ஐ ஹேட் யூ பட் – 32

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamaveri – “நீ எங்க கெளம்பிட்ட..??”

“எனக்கும் வேலை இருக்குது.. நான் போறேன்..!!” அசோக் சற்றே வெறுப்பாக சொன்னான்.

“உன் வேலைய நாளைக்கு முடிச்சா போதும்.. வா.. ஒரு கேம் ஆடலாம்..!!”

“எ..எனக்கு மூட் இல்ல..!!” அசோக் சலிப்பாக சொல்ல.

“இவ்வளவு நேரம் அவ கூட வெளையாட மட்டும் மூட் இருந்ததோ..??” ப்ரியா சூடாக கேட்டாள்.

“ஆமாம்.. அப்படியே வச்சுக்கோ..!! உன்கூட வெளையாட எனக்கு புடிக்கலை.. போதுமா..??”

“ஹாஹா.. என்கூட வெளையாண்டா தோத்துடுவ.. பயம்..!! அப்படித்தான..??” ப்ரியா அவனுடைய தன்மானத்தை சீண்டி வலை விரித்தாள்.

“ஏய்.. யா..யாருக்கு பயம்..?? எனக்கு எவளை பாத்தும் பயம் இல்ல..!!” அசோக்கும் வீறாப்புடன் அந்த வலையில் சிக்கிக்கொண்டான்.

“அப்போ வா.. வெளையாடலாம்..!!” சொல்லிவிட்டு ப்ரியா அசோக்கின் கண்களையே கூர்மையாக பார்த்தாள். அவளையே முறைத்துக்கொண்டிருந்த அசோக்கும் கொஞ்சம் கூட தயங்கவில்லை.

“ஓகே.. வெளையடாலாம்..!!” என்றான்.

ப்ரியா அசோக்கைப் பார்த்து ஒரு கேலிப்புன்னகையை உதிர்த்தவாறே, அவளுடைய வலது கையை நீட்டி, திறந்திருந்த கண்ணாடி கதவை அடைத்து தாழிட்டாள். கையிலிருந்த ராக்கெட்டால் கீழே கிடந்த பந்தை ஸ்கூப் செய்து அசோக்கின் பக்கமாய் வீச, அவன் அதை கேட்ச் பிடித்துக் கொண்டான்.

“சர்வீஸ் போடு..!!”

சொன்ன ப்ரியா நகர்ந்து சென்று கோர்ட்டின் மையப்பகுதியில் நின்றுகொண்டாள். முதுகை வளைத்து.. சற்றே முன்புறமாக குனிந்து.. இரண்டு கையாலும் ராக்கெட்டை வலுவாக பிடித்தவாறு.. கண்களை இடுக்கி சுவற்றை கூர்மையாக வெறித்தாள்..!!

அசோக் அவனுடைய இடத்திற்கு நகர்ந்தான். பந்தை தூக்கி போட்டு சர்வீஸ் செய்தான். பந்து சுவற்றில் மோதி திரும்ப வந்தது. ப்ரியாவை நோக்கி சென்றது. அவள் அதற்காகத்தான் காத்திருந்தாள். உடம்பில் இருக்கும் மொத்த வலுவையும் தன்னுடைய வலது கையில் திரட்டி, பற்களை கடித்துக்கொண்டு, சரெக்கென்று ஓங்கி ஒரு அடி அடித்தாள். பந்து மின்னல் வேகத்தில் சுவரை நோக்கி பறந்தது. அதே வேகத்தில் அசோக்கை நோக்கி திரும்ப வந்தது. அவன் சுதாரித்துக் கொள்வதற்கு கொஞ்சமும் அவகாசம் கொடுக்காமல், அவனுடைய அடிவயிற்றில் சென்று ‘தொம்..!!!’ என அடித்தது.

“ஆஹ்ஹ்க்க்க்க்…!!!!!!”

அசோக் வலியில் முனகியவாறே அடிவயிறை பிடித்துக் கொண்டான். கண்களுக்கு முன் நட்சத்திரங்கள் பறப்பது மாதிரி அவனுக்கு ஒரு உணர்வு. அவன் முகம் சுருக்கி வலியில் துடிக்க, ப்ரியா உணர்ச்சியற்ற முகத்துடன் அவனை வெறித்து பார்த்தாள். அவளுடைய கண்களில் மட்டும் ஒருவித குரூர திருப்தி. உதட்டில் மெலிதான புன்னகையுடன் கேலியாக கேட்டாள்.

“பால் வர்றப்போ அதை திரும்ப அடிக்கனும்னு தெரியாது.. காட்டிட்டு நிக்கிற..??”

“ஏ..ஏய்.. எ..என்னடி இவ்ளோ ஸ்பீடா அடிக்கிற..??” அசோக் அடிவயிற்றில் வேதனையுடன் திக்கி திணறி கேட்டான்.

“வேற எப்படி அடிக்கிறது.. அதான கேம்..?? நோகாம வெளையாடனும்னா.. செண்பகம் மாதிரி ஏதாவது சின்னப்புள்ளைங்க கூடதான் போய் விளையாடனும்..!!”

ப்ரியா கிண்டலாக சொல்ல, அசோக் இப்போது அவளை ஏறிட்டு முறைத்தான். அவளுடைய வார்த்தைகள் அவனுடைய ரோஷத்தை கிளப்பி விடுவதாக இருந்தன. கீழே கிடந்த பந்தை எடுத்து அவளிடம் தூக்கி போட்டான்.

“சர்வ் பண்ணு..!!”

என்று கெத்தாக சொல்லிவிட்டு, அடிவயிற்றில் ஒரு அவஸ்தையுடனே நடந்து சென்று, அவளுடைய சர்வீசை எதிர்கொள்ள தயாராக போய் நின்றான். ப்ரியா ஓரக்கண்ணால் அசோக்கை ஒரு கேலிப்பார்வை பார்த்தபடியே சர்வீஸ் போட்டாள். அசோக் திரும்ப அடித்தான். ப்ரியா இப்போது மீண்டும் மின்னல் போல பந்துக்கு ஒரு அடி போட, அது அசோக்கின் முகத்தை நோக்கி ‘விரர்ர்ர்ர்….’ என்று விரைந்து வந்தது. பந்தின் வேகத்துக்கு தன்னால் எதிர்நிற்க முடியாது என்பதை அசோக் தாமதமாகவே உணர்ந்து கொண்டான். காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்து வருகிற பந்தின் பாதையில் இருந்து விலகிக்கொள்ள நினைத்தவன், முகத்தை திருப்பினான். பந்து அவனுடைய தலையில் ‘நச்ச்..!!’ என்று அடித்து மேல்நோக்கி ராக்கெட் மாதிரி கிளம்பியது. அவனுக்கு தலையை சுற்றி மின்மினிகள் பறந்தன.

“ஆஆஆஆஹ்…!!” என்று அலறினான்.

அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு அவன் அவ்வாறு அலறிக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது. ப்ரியாவின் கைகள் ப்ளாஷ் அடிப்பது போல பளிச் பளிச்சென்று வெட்டிக்கொண்டே இருந்தன. பந்து புல்லட் வேகத்தில் சுவரை நோக்கி பறப்பதும், திரும்ப அசுர வேகத்தில் விரைந்து வந்து அசோக்குடைய உடலின் ஏதாவது ஒரு பகுதியை வன்மையாக தாக்குவதுமாக இருந்தது. ‘ஐயோ.. அம்மா..’ என்று முக்கலும், முனகலுமாகவே அசோக் அந்த அடிகளை வாங்கிக்கொண்டான்.

“ஏ..ஏண்டி இப்படி வெறி புடிச்ச மாதிரி ஆடுற..??” அசோக் பரிதாபமாக கேட்க,

“எல்லாம் ஒழுங்காத்தான் ஆடுறாங்க.. போடு போடு..!!” ப்ரியா அலட்சியமாக சொன்னாள்.

ப்ரியாவின் மின்னல் வேக ஆட்டத்திற்கு தன்னால் ஈடுகொடுக்க முடியவில்லை என்று அசோக்கிற்கு தெளிவாக புரிந்தது. ஆனால் போட்டியில் இருந்து விலகிக்கொள்ளவும் அவனுடைய ஈகோ இடம் தரவில்லை. எப்படியாவது சமாளித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆட்டத்தை தொடர்ந்தான். ஆனால் அவளை சமாளிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. பந்தாலேயே உடம்பெல்லாம் ‘சொத்..சொத்..’ என்று அடி வாங்கி முனகத்தான் அவனால் முடிந்தது.

அசோக் சொன்ன மாதிரி ப்ரியா ஒரு வெறியுடன்தான் இருந்தாள். அவன் மீதான அவளுடைய ஏக்கம்.. அந்த ஏக்கம் நிறைவேறாத ஏமாற்றம்.. அந்த ஏமாற்றம் அவளுக்களித்த அழுகை.. அந்த அழுகை அவளுக்குள் கிளப்பிவிட்ட ஆத்திரம்..!! எல்லாமுமாய் சேர்ந்து வெறியாக உருமாறி.. அவளுடைய ஸ்குவாஷ் ராக்கெட் மூலமாக வெளிப்பட்டது..!! பாயிண்டுகள் எடுக்கவேண்டும் என்பதெல்லாம் அவளுடைய நோக்கமாக இருக்கவில்லை. அசோக்கிற்கு அடிவிழுவது மாதிரி குறிபார்த்து பந்தடிப்பதுதான் அவளது குறிக்கோளாக இருந்தது..!!

அந்த மாதிரி விளையாட்டு என்கிற போர்வையில்.. ப்ரியா அசோக்கின் உடம்பை பதம் பார்த்துக் கொண்டிருக்கையில்தான்.. ஒருமுறை ப்ரியா சுவற்றில் அடித்த பந்து ஏவுகணை மாதிரி அசோக்கின் முகத்தை குறிவைத்து சீறிக்கொண்டு வந்தது. பந்தை அடித்துவிடவேண்டும் என்று அசோக் தனது ராக்கெட்டை வீசினான். ஆனால் படுவேகத்தில் பறந்து வந்த பந்து அவனுடைய ராக்கெட் வீச்சுக்கு தப்பி, அவனுடைய வலது கண்ணிலேயே வந்து ‘டமார்..’ என அறைந்தது. அவ்வளவுதான்..!!

“அம்மாஆஆஆ..!!”

என்று கத்திக்கொண்டே அசோக் கையிலிருந்த ராக்கெட்டை நழுவவிட்டான். இரண்டு கைகளாலும் கண்ணை பொத்திக்கொண்டு, அப்படியே கால்கள் மடங்க தரையில் சரிந்தான். ‘ஆ… ஆ… ஆ…’ என வேதனையாக முனகினான். நெளிந்தான்.

ப்ரியா எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள். வேகவேகமாய் மூச்சு விட்டதில், அவளுடைய மார்புகள் மட்டும் குபுக் குபுக்கென ஏறி இறங்கிக்கொண்டிருந்தன. அவளுடய கண்கள், அவளது காலடியில் சுருண்டு விழுந்து கிடக்கும் காதலனை ஒருவித வெறித்த பார்வை பார்த்தன. அவள் மனதில் இப்போது ஒரு திருப்தி.. அசோக்கை அடித்து வீழ்த்திவிட்ட திருப்தி.. காலையில் இருந்து நெஞ்சுக்குள் சேமித்து வைத்திருந்த அழுத்தத்தையும், ஆத்திரத்தையும் வெளிப்படுத்திவிட்ட திருப்தி..!! அவளுடைய உதடுகளில் மீண்டும் அந்த குரூர புன்னகை..!!

ஆனால்.. ஒருசில விநாடிகள்தான் அந்த புன்னகை அவளிடம் நீடித்திருந்தது..!! அடுத்த கணமே அவளுடைய காதல் மனது விழித்துக் கொண்டது.. அசோக்கை பார்க்க பாவமாக இருந்தது..!! உடனே கையிலிருந்த ராக்கெட்டை கீழே போட்டுவிட்டு, மண்டியிட்டு அமர்ந்தாள். குப்புற கிடந்த அசோக்கிடம் குனிந்து அவனுடைய தலையை இதமாக தடவி, அவனுடைய முகத்தை தனது கைகளால் மென்மையாக தாங்கியவாறே சொன்னாள்.

“எங்க காட்டு.. பாக்கலாம்..!!”

“ப்ச்.. போடீ..!!” அசோக் கடுப்புடன் அவளுடைய கைகளை தட்டிவிட்டான். “ஷ்ஷ்ஷ்.. ஆஆஆ..!!” என வலியில் முனகினான்.

“ஏய்.. காட்டுன்றன்ல.. காட்டுடா..!!”

ப்ரியா அவனுடைய கைகளை வலுக்கட்டாயமாக பற்றி விலக்கினாள். அசோக்கிற்கு அடிபட்ட கண்ணை திறக்க முடியவில்லை. அந்த கண்ணில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. ஒரு கண் மூடியிருக்க, ஒரு கண்ணை மட்டும் திறந்து ப்ரியாவை பரிதாபமாக பார்த்தான். அவனை அந்த போஸில் பார்க்க ப்ரியாவிற்கு சிரிப்பு வந்தது. ஆனால் அந்த சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு,

“அபப்டியே.. கண்ணை தெறக்க ட்ரை பண்ணு..!!” என்றாள்.

“முடியலைடி.. வலிக்குது.. ம்மாஆஆ..!!”

“ஹ்ம்ம்.. சரி.. மொதல்ல நீ எந்திரி.. வா…!!”

ப்ரியா அசோக்கின் ஒரு கையை எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டாள். அவனுடைய இடுப்பை வளைத்து பிடித்து, அவன் எழுந்துகொள்வதற்கு உதவினாள். கைத்தாங்கலாக கூட்டிச்சென்று கோர்ட்டுக்கு வெளியே கிடந்த ஒரு சேரில் அமரவைத்தாள். அவனை அங்கேயே அமர சொல்லிவிட்டு அவசரமாக நடந்து சென்றாள். ஓரிரு நிமிடங்களிலேயே கையில் ஒரு துணிப்பந்தோடு திரும்பவந்தாள். ஐஸ்கட்டிகளை உள்ளடக்கி சுற்றப்பட்ட துணிப்பந்து..!!

அசோக் ‘ஆஹ்.. ஆஹ்..’ என்று அவஸ்தையாக முனகிக்கொண்டிருக்க.. ப்ரியா அவனது வீங்கிய கண்ணை சுற்றி ஐஸ் ஒத்தடம் கொடுத்துக்கொண்டே சொன்னாள்.

“ஹ்ஹ்ம்ம்ம்.. ஓவரா ஆட்டம் போட்டா.. இப்படித்தான் அடி கெடைக்கும்..!!” அவள் சொன்னதும் அசோக்குக்கு சுருக்கென்று கோவம் வந்தது.

“நான் எங்கடி ஓவரா ஆட்டம் போட்டேன்..”

என்று கத்தியவன், தொடர்ந்து ‘லூஸு’ என்றும் கத்த நினைத்திருந்தான். ஆனால் காலையில் அவள் சீறியது ஞாபகம் வர, அப்படியே வாய்க்குள்ளேயே அந்த வார்த்தையை போட்டு மென்றான். ஆனால்.. ப்ரியா புரிந்து கொண்டாள்.. அடுத்து என்ன சொல்ல நினைத்திருப்பான் என்று.. அவன் கத்தியது பாதியிலேயே தடைப்பட்டுவிட்டது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு..!! அவனுடய கண்ணோரமாய் துணிப்பந்தை வைத்து அழுத்தியவாறே..

“பரவால.. சொல்லிக்கோ..!!” என்றாள் மெல்லிய குரலில். அதற்கு மேலும் அசோக்கால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.

“லூஸு..!!!!” என்று வாய்விட்டு கத்தின பிறகுதான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

அவன் கத்தியதற்கு ப்ரியா மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள். கவனமாக அவனுடய கண்ணுக்கு கொஞ்ச நேரம் ஒத்தடம் கொடுத்தாள். ஒத்தடம் கொடுத்தது அசோக்கின் கண்ணில் ஏற்பட்டிருந்த வேதனையை வெகுவாக குறைத்தது. ஓரிரு நிமிடங்களுக்கு அப்புறம் மெல்ல கண்ணை திறந்து பார்த்தான். இமைகளை ஒருமாதிரி சுருக்கி சுருக்கி விழித்தான்.

“ப்ச்.. ஒன்னும் இல்லடா.. ஓவரா ஸீன் போடாத..!!” ப்ரியா நக்கலாக சொன்னாள்.

“அடிங்.. பண்றதையும் பண்ணிட்டு.. நான் ஓவர் ஸீன் போடுறனா..??”

“நான் என்ன பண்ணினேன்.. வெளையாட்டுனா அடிபடுறது சகஜம்தான்.. அதுக்கு நான் என்ன பண்ணுவேன்..??”

“வெளையாட்டுலாம் இல்ல.. நீ வேணும்னே பண்ணுன.. எனக்கு நல்லா தெரியும்..!! வெறியாட்டம் ஆடிட்டு.. வெளையாட்டாம்ல வெளையாட்டு..!!” அசோக் கடுப்புடன் சொல்ல, ப்ரியா அதை கண்டுகொள்ளாமல் கூலாக சொன்னாள்.

“சரி விடு.. வா.. இன்னொரு கேம் ஆடலாம்..!!”

“எதுக்கு..?? இன்னொரு கண்ணையும் நொள்ளையாக்குறதுக்கா..??”

“ஹாஹா.. நான்தான் வேணுன்னு பண்ணலைன்னு சொல்றேன்ல..??”

“நீ வேணுன்னு பண்ணுனியோ.. வேணாம்னு பண்ணுனியோ..!! எனக்கு ஸ்குவாஷ் மேல இருந்த ஆசையே போச்சு..!!”

“ஓ..!! அப்போ இனி நீ ஸ்குவாஷ் ஆட மாட்ட..??” ப்ரியா அசோக்கை கூர்மையாக பார்த்தவாறு கேட்டாள்.

“ஏழேழு ஜென்மத்துக்கும் ஆட மாட்டேன்.. யப்பா..!!” அசோக் தலையை உதறியவாறே சொன்னான்.

“ஹ்ம்ம்.. ஓகே.. நல்ல முடிவு..!! நாளைப்பின்ன.. வேற யார் கூடவாவது வெளையாடுனேன்னு தெரிஞ்சது..??”

“என்ன பண்ணுவ..??”

“ஒண்ணுல்ல.. ‘நாம ரெண்டு பேரும் ஒரு கேம் ஆடலாம் வா..’னு கூப்பிடுவேன்..!!”

ப்ரியா குறும்பாக சொல்லிவிட்டு சிரிக்க, அசோக் அவளையே முறைத்து பார்த்தான்.

அத்தியாயம் 20

அப்புறம் வந்த சில நாட்கள் அசோக்கிற்கும், ப்ரியாவிற்கும்.. அந்த மாதிரி வெறுப்பும், முறைப்புமாகவே கழிந்தன..!!

அறத்திற்கு மட்டும் அல்லாது மறத்திற்கும் அன்புதான் துணை என்கிறார் வள்ளுவர்..!! அன்பை வெளிப்படுத்த பலவிதங்கள் உண்டு.. கோவம் அதில் ஒரு பிரதான வகை..!! சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையை கன்னத்தில் அறை போட்டு சாதத்தை வாயில் திணிக்கிறாள் அம்மா.. கன்னத்தில் விழுந்த அறை மறம் என்றால்.. அதற்கான காரணம் அன்பல்லவா..?? கன்னத்தில் அறைந்துவிட்டு சாதத்துடன் சேர்த்து அன்பையும் அல்லவா பிசைந்து ஊட்டுகிறாள்..?? அசோக்கை ப்ரியா அடித்து வீழ்த்தியதற்கும் அத்தகைய அன்புதான் காரணம்..!!

இத்தனை நாளாய் அசோக் தனக்கு உரியவன் என்றே நம்பியிருந்தாள். இப்போது அவன் வேறொருத்திக்கு சொந்தமானவன் என்று தெரிந்ததும், அவன் மீதான அவளுடைய காதல் கொஞ்சமும் குறைந்து போகவில்லை. மாறாக வேறொரு விதமாக அது அதிகரிக்கத்தான் செய்தது. அசோக்கையும் செண்பகத்தையும் சேர்த்து வைத்து பார்க்கையில் அவளுடைய மனதில் ஒரு பொசஸிவ் உணர்வு பொங்குகிறதே.. அந்த விதத்தில்..!! ஏதாவது அதிசயம் நடந்து இவன் தன்னுடன் இணைந்து விடமாட்டானா என ஏங்குகிறாளே.. அந்த விதத்தில்..!! ஆனால்.. அந்த காதலை அவள் வெளிப்படுத்துகிற விதந்தான் பிரச்சினைக்குரியதாக இருந்தது..!!

எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் எப்போதும் போலதான் நடந்து கொள்வாள். அசோக் மீதான அவளுடைய காதலை மிக இயல்பாகவே வெளிப்படுத்துவாள். காலையில் ஆபீஸ் வந்ததும் அசோக்கின் இடத்திற்கு சென்று,

“காலைல கோயிலுக்கு போனேன்டா.. உனக்கு நல்ல புத்தி குடுக்கனும்னு சாமியை வேண்டிக்கிட்டேன்..!!”

என்று கேலியும், சிரிப்புமாக சொல்லிக்கொண்டே அவனுடைய நெற்றியில் திருநீறு பூசிவிடுவாள். அவனும் முகத்தை முறைப்பாக வைத்துக்கொண்டு அவளுக்கு நெற்றி காட்டுவான். இருவரும் உருகி உருகி பேசிக் கொள்ளாவிட்டாலும், இலகுவான மனநிலையுடன் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள்.

அப்புறம் காபி பிரேக்கின்போது.. செண்பகம் தனது கைக்குட்டையால் அசோக்கின் நெற்றியில் இருக்கும் திருநீறை ஒழுங்கு படுத்துவதை ப்ரியா காண நேரிடும்.. அவ்வளவுதான்..!! செண்பகம் இயல்பாய் செய்த ஒரு காரியம்.. ப்ரியா தனது இயல்பை தொலைக்க காரணமாகிவிடும்..!! கண்களை இடுக்கி இருவரையும் முறைத்துப் பார்ப்பாள். அசோக் மீதான அவளுடைய காதல் அப்புறம் அன்று முழுவதும் கோவமாகத்தான் வெளிப்படும். அந்த கோவத்தை காட்ட அவள் உபயோகப் படுத்திக்கொள்வது அவளுடைய பதவியைத்தான்..!! அவனுக்கு அவள் பாஸ் என்கிற வசதியைத்தான்..!!

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால்.. அந்த திருநீறு விஷயம் நடந்த அன்று இரவு.. அசோக்கும் செண்பகமும் வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் ப்ரியாவும் வேலையை முடித்து தனது அறையில் இருந்து வெளிப்பட்டாள். இவர்கள் இருவரும் ஜோடியாக கிளம்புவதை பார்த்ததும், அவளுடைய மனம் குரங்கு போல தாவ ஆரம்பித்து விட்டது. மனதில் ஒரு இனம்புரியாத எரிச்சலும், கோவமும்..!! ஆட்டையை கலைத்துவிட வேண்டும் என்று உடனடியாய் ஒரு ஆதங்கம்..!! நேராக அசோக்கின் இடத்திற்கு சென்று.. முக்கியத்துவமே இல்லாத ஒரு வேலையை குறிப்பிட்டு..

“அதை இன்னைக்கு முடிச்சு செக்கின் பண்ணிட்டு போ..!!” என்றாள் வில்லத்தனமாக.

அசோக் எரிச்சலானான். கடுப்பாக அவளை முறைத்தான். விவாதம் செய்தான். ப்ரியா பிடிவாதமும் கடுமையாகவும் இருக்க, கடைசியில் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டான். அவனை நம்பி கிளம்பி தயாராக இருந்த செண்பகத்தை பரிதாபமாக பார்த்தான். ப்ரியா அவனுடைய பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்டவளாய்,

“கவலைப்படாத.. நான் அவளை ட்ராப் பண்ணிடுறேன்.. நீ வேலையை முடிச்சுட்டு போ..!!” என்று அசோக்கிடம் சொல்லிவிட்டு, அப்புறம் செண்பகத்திடம் திரும்பி,

“வா செண்பகம்.. நாம கெளம்பலாம்..!!” என்றாள்.

செண்பகமோ அசோக்கை ஏமாற்றமாக பார்த்தாள். அவஸ்தையாய் நெளிந்தாள். தன் மீது எப்பொழுதும் சிடுசிடுவென எரிந்து விழும் ப்ரியாவுடன், சேர்ந்து செல்ல தயங்கினாள். ப்ரியா விடவில்லை.

“ப்ச்.. வான்னு சொல்றேன்ல.. வா..!!”

என்று அவளுடைய புஜத்தை பற்றி தரதரவென இழுத்து சென்றாள். ‘வாடி.. மாமன் முதுகுல தொங்கிக்கிட்டேதான் போவியாக்குகும்..??’ என்று மனதுக்குள் ஏளனமாக கேட்டுக்கொண்டாள். Koothi Nakkum Tamil Kamaveri

– தொடரும்

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000