This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
Tamil Kama Stories – “சாப்பிடுறியா கற்பு..?”
“ஹையோ.. இல்லடா.. நீ சாப்பிடு..!!”
“பாவக்கா பொரியல் கற்பு.. அதுவும் என் பொண்டாட்டியோட கைவண்ணத்துல..!! எங்க போனாலும் கெடைக்காது.. இன்னொரு சான்ஸ் அமையாது..!!”
“ஐயோ.. பாவக்காயா..?? எனக்கு வேணாம் சாமி..”
“ஏன்..?”
“எனக்கு கசப்பே பிடிக்காது..!!”
“எனக்குந்தான் பிடிக்காது.. நாங்கல்லாம் சாப்பிடலையா..??”
“நீ சாப்பிடு.. என்னை ஆளை விடு..”
இதழில் ஒரு புன்முறுவலுடன் சொல்லிவிட்டு கற்பகம் நகர்ந்தாள். தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்த நந்தினி, கற்பகம் செல்வதையே ஓரக்கண்ணால் முறைத்துக் கொண்டிருந்தாள். அவள் கதவை சாத்திவிட்டு சென்ற பிறகும், மூடிய கதவையே சில வினாடிகள் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏய்.. என்ன அங்கேயே பாத்துட்டு இருக்குற..? அந்த அப்பளத்தை எடுத்து வை..!!”
அசோக்கின் குரல் நந்தினியின் கவனத்தை கலைக்க, அவள் சுதாரித்துக்கொண்டு உடனே இயல்புக்கு திரும்பினாள். அப்பளத்தை எடுத்து வைத்தாள். அசோக்கை பார்த்து போலியாக ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.
அப்புறம் அசோக் சாப்பிட்டு முடிக்கும் வரை நந்தினி எதுவும் பேசவில்லை. அமைதியாகவே அவனுக்கு உணவு பரிமாறினாள். தினமும் பெரும்பாலும் அவளும் அங்கேயே அமர்ந்து சாப்பிடுவாள். அன்று ஏனோ ‘நான் வீட்ல போய் சாப்பிட்டுக்குறேன்..’ என்று சொல்லிவிட்டாள். அசோக் சாப்பிட்டு முடித்ததும், உணவு கொண்டு வந்த பாத்திரங்களை எல்லாம் அங்கிருந்த வாஷ் பேசினிலேயே கழுவிக்கொண்டாள். பாத்திரங்களை எடுத்து கூடையில் வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
அறையை விட்டு வெளியே வந்தவள், முதலில் ஆபீஸ் வாசலை நோக்கித்தான் நடந்தாள். பாதி தூரம் நடந்த நிலையில்தான், கடந்த அரை மணி நேரமாக அவள் மனதில் இருந்த உறுத்தல் உச்சபட்சத்தை எட்டியது. நடப்பதை நிறுத்தி அங்கேயே தயங்கி நின்றாள். சில வினாடிகளிலேயே ஒரு முடிவுக்கு வந்தவளாய், எதிர்ப்பட்ட பியூனிடம் கேட்டாள்.
“இங்க.. கற்பகம் எங்க உக்காந்திருப்பாங்க..?”
“அங்கேயேதான்மா.. ஐயா ரூமுக்கு பக்கத்துலையே.. சைடுல போனா.. அந்த கடைசில அவங்க சீட்டு..”
“ஓ.. சரிங்க.. நான் போய் பாத்துக்குறேன்..”
நந்தினி வந்த வழியிலேயே திரும்பி நடந்தாள். அந்த பியூன் குறிப்பிட்ட பாதையில் திரும்பினாள். அவள் செல்லும் வழியில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் எழுந்து அவளுக்கு வணக்கம் சொல்ல, இவளும் பதில் வணக்கம் செலுத்திக்கொண்டே நடந்து சென்றாள். அந்த வரிசையில் கடைசியாக தனியாக அமர்ந்திருந்தாள் கற்பகம். நந்தினி தன் இடத்தை நோக்கி நடந்து வருவதை பார்த்ததும், ஒரு கணம் எதுவும் புரியாமல் விழித்தாள். மெல்ல தன் சீட்டில் இருந்து எழுந்து நின்றாள்.
“வா..வாங்க..” என்றாள் தடுமாற்றமாய்.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” நந்தினி நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.
“எ..என்ன..?”
“நானும் ரொம்ப நாளா பாத்துட்டுதான் இருக்கேன்.. ரொம்ப நாளா உங்ககிட்ட கேக்கனும்னு நெனச்சதுதான்.. கேக்கவா..?”
“கே..கேளுங்க..”
கற்பகம் சற்று உதறலாகவே சொன்னாள். ஓரிரு வினாடிகள் நிதானித்த நந்தினி, பிறகு கற்பகத்தின் கண்களை கூர்மையாக பார்த்து முறைத்தவாறு கேட்டாள்.
“சம்பளம் கொடுக்குற முதலாளியை.. உங்க ஆபீஸ்ல எல்லாரும் போடா வாடான்னுதான் கூப்பிடுவீங்களா..??”
அந்த கேள்வியில் இருந்த வீரியம் கற்பகத்தை நிலைகுலைய செய்தது. அந்த மாதிரி ஒரு கேள்வியை அவள் எதிர்பார்த்திரவில்லை. விழிகளை விரித்து லேசாக அதிர்ந்தாள். பதில் சொல்ல தடுமாறினாள்.
“இ..இல்ல.. நா..நான் மட்டுந்தான் அசோக்கை அ..அப்படி..” கற்பகத்தின் வாயில் இருந்து வார்த்தைகள் திக்கி திணறி வெளிப்பட்டன.
“ஓ.. நீங்க மட்டுந்தானா..?? நான் கூட எல்லாருமோன்னு நெனச்சேன்..!!” நந்தினியின் வார்த்தைகளில் ஒரு விஷமம் கொப்பளித்தது. கற்பகம் அதை புரிந்துகொள்ளாமல்,
“இ..இல்ல.. நான் மட்டுந்தான்..” என்றாள்.
கம்மலான குரலில் சொன்ன கற்பகம், நந்தினியின் முகத்தை ஏறிட்டு பார்க்க இயலாமல், தன் தலையை லேசாக குனிந்து கொண்டாள். அவளுடைய முகத்தையே கொஞ்ச நேரம் முறைத்துக் கொண்டிருந்த நந்தினி, அப்புறம் குத்தலாக சொன்னாள்.
“இங்க பாருங்க.. உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப்புன்னு எனக்கு தெரியாது.. தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல..!! நான் சொல்ல வந்தது இதுதான்.. இனிமே நான் இருக்குறப்போ.. என் முன்னாடி என் புருஷனை போடா வாடான்னு சொல்லாதீங்க.. என்னால அதை தாங்கிக்க முடியலை.. நீங்க அந்த மாதிரி சொல்றப்போ.. எனக்கு அப்படியே..”
முகத்தை ரௌத்திரமாக்கிக்கொண்டு சொன்ன நந்தினி, பாதியிலேயே நிறுத்தினாள். அப்புறம் சில வினாடிகள் எடுத்துக்கொண்டு, கண்களை மெல்ல மூடி, மூச்சை சீராக வெளியிட்டு தன்னைத்தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். அப்புறம் அவளுடைய இமைகளை பிரித்து, தன்னையே மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்த கற்பகத்திடம்,
“புரியுதா..??” என்றாள்.
“பு..புரியுது..!! ஸாரிங்க.. இ..இனிமே நான் அப்படி சொல்ல மாட்டேன்..!!”
“ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயம்..”
“என்ன..?”
“என் புருஷனுக்கு மரியாதை கொடுத்தா மட்டும் போதும்.. எனக்கு மரியாதை தரனும்னுலாம் அவசியம் இல்ல.. இந்த போங்க வாங்கலாம் வேணாம்.. போ வான்னே சொல்லுங்க.. இல்லனா போடி வாடின்னு சொல்லுங்க.. எனக்கு பரவால..!! சரியா..?? நான் வர்றேன்..!!”
நந்தினி சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள். தலையை கவிழ்த்திருந்த கற்பகம், நந்தினி போவதையே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் சற்று தொலைவாக சென்றதும், உதட்டை சுளித்து ‘வே..’ என்று நந்தினிக்கு தெரியாமல் பழிப்பு காட்டினாள்.
அன்று மாலை அதே ஆபீசில்..
கீழே இருக்கும் டீக்கடையில் வேலை பார்க்கும் பையன், ஃப்ளாஸ்கில் கொண்டு வந்த காபியை, ஆபீசில் வேலை பார்க்கும் அனைவருக்கும் கப்பில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தான். இரண்டு கப்புகளில் காபி நிரப்பிக்கொண்ட கற்பகம், இரண்டையும் எடுத்துக் கொண்டு அசோக்கின் அறைக்குள் நுழைந்தாள். ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டு, இன்னொன்றை அவனுக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்து கொண்டே உறிஞ்ச ஆரம்பித்தாள்.
“அந்த ஃபேக்ஸ் அனுப்பியாச்சா கற்பு..??” அசோக்கும் காபி உறிஞ்சிக்கொண்டே கேட்டான்.
“ம்ம்.. அனுப்பியாச்சுங்க ஸார்..!!” கற்பகத்தின் குரலில் தொணித்த ஒரு கிண்டலை அசோக் கவனிக்கவில்லை.
“அப்புறம்.. அந்த டெல்லி பார்ட்டி.. பேமன்ட் வரலை.. ஃபால்லோ-அப் பண்ண சொல்லிருந்தேன்..!!”
“ஃபோன் பண்ணி கேட்டேங்க ஸார்.. செக் நாளைக்கு ரெடியாகிடும்னு சொல்லிருக்காங்க ஸார்..!!”
இந்தமுறை அசோக் அந்த எள்ளலை புரிந்துகொண்டான். கற்பகத்தை ஏறிட்டு வித்தியாசமாக பார்த்தான். ஒருமாதிரி குழப்பமான குரலில் கேட்டான்.
“ஏய்.. என்னாச்சு இன்னைக்கு.. ஸார் ஸார்னு ஓவர் மரியாதைலாம்..??”
“அதுவா..?? எல்லாம் உங்க பொண்டாட்டி மேடத்தோட கட்டளைதான் ஸார்..!! இனி நான் உங்களை வாங்க ஸார்.. போங்க ஸார்னுதான் கூப்பிடணுமாம்..!!”
“ஹாஹா.. இது எப்போ நடந்தது..??” அசோக் ஒரு புன்முறுவலுடன் கேட்டான்.
“இன்னைக்குத்தான்..!! மதியம்.. மேடம் என் எடத்துக்கே வந்து பெருசா ஒரு கம்ப்ளயின்ட் வாசிச்சுட்டு போயிட்டாங்க..!! என் புருஷனை இனிமே வாடா போடான்னுலாம் கூப்பிட கூடாதுன்னு.. ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டிருக்காங்க அம்மணி..!!”
“ப்ச்.. நீ எப்போவும் போல என்னை கூப்பிடு கற்பு.. அவ கெடக்குறா.. லூசு..!!”
“ஹேய்.. ஏண்டா அவளை திட்டுற..?? அவ சொன்னதுல என்ன தப்பு இருக்கு..??”
“ஓ.. அவளுக்கு நீயும் சப்போர்ட்டா..?”
“ஆமாம்.. ஒரு பொண்டாட்டின்றவ வேற எப்படி இருப்பான்னு நீ எதிர்பார்க்குற..? என்னால அவளோட ஃபீலிங்க்சை புரிஞ்சுக்க முடியுது அசோக்.. அவ சொன்னதுல எந்த தப்பும் இல்ல..!! நான்தான் இத்தனை நாளா அறிவில்லாம நடந்துக்கிட்டேன்.. இனிமே நான் உன்னை மரியாதை இல்லாம கூப்பிட போறது இல்ல..!!”
“ஏய்.. அவ சொன்னதுக்காக நீ ஏன் உன்னை மாத்திக்கிக்கனுமா..?”
“யார் சொன்னா என்ன..? தப்புன்னு தெரிஞ்சா மாத்திக்க வேண்டியதுதான்..!! ஆனா.. அதுக்காக நீ ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத.. உன் பொண்டாட்டி அந்த வகைல ரொம்ப நல்லவடா.. அவ இருக்குறப்போத்தான் உன்னை மரியாதையா கூப்பிட சொல்லிருக்கா.. அவ இல்லாதப்போ உன்னை என்ன வேணா சொல்லி கூப்பிட்டுக்கலாமாம்.. நாய், பேய், எருமை, பன்னின்னு கூட கூப்பிட்டுக்கோங்கன்னு சொல்லிட்டா..!!”
“ஹாஹா.. இதுலாம் அவ சொன்னதா.. இல்ல நீ போடுற எக்ஸ்ட்ரா பிட்டா..??”
“புரிஞ்சா சரிதான்..!! ஆமாம்.. நீ என்னவோ அவளுக்கு உன் மேல எந்த அக்கறையும் இல்ல.. நீ என்ன செஞ்சாலும் அவளுக்கு கவலை இல்லைன்னு சொன்ன.. ஆனா அம்மணியை பாத்தா அப்படி தோணலையே..? உன் மேல ரொம்ப பிரியமா இருக்காங்க..??”
“ம்ம்.. எனக்கும் ஒன்னும் புரியலை.. கொஞ்ச நாளா அவளுக்கு ஏதோ ஆயிடுச்சு கற்பு..!!”
“என்ன ஆச்சு..?”
கற்பகம் கேட்க, கடந்த சில வாரங்களாக நந்தினி நடந்து கொள்ளும் முறைகளை பற்றி அசோக் அவளிடம் பொறுமையாக விளக்கினான். முக்கியமாக அன்றொரு நாள் இரவு அவனுடைய காலேஜ் ஆல்பத்தை எடுத்துக்கொண்டு வந்து வழிந்தது, அடுத்த நாள் காலை காபி அருந்துகையில் அவள் உருகியது.. எல்லாம் சொன்னான். எல்லாவற்றையும் பொறுமையாககேட்டுக் கொண்டிருந்த கற்பு, அவன் சொல்லி முடித்ததும் நீளமாய் ஒரு பெருமூச்சு விட்டவாறு, சற்றே கிண்டலான குரலில் சொன்னாள்.
“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. சந்தேகமே இல்லை.. அம்மணிக்கு உன் மேல லவ்ஸ் பிச்சுக்கிச்சு..”
“ஹேய்.. வெளையாடாத கற்பு..”
“நான் என்ன வெளையாடுறேன்..? நீ சொன்னதை வச்சுதான் சொல்றேன்.. அவ உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா..!! ஐ’ஆம் ஹண்ட்ரட் பர்சண்டேஜ் ஷ்யூர்..!!”
“எனக்கும் அந்த டவுட்டு இருக்கு கற்பு.. ஆனா..”
“என்ன ஆனா..??”
“அவ ஏன் இப்படிலாம் அறிவில்லாம பண்ணுறா..??”
“அட கொடுமையே.. கட்டுன புருஷனை லவ் பண்றது அறிவுகெட்டதனமா..?”
“ப்ச்.. என்ன கற்பு.. நீயும் புரியாம பேசிக்கிட்டு..?? எதையும் எதிர் பார்க்க கூடாதுன்னு கண்டிஷன் போட்டுத்தான கல்யாணமே பண்ணிக்கிட்டோம்..??”
“நீதாண்டா புரியாம பேசுற.. இதுலாம் கண்டிஷன் போட்டு கண்ட்ரோல் பண்ணி வைக்கிற விஷயமாடா..?? நம்ம ஊர் பொண்ணுகளுக்குலாம் தாலி கட்டுனவுடனே எங்க இருந்துதான் வருமோ.. புருஷன் மேல அந்த பிரியமும், பொசசிவ்னசும்..!! பொண்ணுகளை பத்தி நீ இன்னும் சரியா புரிஞ்சுக்கலை அசோக்.. நீ பழகுற அந்த மோசமான பொண்ணுகளை பாத்து பாத்து.. எல்லாம் அப்படித்தான் இருப்பாங்கன்னு நெனச்சுட்டியோ என்னவோ..?? உண்மையான ஒரு தமிழ்ப்பொண்ணை இப்பத்தான பாக்குற.. போக போக பொண்ணுகளை பத்தி நல்ல புரிஞ்சுக்குவ..!!”
“என்ன பூச்சாண்டி காட்டுறியா..??”
“இல்ல.. என மனசுக்கு தோணுனதை சொல்றேன்..”
“என்ன தோணுது உன் மனசுல..?”
“கூடிய சீக்கிரம் நீ பொண்டாட்டிதாசன் ஆக போறேன்னு தோணுது..”
“ஹாஹா.. அந்தக்கதைதான் இங்க நடக்காது.. நான் எப்போவும் மாறவே மாட்டேன்..!!”
“பேசு தம்பி பேசு.. நல்லா பேசு..!! உனக்கு பாடம் சொல்லி தந்த வாத்தியாரே.. அங்க ஒருத்திக்கிட்ட மண்ணை கவ்விட்டாரு..!!”
“புருசை சொல்றியா..?? அவன் கெடக்குறான்.. அவனுக்கு வேற வழி இல்ல.. மாறிட்டான்..!! எனக்கு அந்த மாதிரி ஒரு நெலமை எப்போவும் வராது..!!” அசோக் அந்த மாதிரி எகத்தாளமாக சொல்ல, கற்பகம் இப்போது சற்றே சீரியசான குரலில் சொன்னாள்.
“இங்க பாரு அசோக்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!! இன்னும் கூட ஒன்னும் கெட்டு போகலை.. நீ இவ்வளவு மோசமானவன்னு தெரிஞ்சும் உன் பொண்டாட்டி உன்னை லவ் பண்றா..!! இதைவிட உனக்கு என்ன வேணும்..?? எல்லாத்தையும் விட்டுட்டு.. உன் பொண்டாட்டிக்காக கொஞ்சம் மாறித்தான் பாரேன்..??”
“ஹாஹா..!! இவளுக்காக.. என் சந்தோஷத்தைலாம் விட்டுட்டு.. நான் மாறனுமா..?”
“ஏன்.. மாறினா என்ன..?? அந்த புருஷோத்தமன் மாறலை..??”
“அவன் பொண்டாட்டி அவனுக்காக என்னன்னவோ தியாகம் பண்ணிருக்கா.. அவன் மாறிட்டான்..!! இவ எனக்காக என்ன பண்ணிருக்கா..??” அசோக் கிண்டலாக கேட்க,
“ஹ்ம்ம்.. உன்னை மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்கிறதே ஒரு பெரிய தியாகந்தாண்டா..?? இதுல புதுசா லவ்வு வேற மொளைச்சிருக்கு.. இதுக்காகவாவது நீ மாற கூடாதா..??” கற்பகமும் கிண்டலாகவே பதிலளித்தாள்.
“ஹாஹா.. எதுக்காகவும் நான் மாறுறதா இல்ல..”
“ம்ம்.. இப்படியே பேசிட்டு திரி.. ஒருநாள் எல்லாத்துக்காகவும் நல்லா ஃபீல் பண்ண போற..!!”
“சரி அதை விடு.. மதியம் அவ உன்கிட்ட என்ன சொன்னான்னு சொல்லு..!!”
“உடனே பேச்சை மாத்திடுவியே..?? ம்ம்ம்ம்… அவ என்ன சொன்னா.. அப்டியே.. மூஞ்சியை சொர்ணாக்கா மாதிரி டெரரா வச்சுக்கிட்டு.. கண்ணுல அப்டியே ரெட் பல்பு எரிய.. என்னென்னவோ சொன்னா..!! நான் அப்படியே பயந்து நடுங்கி போயிட்டேன்..!! ஆனா ஒன்னுடா.. நீ சொன்னப்போ நான் நம்பலை.. இன்னைக்குத்தான் தெரிஞ்சது..!!”
“என்ன..?”
“உன் பொண்டாட்டி மேடத்துக்கு கொஞ்சம் கொலஸ்ட்ரால் ஜாஸ்திதான்..!!”
“ஹாஹா.. அப்படி என்ன சொன்னா..?”
“ஆனா அவளை சொல்லியும் குத்தம் இல்ல.. எல்லாம் உன்னாலதான்..!!”
“என்னாலயா..?”
“ஆமாம்..!! ‘காலிப் பசங்க கூடலாம் சேராதடி கற்பகம்..’ன்னு எங்க அம்மா சின்ன வயசுலேயே அடிக்கடி சொல்வாங்க.. அதெல்லாம் மறந்துட்டு உன்னை மாதிரி ஒரு கழிசடைப்பய கூட சேர்ந்தேன் பாரு.. அதான் இந்த திட்டுலாம் கேக்குறேன்..!!”
“ஹேய்.. என்ன சொன்னான்னு சொல்லு..”
“உங்களுக்கும் அவருக்கும் நடுவுல என்ன ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப்புன்னு எனக்கு தெரியாது..” கற்பகம் நந்தினி சொன்னது மாதிரி உதட்டை சுளித்து சொல்லிக்காட்டி கேலி செய்தாள். அசோக் சிரித்தான்.
“ஹாஹாஹாஹா..!!”
“அப்படியே அவ கொமட்டுல ரெண்டு குத்தலமான்னு இருந்தது எனக்கு.. பாவம்னு விட்டுட்டேன்..!!”
“ஹாஹாஹாஹா..!!”
“சிரிக்கிறியா..?? சிரி மவனே சிரி..!! உன்னை மாதிரி ஆள் கூட சகவாசம் வச்சுக்கிட்டதுக்கு.. உன் பொண்டாட்டி என்னை ஏறிட்டு போறா..!!”
கற்பகம் சொன்னவிதம் அசோக்கிற்கு மேலும் சிரிப்பையே வரவழைத்தது. வாய் விட்டு சிரித்தான்.. அதன் பிறகு வரப்போகிற சம்பவங்களின் தீவிரம் உணராதவனாய்..!! Sunni Oombum Tamil Kama Stories
– தொடரும்
ஆண்மை தவறேல் – 25
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000