நெஞ்சோடு கலந்திடு – 2

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Hot Stories – அவன் பார்வை பதிந்திருந்த இடத்தில் அவன் அம்மாவும் தங்கையும் நின்றிருந்தார்கள். பத்மாவின் ஒரு கையில் திவ்யா அகப்பட்டிருக்க, அவளது இன்னொரு கையில் அடுப்பில் வைத்து எடுக்கப்பட்டிருந்த கரண்டி. அதை நீட்டி நீட்டி தன் மகளை மிரட்டிக் கொண்டிருந்தாள்.

“சொல்லுடி.. இனிமே திருட மாட்டேன்னு சொல்லு..”

“மாட்டேன்மா.. இனி திருட மாட்டேன்..”

“இன்னொரு தடவை நீ திருடுனேன்னு தெரிஞ்சது.. திருடுன கை பொசுங்கி போகும் பொசுங்கி..”

சொல்லிக்கொண்டே அவள் அந்த கரண்டியை திவ்யாவின் கைக்கு அருகில் எடுத்து சென்றாள். உடனே திவ்யா பயந்துபோய் ‘விலுக்’ என்று ஒரு துள்ளு துள்ளினாள். பத்மா அதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. திவ்யாவை பிடித்திருந்த பிடி தளர்ந்தது. அவளுடைய கை விடுபட்டது. விடுபட்ட வேகத்தில் சுடுபட்ட கரண்டியில் திவ்யாவின் வலது கை உரசியது. அவ்வளவுதான்..!!

“ஆஆஆஆஆ…!!!”

என்று அலறிக்கொண்டு திவ்யா கீழே விழுந்து துடித்தாள். தூண்டிலில் சிக்கிக்கொண்ட மீன் மாதிரி, கை கால்களை உதறிக்கொண்டு துடிதுடித்தாள். பத்மாவின் தாயுள்ளம் படக்கென பதறிப்போனது. கையில் இருந்த கரண்டியை தூர எறிந்து விட்டு, தன் மகளை அள்ளி எடுத்தாள்.

“ஐயோ… ஐயோ… அடிப் பாவிமவளே.. நான் சும்மா பயமுறத்ததானடி செஞ்சேன்..!! ஏண்டி இந்த ஆட்டம் ஆடுற..? ஆடுகாலி சிறுக்கி..!!”

என்று உடனடியாய் ஒரு ஒப்பாரி வைத்தாள். ஊஞ்சலில் அமர்ந்திருந்த தன் மகனிடம் திரும்பி,

“டேய் கார்த்திக்கு.. அந்த அலமாரில மை பாட்டில் இருக்கும்.. எடுத்துட்டு வாடா..!!” என்று கத்தினாள்.

கார்த்திக் ஊஞ்சலில் இருந்து இறங்கினான். ‘இப்போதே செல்லலாமா.. இன்னொரு கடி கடித்துவிட்டு செல்லலாமா..’ என்பது போல கையிலிருந்த பணியாரத்தை ஒரு பார்வை பார்த்தான்.

“வெரசா எடுத்துட்டு வாடா.. வெட்டிப்பய மவனே..”

பத்மா ஆத்திரமாய் கத்தவும், கையில் வைத்திருந்த பணியாரத்தை ஊஞ்சலில் வைத்துவிட்டு கார்த்திக் அவசரமாய் உள்ளே ஓடினான். திவ்யா அலறி துடித்துக் கொண்டே இருந்தாள். அசோக்கால் நீண்ட நேரம் அவளுடைய கதறலை கேட்க முடியவில்லை. அவளுடைய துடிப்பை பார்க்க முடியவில்லை. திண்ணையில் இருந்து இறங்கினான். உள்ளம் முழுக்க சோகத்துடன் தன் வீட்டை நோக்கி மெல்ல நடையை போட்டான்.

அத்தியாயம் 2

அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு, அசோக், திவ்யா, சித்ரா மூன்று பேரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே இல்லை. மூன்றாம் நாள் மாலை..

பெல் அடித்ததும், அசோக் பேகை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்தான். ஸ்கூல் மெயின்கேட் நோக்கி நடக்க ஆரம்பித்தான். எங்கிருந்தோ ஓடிவந்த அவனுடைய அக்கா சித்ரா அவனுக்கு பின்புறமாக வந்து அவன் தோளை தொட்டாள். அசோக் திரும்பி பார்த்ததும், சற்றே பரிதாபமான குரலில் கேட்டாள்.

“ஏண்டா தம்பி என்கிட்டே பேசவே மாட்டேன்ற..?”

“போடீ.. திவ்யாவை அவ அம்மாகிட்ட நீதான மாட்டிவிட்ட..? உன்னாலதான அவ கைல சூடு வாங்குனா..? உன்கிட்ட பேசமாட்டேன் போ..!! திவ்யா எவ்ளோ பாவம் தெரியுமா..? எப்படி அழுதா தெரியுமா..?”

“அதுக்கு நான் என்னடா பண்ணுவேன்..? நான் என்ன வேணும்னா செஞ்சேன்..? தெரியாமத்தானடா..!! என்கிட்டே நீ பேசாம இருக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா அசோக்கு..!! நான் வேணா அந்தப்புள்ளைட்ட மன்னிப்பு கேட்டுடவா..?”

சித்ரா அவ்வாறு பரிதாபமாக கேட்கவும், அசோக் இப்போது சற்றே இறுக்கம் தளர்ந்தான். ‘ம்ம்.. சரி..’ என்று தன் அக்காவை பார்த்து மெலிதாக புன்னகைத்தான். இருவரும் திவ்யாவை தேடி சென்றார்கள்.

புளியமரத்துக்கு கீழே இருந்த சிமென்ட் பெஞ்சில் தனியாக அமர்ந்திருந்த திவ்யா பார்வைக்கு கிடைத்தாள். தூரத்தில் சித்ராவை பார்த்ததுமே வெறுப்புடன் வேறுபக்கமாய் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

“என்னை மன்னிச்சுடு திவ்யா.. நான் தெரியாம பண்ணிட்டேன்..” சித்ரா உண்மையான குற்ற உணர்ச்சியுடன் சொல்ல,

“உன்கூட பேச எனக்கு புடிக்கல.. போயிடு..” திவ்யா முறைப்பாக சொன்னாள்.

“நான்தான் மன்னிப்பு கேக்குறேன்ல..?” சித்ரா கெஞ்ச,

“நான்தான் போயிடுன்னு சொல்றேன்ல..?” திவ்யா கத்தினாள்.

“தெரியாம பண்ணிட்டேன் புள்ள..”

“சொன்னது காதுல விழுகுலையா..? என்முன்னால நிக்காதடி.. போ.. போயிடுடி..!! முண்டக்கன்னி..!!”

திவ்யா அந்த மாதிரி திமிராக சொல்லவும், இப்போது சித்ராவும் எரிச்சலானாள். அவளும் இப்போது குரலை உயர்த்தி கத்தினாள்.

“என்ன புள்ள.. பாவமேனு பேசலாம்னு வந்தா.. ரொம்பத்தான் கத்துற..? எத்தனை நாள் என் கூட பேசாம இருக்குறேன்னு நானும் பாக்குறேன்..” சொல்லிவிட்டு திரும்பி விடுவிடுவென நடந்தாள்.

“பேச மாட்டேண்டி.. உன்கூட பேசவே மாட்டேன்..” திவ்யா சித்ராவின் முதுகை பார்த்து கத்தினாள்.

“ம்ம்.. பாப்போம் பாப்போம்..” என்றாள் சித்ரா கேலியான குரலில்.

“போடீ போடீ.. முண்டக்கண்ணி..”

“போடீ போடீ.. வெள்ளைப்பன்னி..”

அக்கா ஆத்திரத்துடன் கத்திவிட்டு செல்ல.. திவ்யா இன்னொரு பக்கமாக முகத்தை திருப்பி முறைத்துக் கொண்டிருக்க, அசோக் கொஞ்ச நேரம் அப்படியே பரிதாபமாக நின்றிருந்தான். அப்புறம் பொத்தென்று பெஞ்சில் அமர்ந்தான். சோகமாக முகத்தை வைத்தபடி, தலையை பிடித்துக் கொண்டான்.

அசோக்கிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவனுக்கு அக்காவையும் பிடிக்கும். திவ்யாவையும் பிடிக்கும். இரண்டு பேரும் இவ்வாறு சண்டையிட்டுக்கொண்டது அவனுக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் இல்லை. அதில்லாமல்.. அக்கா மீது இருக்கும் கோபத்தில், திவ்யா எங்கே இனிமேல் அவனுடன் பேசாமலே போய் விடுவாளோ என்ற கவலை வேறு அவனுடைய மனதை ஒருபக்கம் அரித்துக் கொண்டிருந்தது.

அவன் அந்தமாதிரி கவலையுடன் அமர்ந்திருக்கையில்தான், திவ்யாவுடைய பட்டுக்கரம் ஒன்று அவன் தோள் மீது படர்ந்தது. வாடிப்போயிருந்த அவனது முகத்தை வாஞ்சையுடன் தொட்டு திருப்பியது. அவ்வளவு நேரம் வெறுப்பில் நனைந்த வார்த்தைகளை துப்பியது இந்த உதடுகள்தானா என நம்ப முடியாத அளவுக்கு, இப்போது திவ்யாவின் உதடுகள் அன்பில் அமிழ்ந்த வார்த்தைகளை சிந்தின.

“என்னாச்சு அசோக்.. ஏன் ஒரு மாதிரி இருக்குற..?”

“ஒ..ஒண்ணுல்ல திவ்யா..” அசோக் தடுமாற்றமாய் சொன்னான்.

“ஏன் ரெண்டு நாளா என்னை பார்க்க எங்க வீட்டுக்கு வரலை..?”

“நீ என் மேல கோவமா இருப்பியோன்னு நெனச்சேன்..”

“சேச்சே.. எனக்கு உன் அக்கா மேலதான் கோவம்.. உன் மேல இல்ல..”

“நெஜமாவா சொல்ற.. அப்போ.. என்கூட எப்போவும் போல பேசுவியா..?” இப்போது அசோக்கின் குரலில் எக்கச்சக்க உற்சாகம்.

“ம்ம்.. பேசுவேனே..? எப்போவும் போல பேசுவேன்.. எப்போவும் பேசுவேன்..!! இரு இரு.. உனக்காக ஒன்னு கொண்டு வந்திருக்குறேன்..”

சொன்ன திவ்யா தன் ஸ்கூல் பேகுக்குள் கைவிட்டு ஒரு பாக்சை எடுத்தாள். பாக்சை திறந்து உள்ளே இருந்த அந்த காகித பொட்டலத்தை வெளியே எடுத்தாள்.

“என்னது இது திவ்யா..?”

“பனங்கற்கண்டு..” பொட்டலத்தை பிரித்து அசோக்கிடம் நீட்டினாள்.

“ஹை.. எனக்கு ரொம்ப புடிக்கும்..”

“ம்ம்.. தெரியும்..!! அதான்.. வீட்டுல இருந்து அம்மாவுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தேன்.. சாப்பிடு..”

“ம்ம்… இந்தா திவ்யா.. நீயும் கொஞ்சம் சாப்பிடு..”

“எனக்கு வேணாம் அசோக்.. நான் அப்போவே சாப்பிட்டேன்.. நீ நல்லா சாப்பிடு..”

அசோக் கற்கண்டை அள்ளி வாயில் போட்டுக்கொள்ள, அவன் சாப்பிடுவதையே திவ்யா ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள். கற்கண்டை சுவைத்துக்கொண்டே அசோக் தன் வலது கரத்தை நீட்டி, திவ்யாவுடைய வலது கரத்தை தொட்டான். திருப்பினான். தீக்காயம் பட்ட இடத்தை பார்வையிட்டான்.

திவ்யாவுடைய வலது கையில்.. முழங்கைக்கு சற்று கீழே.. உட்புறமாக.. மூன்று இன்ச் அளவு நீளத்திற்கு.. கோடு போட்ட மாதிரி அந்த தீக்காயம். அந்த காயத்தை சுற்றி அசோக் இதமாக தடவினான்.. மயிலிறகால் வருடுவது மாதிரி..!!

“ரொம்ப வலிக்குதா திவ்யா..?”

“இல்ல அசோக்.. இப்போ வலிக்கலை..”

“உன் கையை புடிச்சுக்கவா..?”

“ம்ம்.. புடிச்சுக்கோ..”

வருடிக்கொண்டிருந்த கையை அசோக் இப்போது நகர்த்தினான். திவ்யாவின் வலது கரத்தோடு, தனது வலது கரத்தை இணைத்தான். அவளுடைய விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டான். அழுத்தி பற்றிக்கொண்டான்..!!

அத்தியாயம் 3

இன்று..!!

அசோக் பல் தேய்த்துக் கொண்டிருந்தான். ஒரு கையில் ப்ரஷ் பிடித்து இடதும் வலதுமாய் இயக்கிக் கொண்டிருந்தவன், இன்னொரு கையில் செய்தித்தாளை விரித்து வைத்திருந்தான். கண்கள் செய்திகளை அவ்வப்போது மேய்ந்து கொண்டிருந்தாலும், அவனுடைய கவனம் முழுவதும், செல்வாவின் மேலேயே இருந்தது. செல்வா செல்லுமிடங்களுக்கெல்லாம் சென்றது. செல்வாவின் செய்கைகளிலேயே படிந்திருந்தது.

செல்வா அவனது அறைத்தோழன். அறைத்தோழன் என்றதும் அசோக்குடைய பள்ளித்தோழனோ, கல்லூரித்தோழனோ என்று நினைத்து விடாதீர்கள். செல்வாவிற்கு வயது நாற்பதை நெருங்குகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. அரைக்கிழவன் வயதில் அசோக்கிற்கு ஒரு அறைத்தோழன்..!!

ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை. அதில்லாமல் ஓய்வு நேரங்களில் எல்.ஐ.சி ஆப் இன்டியாவிற்கு ஏஜன்ட் வேலையும் செய்கிறார். ‘லைஃப் இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி விக்கிற மாதிரி உலகத்துல ஒரு தர்மசங்கடமான வேலை வேற எதுவும் இல்லை அசோக்..’ என்று அடிக்கடி புலம்பிக்கொள்(ல்)வார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த அறைக்கு, அசோக் தன் கல்லூரித்தோழன் சுரேஷுடன் குடி வந்தான். வந்த இரண்டு மாதங்களிலேயே இந்த செல்வா அவர்களுடன் வந்து ஒட்டிக்கொண்டார். செல்வாவும் சுரேஷும் ஒரே ஊர்க்காரர்களாகிப்போனது அசோக்கின் துரதிர்ஷ்டம்..!! சென்ற மாதம் சுரேஷ் ஆன்சைட் என்று அமெரிக்காவிற்கு பறந்து விட, இப்போது அசோக்கும் செல்வாவும் மட்டுந்தான்..!!

அசோக் எழுவதற்கு முன்பே அதிகாலையிலே எழுந்து அதிசயமாய் செல்வா குளித்து முடித்திருந்தார். வழுக்கை பரவாத பாகங்களில், வளர்ந்திருந்த முடிகளில், வெள்ளை நிறம் கொண்டவை இப்போது காணாமல் போயிருந்தன. டை அடித்திருக்கிறார் என்று தெளிவாக தெரிந்தது. எப்போதாவது அணியும் ஜீன்ஸ், டி-ஷர்ட்டை இப்போது அணிந்திருந்தார். ‘என் கண்மணி.. உன் காதலி.. இளமாங்கனி..’ என்ற சிட்டுக்குருவி பாடலை சீட்டியடித்தபடியே, ஷாருக்கான் சிபாரிசு செய்த க்ரீமை முகம் முழுக்க அப்பி தேய்த்தார். ஒரு புதுவிதமான உற்சாகத்துடனே, அறைக்குள் உலவிக்கொண்டிருந்தார். அதைத்தான் அசோக் அப்படி வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏன் அசோக்.. ஒரு சாயல்ல என்ன பார்த்தா.. மாதவன் மாதிரியே இல்ல..?”

செல்வா ஒரு மாதிரி ஸைட் போஸ் கொடுத்தபடியே கேட்க, அசோக் செம கடுப்பானான். வாயில் இருந்த நுரையை ஜன்னல் வழியே வெளியே துப்பிவிட்டு, வெடுக்கென சொன்னான்.

“மாதவன் மாதிரியா..? மயில்சாமி மாதிரி இருக்கீங்கண்ணா..!!”

“என்ன அசோக் இப்படி சொல்லிப்புட்ட..?”

“பின்ன என்ன..? ஏண்ணா காலாங்காத்தாலேயே காமடி பண்றீங்க..? என்னாச்சு உங்களுக்கு இன்னைக்கு..?”

“அ..அது.. அது வந்து.. அண்ணனுக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆயிடுச்சுடா அசோக்..” செல்வா வெட்கத்துடன் சொன்னார்.

“மறுபடியுமா..?” அசோக் நொந்துபோனவனாய் கேட்டான்.

“ஆமாம்..”

“இப்போ யாரு..?”

“நம்ம புவனா ஆண்ட்டியோட பொண்ணு.. கண்மணி..!!”

சிட்டுக்குருவி பாடலின் சீக்ரட் இப்போது புரிந்து போனது, அசோக்கிற்கு சற்று நிம்மதியாக இருந்தது. ஆனால் புவனாவை ஆண்ட்டி என்று செல்வா சொன்னதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை. புவனா என்பது, செல்வா தினமும் சாப்பிடுகிற மெஸ்சுக்கு சொந்தக்காரி. அக்கா என்று கூட சொல்ல முடியாது.. செல்வாவுக்கு தங்கை என்று சொல்லும் அளவிற்கு.. இளமையாக இருப்பாள். இல்லையென்றால் செல்வா முதிர்ந்து போய் தெரிவார் என்றும் சொல்லலாம்.

“கண்மணியா..? அது சின்ன பொண்ணுண்ணா.. பாவம்..!!”

“காதல்ல பாவம், புண்ணியம்லாம் கெடையாது அசோக்..!! காதல்ன்றது..”

அவர் ஆரம்பித்ததுமே அசோக் காதை பொத்திக்கொண்டான். ‘ங்கொய்யால.. கேப் கெடைச்சா காதல் பத்தி தத்துவம் சொல்ல ஆரம்பிச்சுடுறான்யா இந்த ஆள்’ என்று அவனுக்கு எரிச்சலாக வந்தது. ‘காதல்ன்றது உப்புமா மாதிரி அசோக்..’, ‘காதல்ன்றது ஊத்தாப்பம் மாதிரி அசோக்..’, ‘காதல்ன்றது உளுந்த வடை மாதிரி அசோக்..’, என்ற ரீதியில் ஆரம்பித்து இதுவரை ஏகப்பட்ட தத்துவம் சொல்லியிருக்கிறார் செல்வா. ‘விக்ரமன் படமா பாத்து கெட்டுப்போயிட்டான்யா இந்த ஆள்..’ என்று நினைத்துக்கொண்டான். அவர் தத்துவம் சொல்லி முடித்துவிட்டார் என்று உறுதியான பிறகே காதை கொஞ்ச கொஞ்சமாய் திறந்தான். செல்வா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். Pundai Nakkum Tamil Hot Stories

– தொடரும்

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000