This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
அத்தியாயம் 5:
சந்தியா அருணை எப்படி மாற்றுவது என்பதனை யோசித்துக் கொண்டே, அம்மாவிடம் கேட்கலாம் என்று அவளிடம் போனாள். அவளிடம் போனாலும் எப்படி சப்ஜெக்ட் ஆரம்பிப்பது என்று தெரியாமல் விழித்தாள். அருணை விட்டுத்தரவும் மனமில்லாமல் விழி பிதுங்கி நின்றாள்.
மாலதி : என்ன டி.. ஏதோ பேசவந்துட்டு பேசாம முழித்துக்கிட்டு நிக்கர… என்ன அருண் கிட்ட பேசினையா? ஏன் காலையில் இருந்து மூட் அப்சட்டா இருந்தானாமா?
சந்தியா : அது ஒன்னும் இல்லமா, அவன் கூட காலைல நான் கோபப்பட்டுடேன் அதுனால தான் மூட் அப்சட், இப்போ ஓகே ஆகிட்டான்.
மாலதி : என்னடி அவன் என்னவிட உன்கிட்ட தான கிளோஷ் ஆ இருப்பான். நீ தானே பார்த்துக்கனும். அவன எதுவும் சொல்லாத டி.. எதாவதுனா என்கிட்ட சொல்லு நான் நாசுக்கா பேசிக்கிறேன். ஓகே வா..
சந்தியா : இனி மேல் அப்படி எதுவும் நடக்காது மா, நான் பார்த்துக்கிறேன். சரி மா, உன்கிட்ட கொஞ்சம் பேசனும். நீ பிரியா மா..
மாலதி : ம்ம்.. சொல்லு டி..
சந்தியா : உன் மாரேஜ் லைப் பத்தி பேசனும் மா.. நீங்க எப்படி லவ் பண்ணினீங்க, உங்க மாரேஜ் லைப் எப்படி போச்சுனு எல்லாமே தெரிந்துக்கனும் மா?
மாலதி : அது தான் ஏற்கனவே தெரியும் தானே.
சந்தியா : டீடெய்ட் டா தெரிந்துக்கனும் மா. முதலில் கேட்கும் போது, சும்மா மேலோட்டமா சொல்லீட்டு, இன்னும் நீ பெரிதாகல அப்படி இப்படினு சொல்லியே வளர்த்தீட்டீங்க. இப்போ நான் பெரிதும் ஆயீட்டேன். திருமணத்திற்கு மாப்பிளையும் பார்க்க ஆரம்பிட்டீங்க. சோ இதுக்கு மேல மறைக்காம எல்லாமே சொல்லுங்க இது என் லைப்கும் ரொம்ப ஹெல்ப் புல்லா இருக்கும்.
மாலதி : சரி டி… ஒரு 30 நிமிடம் வெய்ட் பண்ணு நைட்க்கு வேண்டுங்கிறத ரெடி பண்ணீட்டு அப்புறம் பிரீயா பேசலாம்.
சந்தியா : அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மா. அருணை கடைல வாங்கி வர சொல்லிக்கலாம். இப்போவே வந்து சொல்லுங்க. அப்புறம் அப்பா வந்துட்டா பேச முடியாது. (என்று சொல்லிக் கொண்டே மாலதியின் ரூமிற்கு அழைத்துச் சென்றாள். மாலதியும் இருடி கொஞ்சம் நு கதவை தாழ்பாள் போட்டுவிட்டு வந்தாள்)
சந்தியா : என்னமா இது புது பலக்கமா இருக்கு..
மாலதி : வயசுக்கு வந்த பிள்ளைங்க இருக்கறாங்க டீ. இப்போ இத ஒன்னும் அவங்க தெரிந்துக்க வேண்டாம்.
சந்தியா : அப்போ எல்லாமே சொல்லி தர போரீங்கலா…
மாலதி : கள்ளி.. ஆசைய பாரு.. நான் தானே உனக்கு சொல்லித்தரனும். ம்ம்.. தெரிந்துக்கோ..
என்று சொல்லிவிட்டு தன் வாழ்க்கை கதையை சொல்ல தயாரானாள். இருவரும் கட்டிலில் உட்கார்ந்து கொள்ள, சந்தியா மாலதியின் மடியில் படுத்துக் கொண்டு கவனிக்க தயாரானாள்.
மாலதி தன் கதையினை சொல்ல தொடங்குகிறாள்.
மாலதி : உங்க அப்பாவும் நானும் எப்படி கல்யாணம் கட்டிகிட்டோம் தெரியுமா?
சந்தியா : அம்மா, நீயும், அப்பாவும் காதல் திருமணம் தானே.. யாரு முதல்ல காதல சொன்னது. எதுக்கு ஊர விட்டு ஓடி கல்யாணம் பண்ணிகிட்டீங்க…
மாலதி : ம்.. சொல்லரேன்….. நம்ம கிராமத்தில் ஒன்றிய ஊராட்சிப் நடுநிலைப் பள்ளி தான் இருந்தது.
சந்தியா : இப்போ 12 வகுப்பு வரை இருக்குதுல மா?
மாலதி : அது இப்போ டி.. நான் சொல்றது எங்க காலத்துல… இப்படி இடையில இடையில கேள்வி கேட்டுகிட்டே இருந்தா அப்புறம் இப்போதைக்கு சொல்லவே முடியாது.
சந்தியா : சரி மா.. நீங்க சொலுங்க நான் பேசல…..
27 வருடங்களுக்கு முன்பு,
பூஞ்சோலை என்ற அழகிய கிராமத்தில் கதை தொடங்குகிறது.
உயர் நிலை கல்வி படிக்க வேண்டும் என்றால், பஸ் பிடித்து பொள்ளாச்சிக்கு தான் வரனும். நம்ப ஊருல இருந்து அப்போ, காலையில் 8.15 மணிக்கு ஒரு பஸ்ஸிம் அது விட்டா 8.40 மணிக்கு ஒரு பஸ்ஸிம் தான் வரும். நானும் உங்க அப்பாவும் 8.15 மணி பஸ்ஸில் கிழப்பிடுவோம். அப்போ நான் 9 வது படித்துகிட்டு இருந்தேன். உங்க அப்பா 10 வது படித்துகிட்டு இருந்தாரு.
8.40 மணி பஸ்ஸில் போனால் ஸ்கூலிற்கு லேட்டாகிடும். நம்ப ஊர் பக்கத்து கிராமத்தில் இருந்து மாலதி என்ற பெண் 10 வது படிக்க வந்து கொண்டிருந்தாள். ஆனால், அவள் உன் அப்பா வகுப்பு இல்லை. அவள் எப்போதுமே லேட்டாக தான் பள்ளிக்கு வருவா. அவளுக்கென்று பள்ளியில் ஒரு பெரிய கேங்கே இருந்தது. அவள் அப்பாவை காதலித்தாள். ஆனால், அதனை அப்பாகிட்ட சொல்ல தயக்கம். அதனால, அவ கேங் மூலமா, அந்த பள்ளிக்கே பரப்ப ஆரம்பித்தாள். இதனால அப்பாவிற்கு ஒரே கோபம்.
எவனே தெரியாம என் பேர பள்ளி முழுவதும் பரப்பீட்டு இருக்கரா.. அவளை பிடித்து மிதிக்கனும் நு ஸ்கூல் முழுவதும் தேடிட்டு இருந்தவர், சரியா என்கிட்ட வந்து, உன் பேரென்ன என்று கேட்டார். நான் மாலதி என்று சொன்னதும், பேசாமல் போய்விட்டார். அவரிடமிருந்த கோபம், அந்த நொடிப்பொழுதே மறைந்து காணாமல் போய்விட்டது. அடுத்த நாள் முதல், பஸ்ஸில் என் அருகில் வந்து அமர்ந்து கொள்வார். பாடத்தை பற்றி பேசுவார். குடும்ப விசையங்களை பேசுவார். நல்லவர் என்ற எண்ணம் எனக்கு தலை தூக்கி அவர் மீது பாசம் அதிகமானது. ஆனால், அது கண்டிப்பாக காதல் என்று சொல்லிவிட முடியாது. எங்களின் நட்பு வளர்ந்தது. நானும், உன் அப்பாவும் நட்பாக பழகிவருகிறோம் என்று ஊர் முழுவதும் பரவ தொடங்கியது.
அப்போது உன் அத்தை, அது தான் உன் அப்பாவோட அக்கா சுந்தரி என்னுடன் பழக்கமாக ஆரம்பித்தார். என்னை விட பெரிய பெண் என்பதால் ஒரு மரியாதை இருந்தது. இருந்தாலும், அவளை வா டி, போ டி என்று தான் கூப்பிட சொன்னாள். நானும் அப்படியே பழகி அன்னியோன்யம் ஆனோம். பள்ளியில் நடந்த அனைத்து விசையங்களையும் அவளிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். இப்படி எங்கள் உறவு வளர்ந்தது. இது அரசல் புரசலாக பள்ளியில் தெரிய வர 10 ம் வகுப்பு மாலதிக்கு கோபம் அதிகமானது. அதனை பொருத்துக் கொள்ள முடியாமல், அவள் கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்கு மாணிக்கம் தான் காரணம் என்றும் பரப்பிவிட்டாள்.
மாலதி கர்ப்பமாக இருக்கிறாள், அதனை அவளே ஒத்துக்கிட்டாள், அதற்கு மாணிக்கம் தான் காரணம் என்று எங்கள் ஊரில் பேச ஆரம்பித்தார்கள். நானும் உங்க அப்பாவும் நன்றாக பேசி பழகுவதாலும், அவருடைய அக்காவிடம் நான் பேச உன் அப்பா வீட்டிற்கு அடிகடி போய்ட்டு வருவதாலும், எங்க வீட்டில் ஒரு பிரளையமே வெடித்தது. நான் என்ன கூறியும் வீட்டில் நம்புவதாக இல்லை. அது கிராமம் என்பதாலும் அனைவரும் ஏதாவது ஒரு முறையில் சொந்தம் என்பதாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக பேச ஆரம்பித்தார்கள். எனக்கு இதனை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. பேசாமல் கிணத்தில் விழுந்து செத்து விடலாம் என்று போய் குதிக்க, அந்த வழியாக வந்த உன் அப்பா, என்னை காப்பத்தினார்.
நடந்த விசையங்கள் அனைத்தையும் உன் அப்பாவிடம் சொல்ல அப்பொழுது தான் அவருக்கே தெரிந்தது, நாம் தேடிட்டு இருந்தது அந்த இராட்சசி மாலதி என்று. சரி நான் வந்து உன் வீட்டில் பேசறேன் வா என்று என்னை நனைந்த துணியுடன் கூப்பிட்டு கொண்டு என் வீட்டிற்கு சென்றார். போகும் போதே பக்கத்தில் இருந்தவர்கள் ஒரு மாதிரி பேச, எங்கள் வீட்டில் இன்னும் கோபம் அதிகமாகி என்னையும், உன் அப்பாவையும் வீட்டிற்குள்ளையே அனுமதிக்காமல் வெளியில் வைத்தே அடித்து விட்டார்கள்.
எனக்காக உன் அப்பா தேவையில்லாமல் அடி வாங்குவதை பொருத்துக் கொள்ள முடியாமல், எங்க வீட்டை எதிர்த்து பேச, என் துணியெல்லாதையும் எடுத்து கொண்டு வந்து வெளியே வீசிவிட்டு செத்தாலும் எங்க மூஞ்சியில் முழிக்காதேனு சொல்லி துரத்தி விட்டு விட்டார்கள். நான் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, உன் அப்பா தான் என்னை அவர் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு சென்றார்.
இந்த விசையம் அதற்குள்ளாக உங்க தாத்தா பாட்டிக்கு தெரிய, அங்கும் பெரிய கலவரமே நடந்தது. ஆனால், உன் அத்தை தான் எங்களுக்காக கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் பேசிக் கொண்டிருந்தாள். இருந்தாலும் கடைசியில் வீட்டை விட்டு அனுப்பி விட்டார்கள். என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்கும் போது தான், உன் அப்பாவின் நன்பர் குமார் தான் எங்களுக்கு உதவி செய்து கொஞ்ச நாளைக்கு சென்னையில் உள்ள என் அத்தை வீட்டில் சென்று தங்கி கொள்ளுங்கள். இங்கு அனைவரும் புரிந்து கொண்டதும் திரும்ப கூப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.
சரி என்று நாங்கள் பஸ்ஸில் ஏறி கோவை வந்து சேர்ந்தோம். அப்பொழுது மாலை 5.30 இருக்கும். அங்கிருந்து இரவு தான் ரயில். சரி அதற்கு டிக்கெட் புக் பண்ணலாம் என்று வரிசையில் நிற்கும் போது எனக்கு ஒரு ஆசை. இதுவரை ஏ.சி கோச்சில் பயணம் செய்ததில்லை என்பதால் அதற்கு புக் பண்ண சொன்னேன். அவரும் எனக்கும் ஆசையாக தான் இருக்கிறது என்று சொல்லி புக் பண்ணினார். இரவு 10 மணிக்கு இரயில் கிழம்பி 7.30 மணிக்கு இரயில் சென்னையை சென்று சேரும் என்றார்கள். சரி அதற்குள் இரவிற்கு வேண்டிய சாப்பாடெல்லாம் வாங்கிக் கொண்டு, ஒரு புது அனுபவத்திற்காக இரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தோம்.
இரயில் இரவு 8 மணிக்கெல்லாம் வந்துவிட்டது. கோவையிலிருந்து தான் கிளம்பும் என்பதால் நேரத்திலேயே வந்துவிட்டதாக அங்கு இருப்பவர்கள் பேசிக் கொண்டார்கள். முதல் முறையாக ஏ.சி கம்பார்ட்மென்டில் பயணம் செய்வதால் இருவருக்குமே ஒரு எதிர்பார்ப்பு, சந்தோஷம். வேக வேகமாக ஓடிச் சென்று கம்பார்ட்மென்டை பார்த்து ஏறினோம்.
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000