலையலாம் இன்னைக்கோட ஸ்டாப் பண்ணிடு.. அவ சங்காத்தமே வேணாம்னு தலை முழுகிடு.. அவளுக்கு என்ன கஷ்டமோ அதை அவளே பார்த்துக்கட்டும்..!!”

“ம்க்கும்.. அவளை நான் தலைமுழுகுனா அவளுக்கு கஷ்டமா இருக்கோ இல்லையோ.. உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்..!!”

“ஏன்..?”

“அவளோட சீக்ரட்லாம் அப்புறம் யாரு உனக்கு வந்து சொல்றது..?”

“அடச்சீய்.. அவ சீக்ரட்டை தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன்..?” என்று வெறுப்பாக சொன்ன சித்ரா, அடுத்த நொடியே..

“ம்ம்ம்.. அப்புறம்.. வேற என்ன சொன்னா அவ..?” என்று அசோக்கை கேட்டாள். Mulaigal Tamil New Sex Stories

– தொடரும்

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000