This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
ஒரு மணி நேரம் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த வருணின் அலைபேசி குறுந்செய்தி வர அலறியது கண்விழித்த வருண் அலைபேசியை கையில் எடுத்தான். சரஸ்வதியின் குறுந்செய்தி
சிராஸ்வதி : சிவா.. சிவபரசாத் ம் அவனை தெரியும். என் வகுப்பில் தான் இருந்தான். அவன் உன் கல்லூரியில் தானே படித்தான். அவனுக்கு தெரியும் அவன் கூட இறுதி சடங்குகளில் பங்கேற்றான்.அவன் சொல்ல வில்லையா உனக்கு.
வருண் : ஆமாம் அவனே தான். என்ன ஆயிற்று இவளவு நெரம் கழித்து பதில் அளிக்கிறாய்.
சரஸ்வதி : இரவு உணவனுக்கு பின் அம்மாவுடன் உரையாடி கொண்டு இருந்தேன். இப்பொழுதான் என் அறைக்கு வந்தேன்.
வருண்: அம்மாவுடன் ?? உனக்கு திருமணம் ஆகிடுச்சு இல்லையா அப்புறம் ஏன் அம்மாவீட்டில்??
சரஸ்வதி: திருமணம் அது ஒரு கேட்ட கனவு என் வாழக்கையை நிம்மதியை கொன்ற ஒன்று. தயவு செய்து அதை பற்றி மட்டும் என்னிடம் பேசாதே.
வருண்: உனக்கு ஆட்சேபனை இல்லை என்றல் என்னிடம் பகிரலாமே? உனக்கு சொல்ல கஷ்டமாக இருந்தால் விடு.
சரஸ்வதி : ஏன் வாழ்க்கையின் அவலம் என்னோடு போகட்டும். நீ சொல்லு அப்புறம் நீ யாரையும் விரும்ப வில்லையா இன்னும் திருமண செய்துகொள்ளாமல் இருக்கிறாய்?
வருண்: நீ வருவாய் என்று காத்திருந்தேன் அதற்கு பிறகு யாரையும் காதலிக்கவும் 1000 முறை யோசித்தேன் வந்த வாய்ப்புக்களை தவற விட்டேன்.
சரஸ்வதி : என்ன வந்த வாய்ப்பை தவற விட்டாயா? என்ன சொல்ல்கிறாய்?
வருண் : லாவண்யா கடைசி வரை நல்ல நட்பாக இருந்தால், நல்ல வேலை காய் நிறைய சம்பளம் என்று அமைந்தால் அவளை மணக்க வேண்டும் என்று ஆசை பட்டேன். ஆனால் நான் கொடுத்துவைக்க வில்லை. அவளுக்கு நான் அவளை காதலித்தது தெரியுமா தெரியாதா என்று கூட எனக்கு தெரியாது
சரஸ்வதி: என் சொல்ல வில்லை வருண் நீ நல்ல மணிதான் உன்னை மனம் முடிக்க அவள் கொடுத்து வைத்து இருக்கவேண்டும். அவளுக்கு திருமணம் ஆகிற்றா?? நான் வேண்டுமானால் அவளிடம் பேசி பார்கவா?
வருண்: நீ கிடைக்க வில்லை என்ற வலியால் எங்கு இன்னொரு முறை இதயம் வலிக்குமோ என்று நான் அவளிடம் சொல்லாமலே இருந்து விட்டேன். அது மற்றும் இல்லாமல் லாவண்யாவுக்கு நம் காதல் பற்றி நன்றாக தெரியும்.
சரஸ்வதி : உன் வாழ்க்கையும் என்னால் அழிந்தது என்று கேட்கும் பொது எனக்கு இன்னும் வருத்தமாக இருக்கு வருண். குற்ற உணர்ச்சி அதிகரிக்காது.
வருண்: அதெல்லாம் ஒன்றும் இல்லை ஏன் வாழ்க்கை இப்பட்டி இருக்க நான் உன்னை குறை சொல்ல விரும்ப வில்லை.
சரஸ்வதி: உன்னை போல ஒருவனை இழந்தது என் விதி என்று தான் சொல்ல வேண்டும்.
வருண்: அவரவர் விதியை குறை சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்த்துக்கொண்டு செல்ல வேண்டியது தான். இன்றைக்கு உள்ள நிலை, என் அம்மா தங்கையின் பொறுப்பில் என் வழக்கை போகிறது அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுவேய என் முடிவு.
சரஸ்வதி : நான் உன்னிடம் அன்று பேசியபோது காதல் வேண்டாம் என்று கூறியதற்கு நீ எறும்பு ஊற ஊற கல்லும் கரையும் என்று பிடிவாதமாக இருந்ததை நான் லேசாக எண்ணியது என் தவறு தான். என்னை மன்னித்து விடு வருண். உன் காதலை மதிக்காமல் போன எனக்கு கடவுள் நல்ல தண்டனை கொடுத்துவிட்டான்.
வருண்: நான் ஒருபொழுதும் உனக்கு கஷ்டம் வர வேண்டும் என்று நினைத்தது இல்லை. நீ வறுத்த படாதே அனைத்தும் ஒரு நன்மைக்கே.
மீண்டும் ஒரு நீண்ட இடைவேளை சரஸ்வதியிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராமல் இருக்க வருண்: மன்னிப்பு நான் தான் கேட்க வேண்டும் நீ உன் வழக்கை பழகிவிட்டது என்று கூறுகையில் ஏன் சோகத்தையும் உன் மீது சுமத்தியது ஏன் தவறு தான். நீ வறுத்த படாதே..
என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் காத்திருந்து மேலும் பதில் கிடைக்காமல் இருக்க சரஸ்வதியை காய படுத்திவிட்டோமோ என்ற வருத்தத்துடன் மீண்டும் உறங்க முயற்சிதான்.
தனது 16து பிறந்தநாள் அன்று சரஸ்வதி வீட்டருகில் உள்ள முருகன் கோவிலில் அவளை சந்தித்தது அவளுக்கு டைரி மில்க் சாக்லேட் வாங்கி தந்தது. அவளுடைய புகைப்படம் வாங்கியது என்று சரஸ்வதியுடனான அணைத்து ஞாபகங்களும் வது சென்றன. சிவா சரஸ்வதியின் கர்பம் பற்றி சொன்னதும் ஞாபகம் வந்தது அனால் அவன் அதை பற்றி பேசி சரஸ்வதியை மேலும் காய படுத்த விரும்பவில்லை. மீண்டும் முதல் காதலுடன் நடந்த உரையாடல் இனிக்க உறங்கினான் வருண்
மணி 6:30இருக்கும் பேருந்து வருணின் ஊரான திருச்சியை அடைந்தது. 6:45 கு வருண் தனது இல்லத்தில் இருந்தான். பயண களைப்பில் இருந்த வருண் தனது அறையில் சென்று உறங்கினான். 8:30 மணி போல விழித்தெழுந்த வருணின் முன் அவன் தங்கை இருந்தால். காயத்ரி : என்ன அண்ணா களைப்பாக இருக்கிறாய் பேருந்தில் உறக்கம் வரவில்லையா. வருண்: இல்லப்பா சாலை சரியில்லை பேருந்து குளிங்கியதில் சரியாக தூக்கம் வரவில்லை வருணின் அலைபேசி ஒலித்தது சரஸ்வதியின் குறுந்செய்தி வந்திருந்தது காயத்ரி அவன் அலைபேசியை எடுத்து பார்க்க அதில் சரஸ்வதியின் பெயரை பார்த்ததும் சட்டென்று அவளுக்கு கோவம் வந்தது. காயத்ரி : இது அந்த பள்ளி காலத்து சரஸ்வதியா? வருண் ஆம் என்று தலை ஆட்ட காயத்ரி: உங்களுக்குள் மீண்டும் தொடர்பு தொடங்கி விட்டதா? இது எப்பொழுதிலிருந்து? வருண்: நேரத்து சாயங்காலம் நான் கெளம்பி கொண்டு இருக்க 3-4 மாதங்களுக்கு முன்பு நான் அனுப்பிய முகப்புத்தக மெசேஜ்கு அவள் பதில் அனுப்பினதிலிருந்து. காயத்ரி: அண்ணா நீ நினைக்குற மாதிரி அவள் ஒன்றும் நல்லவள் இல்லை அவளை பற்றி ஊருக்குள் பேச்சு சரியில்லை. நீ அவளை தவிர்ப்பது உனக்கு நல்லது. வருண்: ஊருக்குள் பேசுவது எனக்கு தெரியாது நீ நினைப்பது போல தொடர்பு ஏதும் இல்லை. காயத்ரி: அப்படியேதும் இல்லை என்பதே அனைவருக்கும் நல்லது காயத்ரி தொடர்ந்து பேசாமல் வருணின் அறையை விட்டு நகர்ந்தாள் வருண் சரஸ்வதிக்கு பதில் அளிக்க அலைபேசியை கையில் எடுத்தான்.
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000