This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
Tamil Kama Stories – பெண்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன. குடும்ப பராமரிப்பு, மகப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் முதலியன. ஆனால் ஆண்களுக்கு உள்ள பெரும் பொறுப்பு பாலியல் உறவில் மனைவியை மகிழ்விப்பது! அதில் சிறிய குறைபாடு இருந்தால் கூட ஆண்கள் மனமுடைந்து போகின்றனர். எனவே தான் ஆதி காலத்திலிருந்து பாலுணர்வை தூண்டி உடலுறவை மேம்படுத்தும் உணவு, மருந்துகளை ஆண்கள் அதிகமாக நாடுகின்றனர்.
தங்கபஸ்பம், சிட்டுக்குருவி லேஹியம் முதலியன ஆணுக்கான “ரகசிய” மருந்துகளாக இருந்தன. கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி ஜனங்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ்கின்றனர். புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண்டும் உணவுக் கலவையாக கருமிளகு, தேன், மிளகாய் முதலியன கூறப்படுகின்றன. உணவுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. ஒட்டகத்தின் திமில் அரேபியர்களுக்கும் குங்குமப்பூ ஸ்பெயின் நாட்டவர்களுக்கும், கோகோ அஸ்டெக் இனத்தவருக்கும், பறவைக்கூடு சூப் சீனர்களுக்கும் முறையே ஆண்மைக்குறைவுக்கு மருத்துவ உணவாக கருதப்படுகின்றன. சில பிரசித்தி பெற்ற உணவுகள் ஆயுர்வேதத்தின் படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும். சோம்பு சமையலிலும் பயன்படுகிறது. மையலிலும் பயனாகிறது! இதன் விதைகளை உறிஞ்சி உண்டால் ஆசை அதிகமாகும். அஸ்பாரகஸ் சுவைவயுள்ள தோட்டக் கீரை. பாதாம் பருப்பு – தொன்று தொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தி அளிக்கும் உணவாக கருதப்படுகிறது. வாழைப்பழம் – வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயாரிக்கத் தேவை. எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழம். துளசி – உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது துளசி. ஆண்களின் உடலுறவு ஆர்வத்தை தூண்டுகிறது. சாக்லேட் – சாக்லேட்டில் தியோப்ரோமைன் இந்தப் பொருள் வேட்கையை பெருக்கும். தவிர சாக்லேட் ஒரு ஆன்டி – ஆக்சிடான்ட். காய்கறிகள் – பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை. தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி. ஃப்ரான்ஸில் இதை ‘காதல் ஆப்பிள்’ என்பார்கள். வெங்காயமும் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும். பிரசித்தி பெற்ற ‘அரேபிய இரவுகள்’ கதையில் ஒரு வியாபாரி 40 வருடங்களாக குழந்தையில்லாமல் இருந்து கொத்தமல்லி இலைகள் அடங்கிய மருந்தை உண்டு குழந்தை பெற்றுக் கொண்டதாக வருகிறது. பழங்கள் – பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும். வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். பால் சார்ந்த உணவுகள் – பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள். மாமிசங்கள், மீன் – மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது. வெற்றிலை – உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும். தேன் – எகிப்தியர்கள் காலத்திலிருந்தே பல பழங்கால மருந்துகள் தேன் அடங்கியவை. மீட் என்ற பானம் தேனிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது காதல் உணவை அதிகப்படுத்தும் மருந்தாக கருதப்படுகிறது. வாசனை திரவியங்கள் – ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் “விந்து முந்துதலை” தடுக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். ஞாபக மிருக்கட்டும் – இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். அதன் இலைகள், எதிர்மாறாக ஆண்மை ஆசையை குறைத்து விடும். தற்கால உணவு நிபுணர்களின் கருத்து ஆண்மை வீரியத்தை அதிகரிக்க துத்தநாகம் இன்றியமையாதது. சர்க்கரை, மைதா மாவு, பாலிஷ் செய்யப்பட்ட பச்சரிசிகளில் துத்தநாகம் குறைவு. இந்த தாதுப்பொருளின் குறைவு பெண்களின் மாதவிடாய் சுழற்சியையும் பாதிக்கும். முழுத்தானியங்களில் துத்தநாகம் இருந்தாலும் அவற்றில் உள்ள பைடாடஸ் என்ற பொருள், உடல் துத்தநாகத்தை உட்கிரகிப்பதை தடை செய்யும். துத்தநாகம் உள்ள இதர பொருட்கள் – சிவப்பு மாமிசம், முத்துச்சிப்பிகள், பரங்கி விதைகள், அங்கக மாமிசங்கள், முட்டைகள். எல்லா பழங்களிலும் காய்கறிகளில் இருக்கும் பொட்டாசியம் ஆண்மை வீரியத்தை அதிகரிக்கும். செலினியம் உள்ள வெண்ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலியவைகளும் காதல் உணவுகள் மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலியவைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும். பாஸ்பரஸ் (பரங்கிக்காய், முழுத்தானியங்கள், சூர்யகாந்தி விதைகள்) தாதுப்பொருளும் ‘தாது விருத்திக்கு’ உதவும். ஆண்மை வீரியத்திற்கு தேவையான விட்டமின்கள் விட்டமின்கள் விட்டமின் ‘இ’ விட்டமின் ‘சி’ விட்டமின் ‘ஏ’ விட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் ஃபோலிக் அமிலம் விட்டமின் பி 6 விட்டமின் பி 12 இருக்கும் உணவுகள் முழுத்தானியங்கள், முட்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாதாம், கீரைகள் எல்லா காய்கறிகளும், பழங்களும் குறிப்பாக சிட்ரஸ் பழங்கள், தக்காளி, நெல்லி முதலியன லிவர், முட்டைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கேரட், மீன் எண்ணெய் முழுத்தானியங்கள், லிவர் அஸ்பாரகஸ், இதர கீரைகள், முளைகட்டிய உணவுகள், முழுக்கோதுமை, சீஸ், பருப்புகள் முழுக்கோதுமை, தவிடு, பால், வாழைப்பழம், வேர்க்கடலை, உலர் திராட்சை, லிவர், கிட்னி, மாமிசங்கள், மீன், இறைச்சி பால், பால் சார்ந்த உணவுகள், முட்டை, லிவர் பாலியல் இச்சையை குறைக்கும் உணவுகள் ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, விட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலியல் திறனும் சிதைந்து விடும். சர்க்கரை, மதுபானங்கள், காப்பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குன்றினால் ஆண்மையும் குறையும். எனவே அதீத காதல் உணர்வுகளால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவுகளால் இச்சையை ஒரளவாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம். பாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடுகளை குறைக்கும். தைராய்டு தான் பாலியல் உணவுகளை கன்ட்ரோல் செய்கிறது. Sex Tabs Tamil Kama Stories
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000