This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
சென்ற பகுதியின் தொடர்ச்சி…
நடு இரவை தாண்டியதும் ஏதோ கொஞ்சம் தூக்கம் வந்து எட்டி பார்க்க ரூமிற்க்குள் வந்து படுத்தேன். கண்ணை மூடி படுத்து இருந்தாலும் அவளின் அந்த கெஞ்சல், கொஞ்சல், சிணுங்கல் சத்தம் தான் திரும்ப திரும்ப காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. அதுனாலே என் தூக்கம் முழுவதும் ஒன்றுமே இல்லாமல் போனது. அசரிரீ மாதிரி அவளின் சிணுங்கல் சத்தம் தொடர்ந்து காதில் கேட்டு கொண்டே இருந்தது.
படுத்திருக்க முடியாமல் மீண்டும் எழுந்து வெளியே சென்று ஒரு தம்மை பற்ற வைத்து ஆழமாக உள்ளே இழுத்து மனதை நானே கொஞ்சம் தேற்றிக் கொண்டு அந்த தம்மை முடித்து விட்டு வந்து படுத்தேன்.. நீண்ட நேர கண் முழித்தலுக்கு பின் என்னையும் அறியாமல் கண்ணை எப்போது மூடினேன் என்று எனக்கே தெரியவில்லை..
மறுநாள் காலையில் எல்லாருடைய வீட்டிலும் சுப்ரபாதம் பாடுவது போல் அம்மாக்கள் மகனை எழுப்புவதற்கு ஒரு பாட்டை விடாமல் பாடுவார்கள். அதே போல் என் அம்மாவும் என்னை எழுப்ப
” டே எந்திரிடா மணி 7ஆச்சு. இன்னும் மணி ஆனது கூட தெரியாம தூங்கிட்டே இருக்க. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லமா தூங்கிட்டு இருக்க. இன்னிக்கு நீ காலேஜ் போகனும் அதாவது தெரியுமா? னு”
பாடிய பாட்டை திரும்ப திரும்ப பாட அந்த சத்தம் கேட்டு முழிப்பு வந்தது. ஆம். இன்று தான் என் கல்லூரி வாழ்க்கையின் கடைசி வருடத்தின் முதல் நாள். இதன் பின் அந்த மாதிரி ஒரு சந்தோஷம் வாழ்வில் திரும்ப கிடைப்பது கொஞ்சம் கடினம் தான் என நினைத்துக் கொண்டே படுத்திருந்தேன். என் அம்மா மறுபடியும் நான் எழுந்திருப்பதற்கான பாட்டை பாட ஆரம்பிக்க அதற்குள்
“ஏம்மா.. இதோ.. எந்திரிச்சிட்டேன்.. உன் பாட்ட கொஞ்சம் நிறுத்திறியா? காலைல உன் பாட்ட ஆரம்பிச்சுட்டியா..” சொல்லிக் கொண்டே என் ரூமில் இருந்து கீழே இறங்கி போய் காபியை வாங்கி குடித்துக் கொண்டே எதிர் வீட்டை நோட்டம் விட்டேன். அந்த பொண்ணோ அல்லது அவளின் குரலோ எதுவும் கண்களுக்கோ, காதுக்களுக்கோ புலப்படவில்லை. அவள் வெளியே வருவது போல் தெரியவில்லை.
நான் குளிக்க சென்று காலேஜ்க்கு ரெடி ஆனேன். வழக்கம் போல் காலையில் அம்மா குடுக்கும் இட்லியை விருப்பம் இல்லாவிட்டாலும் உள்ளே தள்ளி விட்டு ஒன்றரை மாதங்களாக தொடாத வண்டியை தூசி தட்டி துடைக்கும் போது எதிர் வீட்டில் அந்த பெண் எதுவும் தென்படுகிறளா என பார்த்தேன். ம்கூம்.. அவளின் குரல் கூட வெளியே எட்டி பார்க்கவில்லை.. நமக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான் அந்த இடத்திலிருந்து துடைத்த வண்டியை எடுத்துக் கண்டு காலேஜ்க்கு புறபட்டேன்..
என் தெருவை தாண்டி பல வாகனங்கள் செல்லும் அந்த முக்கிய சாலையில் வண்டியை மிதமான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தேன். என் மனம் வண்டிகள் செல்லும் அந்த சாலையில் இல்லை. நேற்று நான் கேட்ட பெண்ணின் குரலில் தான் மீண்டும் லயித்து இருக்க ஆரம்பித்தது.
எவனோ ஒருவன் என்னை சாவுகிராக்கி திட்டிக் கொண்டே கடந்து செல்ல நிஜ உலகத்திற்கு வந்து அவன் செல்லும் வேகத்தை பார்த்து சாவை விலை குடுத்து வாங்கும் அவன் தான் சாவுகிராக்கி என நினைத்துக் கொண்டேன்..
வண்டி செல்லும் வேகம் அவளின் நினைவால் குறைந்து கொண்டே வந்து ஜர்க் ஆகி ஒரு இடத்தில் நின்று வண்டி ஆப் ஆகி விட மீண்டும் சுதாரித்து அவளை பார்க்க முடியவில்லை என்ற வெறுப்பை வண்டியின் கிக்கரில் காட்ட ஓங்கி ஒரே மிதியில் வண்டி ஸ்டார்ட் ஆக எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து இந்த முறை எந்த சிந்தனையும் இல்லாமல் காலேஜை சென்று அடைந்தேன்.
பல நாட்களுக்கு பின் நண்பர்களை பார்த்து பேசிக் கொண்டே இருக்கும் போது காலேஜ் பஸ்ஸில் இருந்து முகம் தெரிந்த பெண்களுக்கு இடையில் பல முகம் தெரியாத அழகான புது பெண்களும் இறங்க.
என் பக்கத்தில் இருந்த நண்பர்கள் எல்லாம் எங்களை கடந்து செல்லும் பெண்களை நோக்கி கையை காட்டி எதையோ சொல்ல ஆனால் பெண் என்றதும் என் மனம் எதிர் வீட்டு ஏஞ்சலை நினைக்க ஆரம்பித்துவிட்டது. நண்பர்களை சொல்வதை கேட்கமால் என் உலகத்தில் இருந்ததை பார்த்து என்னை தட்டி உலுக்கி
“காலேஜ் வந்த முதல்ல நாளே எவ கூட சார் டூயட் பாடுறீங்க” கிண்டல் பண்ண.
“அதலாம் ஒன்னும் இல்லடா” சொல்ல.
“ஒன்னும் இல்லனா காலேஜ்க்கு வந்ததும் காலையிலே கனவு கண்டுட்டு இருக்க.. அது எப்படி ஒன்னும் இல்லாம இருக்கும்.. நீ சொல்லு மச்சி.. ஏதோ விசயம் இருக்கு. அதான் நீ இப்படி இருக்க..”
“வண்டி வரும் போது நம்ம காலேஜ் பஸ்ல ஒரு பொண்ணோட குரல்ல கேட்டேன்.. அதான்.”
“இவ்வளவு தானா மேட்டர். இது சப்ப மேட்டரு” சொல்லிட்டு.
“ஆமா மச்சான் எந்த ஏரியா பஸ்” கேட்க.
நான் என்ன சொல்வது தெரியாமல் முழிக்க என்னையும் அறியாமல் என்னோட ஏரியா தான் சொல்ல..
” ஓ.. சூப்பர் மச்சான். பஸ் நம்பர சொல்லு” கேட்க எனக்கு பக் என்றது..
எதையாவது சொல்லி சமாளித்து விட்டு அவர்களை விட்டு தனியாக செல்ல நினைத்தேன்.
“சாரி மச்சான்.. அத கவனிக்கல..” சொல்லிவிட்டு அவர்கள் அடுத்து ஆரம்பிப்பதற்கு முன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டேன்.. அந்த பெண்ணின் நியாபகமாகவே இருக்க வெளியே சென்று ஒரு தம்மை அடித்து விட்டு மீண்டும் உள்ளே வர எல்லாரும் கிளாஸ்க்குள் செல்வதற்கு பெல் அடிக்கவும் சரியாக இருந்தது..
அவளின் நினைவாகவே கிளாஸ்க்குள் சென்றேன். ஒரு மாதத்திற்கு முன் கேட்டு பழக்கப்பட்ட குரலை மீண்டும் கேட்க சலிப்பாக இருந்தது. அந்த குரலை மீண்டும் எப்போது கேட்பேன் என்ற ஆர்வம் தான் இருந்தது. அதே நினைவாகவே இருக்க கிளாஸ்க்குள் ஸ்டாப் வந்தது கூட தெரியாமல் கூட்டத்திற்கு நடுவில் உட்காந்து இருந்தேன்.
என் நண்பன் சட்டை பிடித்து தூக்க நிஜ உலகத்திற்கு வந்து கடமைக்கு என்று எழுந்து நின்று மீண்டும் உட்கார்ந்தேன்.. வகுப்பில் ஸ்டாப் எதையோ நடத்த நான் அந்த கொஞ்சல் ராணியின் குரலை திரும்ப திரும்ப ரிவைன் செய்து மனதிலே கேட்டுக் கொண்டிருந்தேன். அப்படியே அந்த வகுப்பு முடிந்தது.
நான் அந்த வகுப்பு முடிந்தும் அதே நிலையில் அந்த குரலை மனதில் திரும்ப திரும்ப வந்து ஓடி கொண்டிருந்தது. நான் இருக்கும் நிலையை பார்த்து பக்கத்தில் உட்கார்ந்திருந்த வைரவ்
“மச்சான் இன்னும் அவளையே நினைச்சிட்டு இருக்க.. ஆள் பாக்கல. பஸ் நம்பர பாக்கல. ஆனா குரல்ல மட்டும் கேட்டதுக்கா இப்படி பிரம்ம புடிச்ச மாதிரி உட்காந்திருக்கா..”
“உனக்குலாம் சொன்னா புரியதுடா.. அந்த குரல்ல என்னை என்னமோ பண்ணிடுச்சு.”
” ஆமா அப்படி என்ன பண்ணிச்சு உன்ன. கொஞ்சம் சொல்லு நாங்களும் கேட்குறோம்” சொல்ல
மற்ற நண்பர்களும் அதேயே கோரஸ் பாடினார்கள்…
“அதான் சொன்னேன்ல டா.. அதலாம் வெறும் வார்த்தையால அத சொல்லிட முடியாது..”
“ம்ம் வேணா இப்படி சொல்லலாம் அவ குரல் காந்த குயில் மாதிரி இருந்துச்சு” சொல்ல…
“நீ சொல்ற பாத்த அதுக்கு அந்த காட்டு குயிலே தேவல போலிருக்கே” கிண்டல் பண்ணவும் அவர்களை முறைத்து பார்க்க அனைவரும் அமைதி ஆகினர்..
“சரி.. வா மச்சான்.. பாத்துக்கலாம்.. நீ சொல்றவ ஓரிஜினல் குயிலாவே இருந்தாலும் பேசி கரைக்ட் பண்ணி பழக மட்டும் தான் செய்வ” வைரவ் சொல்ல..
“ஆமாம் மச்சான். கரைக்டா சொன்னா.. அவன் கரைக்ட் பண்ணி பழகட்டும் நாம பஜனை பண்ணிக்கலாம்” விக்கி சொல்ல
அவன் தலை பிடித்து முன் இருந்த முட்ட வைக்க அதே சமயம் அடுத்த வகுப்பு எடுக்க ஆள் வர அனைவரும் அமைதியானோம்.. வகுப்பு நடக்கும் போது அடிக்கடி விக்கி பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தேன்.
அவள் ஆள் யார் என தெரியாது. ஆனால் திருமணம் ஆனவள் என்பது நன்றாக தெரிந்தது. புரிந்தது. இருந்தாலும் அந்த குரலுக்காகவே அவளை காதலிக்கலாம் என தோன்றியது. காதலை ஏற்று கொள்ளவிட்டலும் பரவாயில்லை.
ஆனால் அந்த குரலை பக்கத்தில் இருந்து கேட்க வேண்டும் போலிருந்தது. முடிந்தால் என்னையும் அதைப் போல் கொஞ்சி என்னிடம் கெஞ்சி நான் செய்வதற்கு சிணுங்கினால் நன்றாக இருக்கும் என யோசித்து கொண்டு இருக்க அட்டன்டர் வகுப்பிற்குள் வந்து எதையோ சொல்ல வகுப்பு எடுக்கும் ஆசிரியை என் பெயரை சொல்லி அழைக்க சுயநினைவுக்கு வந்தேன்.
உன்னை தேடி வீட்டில் இருந்து உன் அம்மா வந்திருப்பதாக சொல்ல என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த நண்பர்கள் அனைவரும் ஒரு மாதிரி பார்க்க அவர்களுக்கு பதில் எதுவும் சொல்லாமல் வகுப்பை விட்டு யோசனையோடு வெளியே வந்தேன்..
இப்ப அந்த பெண்ணின் நினைவுகள் விலகி சென்று என் அம்மா எதற்காக காலேஜ்க்குள் அதுவும் முதல் நாளே வந்திருக்கிறாள் என்ற எண்ணம் வந்து தொற்றிக் கொண்டது. எதுவாக இருந்தாலும் காலையிலே வீட்டில் இருக்கும் போதே சொல்லிருப்பாள். ஆனால் அந்த மாதிரி எதுவும் இல்லை.
ஒரு வேளை எதாவது அசாம்பாவிதம் நடந்திருக்குமோ? இல்லை.. இல்லை.. அப்படி என்றால் அம்மா வந்து இருக்காமாட்டாள் குழப்பத்துடனே மனதை தேற்றிக் கொண்டு என் அம்மாவை தேடி பார்த்தேன். நான் பார்த்த வரையில் கண்ணில் அகப்படவில்லை.
பொறுமையை இழந்த நிலையில் அவருக்கு கால் செய்தேன்… ரீங் தான் போனது.. எடுக்கவில்லை.
எனக்கோ அந்த பெண்ணின் குரலை மீண்டும் கேட்போமா என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருக்க அம்மா வேறு காலேஜ்க்குள் ஏன் வந்தாள் என தெரியாமல் ஒரு குழப்பத்துடனே காலேஜ் சுற்றி வருவதினால் ஏற்பட்ட அசாதராணமான மனநிலை என் மனதை வாட்டி வதைத்து கொண்டிருந்தது. காலேஜ் கேட் வரை வந்து பார்த்துவிட்டேன். இன்னும் என் அம்மாவை பார்க்க முடியவில்லை..
மீண்டும் கால் செய்ய முதல் ரீங்கிலே எடுக்க
“எங்கம்மா இருக்க.. நீ வந்த பாதைய எல்லாம் வந்து பாத்திட்டேன்.. உன்ன காணோம்..?” கேட்க
“டே எல்லா பக்கமும் ஒரே மாதிரியே இருக்குடா.. நா எங்கன இருக்கேன் எனக்கே தெரியல” சொல்ல…
“சரியா போச்சு. அங்க யாராவது வந்தா கேண்டின்க்கு வர வழிய கேட்டு வந்து சேரு.. நானும் அங்க வந்திடுறேன்.”
“சரிடா.. நீ சொன்ன மாதிரியே அங்கையே நாங்க வந்திடுறோம்” சொல்லிவிட்டு காலை கட் பண்ணிவிட்டாள்..
எனக்கு மீண்டும் ஒரு குழப்பம் வந்து தொற்றிக் கொண்டது. நேற்று இரவிலிருந்து என் மீது சனியன் சம்மணம் போட்டு உட்காந்திருக்கிறான் என நானாக நினைத்துக் கொண்டேன். யாருக்கும் தெரியும்.. ஒரு வேளை அது உண்மையாக கூட இருக்கலாம்.
வரக்கூடிய சனியன் “உன்ன தேடி வரேன்.. முடிஞ்சா தப்பிச்சுக்கோ” சான்ஸ் குடுத்திட்டா வரும்… எனக்கு நானே புலம்பிக் கொண்டே காலேஜ் கேண்டின் பக்கம் வந்துவிட்டேன். ஆனால் என் அம்மா இன்னும் வந்து சேரவில்லை.
மீண்டும் என் அம்மாக்கு கால் பண்ண எடுக்கவில்லை.. சில நிமிடங்களுக்கு பின் தூரத்தில் வருவது தெரிய அங்கிருந்த மரத்தடியின் கீழ் இருந்த பென்சில் உட்காரந்தேன். என் அம்மாவுடன் ஒரு பெண்ணும் அம்மா வயதை ஒட்டிய பெண்மணியும் கூட வந்தார்கள். யாராக இருக்கும்..
அவர்கள் தூரத்தில் நடந்து வரும் போது பார்த்தேன். அவர்கள் யாரென்றே எனக்கு தெரியவில்லை. என் ஏரியாவில் கூட இவர்கள் இருவரையும் இதற்கு முன் பார்த்ததில்லை. என் அம்மாவுக்கு தெரிந்த நபராக இருக்கலாம் என நானாக நினைத்துக் கொண்டேன்.
அவர்கள் மூவரும் நான் உட்காந்திருக்கும் இடத்தை பார்த்து விட்டு என்னை நோக்கி வந்தனர்… என் அம்மா தான் முதலில் வந்து என் பெயரை சொல்லி மற்ற இருவரிடம் அறிமுகப்படுத்தினாள்.. என் அம்மாவுடன் வந்திருந்த பெண்மணி, கூட வந்த பெண்ணுடைய அம்மாவை போல் தெரிந்தது.
அந்த பெண்மணி என்னை பார்த்து புன்னகைத்து “நீ இங்க தான் படிக்கிறேன் அம்மா சொன்னாங்க. அதான்பா அம்மாவையும் துணைக்கு கூட்டிட்டு வர வேண்டியதா ஆகிடுச்சு.” சொல்ல
“அதுனால என்ன பரவாயில்ல..” என்றேன்..
சில வினாடி கழித்து..
“இது உங்கள் பொண்ணா.. இங்க புதுசா அட்மிஷன் போட வந்திருக்கிங்களா” கேட்டேன்…
“இதுவும் என் பொண்ணு தான்பா. ஆனா பெத்த பொண்ணு இல்லப்பா” சொல்லி குழப்ப..
அந்த பெண்மணி குழப்பத்துடன் பார்க்க அவர் அதை புரிந்துக் கொண்டு..
“இது என் மருமக.. இப்ப தான் என் மகனுக்கு கல்யாணம் ஆச்சு.. கல்யாணம் பண்றப்ப தொடர்ந்து படிப்பேன் சொல்லிடுச்சு.. நாங்களும் சரி சொல்லி படிப்பு செலவ ஏத்துக்கிறோம் சொல்லிட்டோம்.. முன்ன படிச்ச காலேஜ்ல இருந்து இங்க வந்து சேத்து விட வந்திருக்கோம்” அவரின் குடும்ப கதையை சொல்லி முடித்தார்.
அந்த பெண்ணை மேலிருந்து கீழ் வரை நாட்டம் விட்டேன். அப்போது காலின் விரலில் போட்டு இருந்த மெட்டியில் இருந்த சிறு சிறு சலங்கை சத்தம் காதில் கேட்டது.
சரி வாங்க போகலாம் சொல்ல.. அந்த பெண்ணை பார்த்து இங்க ஜாயின் பண்ணும்னா லெட்டர் எழுதி தர சொல்லுவாங்க.
“லெட்டர் எழுதிட்டியா?” கேட்க “இல்லை” என்பதை போல் தலையை ஆட்டினாள்.
“சரி எழுது.. அட்மிஷன் போட போலாம்..”
அதற்கும் அமைதியாக இருக்க…
“லெட்டர் எழுத தெரியுமா கேட்க..”
“தெரியாது” என தலையை ஆட்டினாள்..
சரி பேப்பர் குடு.. எழுதி தரேன் சொல்ல..
அதற்கும் தலையை குனிய என் அம்மாவை கொஞ்சம் முறைத்து பார்க்க புரிந்து கொண்ட என் அம்மா..
“சரி விடுடா.. பேப்பர் எங்க போய் வாங்கனும் சொல்லு நா கூட வாங்கி வந்து தரேன்..”
இங்க இரும்மா.. பேப்பர் வாங்கி வரேன் சொல்லிட்டு கேண்டின் உள்ளே இருந்த கடையில் ஏ4 சீட் வாங்கிட்டு வந்து லெட்டரை எழுதி குடுத்தேன். பெயரை தவிர அனைத்தையும் கேட்டு எழுதிவிட்டேன்.. கடைசியாக பெயரை கேட்ட போது அந்த பெண்ணின் மாமியார் தான் ‘தீப ஜோதி’ என்றார்.. அதையும் எழுதி கையெழுத்து போட சொல்லி அட்மிஷன் போடும் இடத்திற்கு அழைத்து சென்று எல்லா வேலையும் முடிக்க மதியம் ஆகிவிட்டது.. கடைசியாக அவளின் வகுப்பை காட்டி விட்டு நகரும் போது “தாங்கஸ் அண்ணா” என்றாள்..
தரிசனம் தொடர்ந்து கிடைக்கும்..
இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000